பானுக்க ராஜபக்ஷ ஓய்வு இரத்து

இராஜிணாவை திரும்பெற்றுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் சபை தெரிவிப்பு.

பானுக்க ராஜபக்ஷ ஓய்வு இரத்து

ஶ்ரீலங்கா கிரிக்கட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான பானுக  கடந்த சில தினங்களுக்கு முன்னர் அணியிலிருந்து தாமாக விலகிக் கொள்வதாக கிரிக்கட் சபையில் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். 

கடந்த 2019 ஆம் வருடம் பாக்கிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற ரி-20 போட்டியில் அறிமுகமான இவர். ஶ்ரீலங்கா அணிக்காக 5 ஒருநாள் போட்களிலும் 18 ரி-20 ஆட்டங்களிலும் பங்கு பற்றி இருந்தார். 

30 வயது மாத்திரமே நிரம்பிய இளம் கிரிக்கட் வீரரான இவர் அணியிலிருந்து ஓய்வு அறிவித்தது, ஶ்ரீலங்கா கிரிக்கட் அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இவரின் ஓய்வு குறித்து ஆராய்ந்த கிரிக்கட் சபை விளையாட்டு அமைச்சரின் ஆலோசனையின் படி பானுகவை அழைத்து பேசிய தோடு அவரின் ஓய்வு அறிவித்தலை இரத்து செய்வதற்கு பானுகவின் சம்மத கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் , ஶ்ரீலங்கா கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.