கொரோனாவால் உயிரிழந்த 67 பேரின் முழு விபரங்கள்!

நாடாளவிய கொரோணா மரணங்களின் தொகுப்பு

கொரோனாவால் உயிரிழந்த 67 பேரின் முழு விபரங்கள்!

இன்று 2021 ஜூன் 09 ஆம் திகதி கொவிட் 19 தொற்று மரணங்கள் இதுவரை பதிவாகவில்லை. மே 17 ஆம் திகதி தொடக்கம் மே 31 ஆம் திகதி வரை இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை - 19 ஆகும்.

ஜூன் 01 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 08 ஆம் திகதி வரை இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை - 48 ஆகும்.

மே 17 - 03 மரணங்கள்
மே 19 - 02 மரணங்கள்
மே 20 - 03 மரணங்கள்
மே 21 - 01 மரணம்
மே 22 - 04 மரணங்கள்
மே 23 - 01 மரணம்
மே 24 - 01 மரணம்
மே 26 - 01 மரணம்
மே 27 - 01 மரணம்
மே 31 - 02 மரணங்கள்
ஜூன் 01 - 02 மரணங்கள்
ஜூன் 02 - 05 மரணங்கள்
ஜூன் 03 - 05 மரணங்கள்
ஜூன் 04 - 05 மரணங்கள்
ஜூன் 05 - 10 மரணங்கள்
ஜூன் 06 - 09 மரணங்கள்
ஜூன் 07 - 08 மரணங்கள்
ஜூன் 08 - 04 மரணங்கள்

இன்று இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின் மரணங்களின் எண்ணிக்கை - 1,910 உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்

பால் - பெண்கள் - 24, ஆண்கள் - 43

வதிவிடப் பிரதேசம் - கொழும்பு-15, வத்தளை, வெல்லம்பிட்டி, அவிசாவளை, நீர்கொழும்பு, வாழைச்சேனை, கொழும்பு - 14, கொட்டாஞ்சேனை, துலங்கடவல, மீகம, வெலிசறை, பண்டாரகம, காலி, பூஜாபிட்டிய, கம்பளை, அம்பேபுஸ்ஸ, தெனியாய, பொகவந்தலாவை, பரகடுவ, தெடிகமுவ, வெல்லவாய, ஹெம்மாத்தகம, கனேமுல்ல, கோனவல, ஏக்கல, பரந்தன், கரந்தெனிய, மொரட்டுவை, வாத்துவ, மடபாத்த, அலுபொமுல்ல, பிலியந்தல, மாத்தளை, ஏறாவூர், வத்தேகம, பலாங்கொடை, களனி, ஹோமாகம, கட்டுனேரிய, கம்பஹா, புஸ்ஸல்லாவை, வெலம்பட, கெங்கல்ல, கட்டுகஸ்தோட்டை, கண்டி, கொழும்பு-07, நுவரெலியா, கலகெதர, களுத்துறை, கொழும்பு-10, அம்பாறை, பசறை, மாத்தறை, மாரவில, களுத்துறை தெற்கு, தெஹிவளை மற்றும் கின்தோட்டை.

அவர்களின் வயதெல்லை
வயது 20 இற்கு கீழ் - 01
வயது 20 - 29 - 02
வயது 30 - 39 - 01
வயது 40 - 49 - 03
வயது 50 - 59 - 05
வயது 60 - 69 - 16
வயது 70 - 79 - 19
வயது 80 - 89 - 18
வயது 90 - 99 - 02
வயது 99 இற்கு மேல் - 00

உயிரிழந்த இடங்கள்

வீட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 06
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தவர்கள் - 05
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் - 56

உயிரிழந்தமைக்கான காரணங்கள்

கொவிட் தொற்றுடன் கொவிட் நிமோனியா, மூளையில் ஏற்பட்ட குருதிக் கசிவு உயர் குருதியழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு, மூளை நோய், இதயநோய், சுவாசக் கோளாறு, சிறுநீரகம் மோசமாகப் பாதிக்கப்பட்டமை, பல தொகுதிகள் செயலிழந்தமை, மாரடைப்பு, நாட்பட்ட நுரையீரல் நோய், மோசமான சுவாசக் கோளாறு, புற்றுநோய், குருதியுறைதல், பக்கவாதம், நாட்பட்ட சிறுநீரக நோய், மூச்சிழுப்பு, டிஸ்லிப்பிடேமியா, நீரிழிவு, குருதி நஞ்சானமை, ஹசிமோடோஸ் நோய் மற்றும் நுரையீரல் நோய் போன்ற நிலைமைகள்.

உடனுக்குடன் தமிழில் எமது செய்திகளை உங்கள் whats app மூலம் அறிந்து கொள்ள எமது உத்தியோகபூர்வ whats app குழுவில் இணைந்து கொள்ளுங்கள். இணைப்பு இதோ--->>>AK Tamil Whats App Group