குழந்தைகள் பெற்றோரிடம் பொய் சொல்ல தூண்டுவது எது..? உளவியல் காரணங்கள்..!

பொதுவாக குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுவதற்கு முன்பு குறிப்பாக 2 முதல் 4 வயது வயத்திற்குள் பொய்களை சொல்லத் தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் பெற்றோரிடம் பொய் சொல்ல தூண்டுவது எது..? உளவியல் காரணங்கள்..!

குழந்தை பருவத்தில் பொய்களை கூறுவது சாதாரணமானதாகவே கருதப்படுகிறது. ஆனால் ஒரு சில குழந்தைகளை எதெற்கெடுத்தாலும் பொய்களை கூறி கொண்டே இருப்பார்கள். இது மாதிரியான குழந்தைகளை நினைத்து அவர்களின் பெற்றோர் மிகவும் வருந்தி இறுதியில் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. ஆனால் குழந்தைகள் மற்றவர்களிடமும், அவர்களின் உணர்வுகளிலும், ஆசைகளிலும் விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வதை அவர்கள் கூறும் பொய்கள் குறிப்பதாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுவதற்கு முன்பு குறிப்பாக 2 முதல் 4 வயது வயத்திற்குள் பொய்களை சொல்லத் தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளின் பொய்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள், சில நேரங்களில் அவர்களின் பொய்கள் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடாக அமைகிறது. அவர்கள் கூறும் சில வகை பொய்களை கூர்ந்து கவனித்தால் அவர்களின் நரம்பியல் வளர்ச்சி, சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் உள்வாங்கல், உணர்ச்சி நிலை உள்ளிட்டவை நமக்கு புரியும் என்று குறிப்பிடுகின்றனர்.

சில நேரங்களில் குழந்தைகள் தங்கள் பொய்களை கற்பனை கலந்து ஒரு விரிவான கதையை சொல்வதற்கு பல காரணங்கள் உள்ளன. எனினும் பெரும்பாலும் குழந்தைகள் வேண்டுமென்றே பொய் சொல்வது இல்லை. குழந்தைகள் என்ன மாதிரியான சந்தர்பங்களில் பொய்களை சொல்ல நேரிடுகிறது என்பதற்கான சில காரணங்களை இங்கே பார்க்கலாம்.

தண்டனைகளில் இருந்து தப்பிக்க

பெரும்பாலும் குழந்தைகள் அதிகம் பொய் சொல்வது இதற்காக தான் இருக்கும். ஏதுனும் குறும்புத்தனத்தில் ஈடுபட்டு விட்டு அதன் காரணமாக ஏதேனும் தவறு நிகழும் போது எங்கே பெற்றோர்கள் நம்மை தண்டித்து விடுவார்களோ என்ற பயம் காரணமாக பொய்களை சொல்வர். அடி வாங்குவது அல்லது பிற தண்டனை மூலம் தாங்கள் கஷ்டப்படுவதை தவிர்க்க குழந்தைகள் கொஞ்சம் பொய் சொல்வதை பெற்றோர்கள் பொருட்படுத்த வேண்டாம். குழந்தைகள் தாங்கள் சிக்கலில் சிக்குவதை விரும்புவதில்லை, எனவே அதை தவிர்க்க அவர்கள் அந்த நேரத்தில் பொய் சொல்வது உட்பட எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

குழந்தைகள் வளரவளர ஆடைகள் சின்னதாகிட்டே போகுதா..? பழைய துணிகளை மீண்டும் பயன்படுத்த அருமையான யோசனை..!

 

பயமும் காரணம்

குழந்தைகளுக்கு ஏற்படும் பயம் அல்லது தங்களை அவமானப்படுத்தி விடுவார்களோ என்ற எண்ணமும் சில நேரங்களில் பெற்றோர்களிடம் அவர்கள் உண்மையை சொல்ல விடாமல் செய்து விடும். கண்டிப்பான சூழலில் வளரும் குழந்தைகள், சற்று இயல்பான சூழலில் வளரும் குழந்தைகளை விட அதிகம் பொய் பேசுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. பெற்றோர் மீது உள்ள பயத்தினால் பொய் பேசும் கட்டாயத்திற்கு குழந்தைகள் உள்ளாவதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

எதையாவது விரும்பும் போது

குழந்தைகள் பெற்றோரிடமிருந்து ஏதாவது விரும்புகிறார்கள் என்னும் போது அல்லது அவர்கள் கேட்கப் போவதை பெற்றோர்கள் வாங்கி தர நீங்கள் மறுப்பார்கள் என்று குழந்தைகள் உணரும் போது, தாங்கள் நினைத்ததை பெற பொய் கலந்த தவறான கதையை கூறுவர்.

வேடிக்கையாக

சில நேரங்களில் குழந்தைகள் பொய்களை சொல்வதை மகிழ்ச்சியான வேடிக்கைக்காக செய்கிறார்கள. அவர்கள் தங்கள் கதைகளால் தங்கள் நண்பர்களைக் கவர உண்மையை அல்லது பொய்யை கற்பனை காலத்து பெரிதாக பேசுவர். சில சம்யங்களில் பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் தங்கள் பாதுகாப்பின்மையை மறைத்து, தங்களின் சுயமரியாதையை உயர்த்த பொய் சொல்கிறார்கள்.

பொய்யான ஒரு சம்பவத்தின் மூலம் தங்களை ஒரு சிறந்த நபராக காட்டி கொள்ள முயற்சி செய்வார்கள். நண்பர்களை பார்த்து நாமும் அவர்களை போல இருக்க வேண்டும் என்று நினைத்து சில குழந்தைகள் பொய் சொல்வதில் ஈடுபாடு காட்டலாம். அவர்கள் யாரோடு பழகுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். சிறிய குழந்தைகள் அல்லது சிறப்பு குழந்தைகள் (special toddlers ) சிலர் தங்கள் பேசுவது பொய் என்று கூட தெரியாமல் போகலாம். பொய் என்றால் என்ன அதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை உணரும் நிலையில் அவர்கள் இல்லாதாது இதற்கு காரணம்.