சுஜாதாவின் நாவல்கள் - என் இனிய இயந்திரா En iniya enthira free pdf

சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா pdf வடிவில் இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும்

சுஜாதாவின் நாவல்கள் - என் இனிய இயந்திரா En iniya enthira free pdf

சுஜாதா

சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, கட்டுரை, தொலைக்காட்சி, இணையம், திரைப்படம் என்று கால் பதித்த அனைத்துத் துறைகளிலும் தனது அழுத்தமான, தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் சுஜாதா (1935-2008). ஆண்டாள் முதல் அறிவியல் வரை எதையும் புதுமையாகவும் வசீகரிக்கக்கூடிய வகையிலும் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றவை இவருடைய எழுத்துகள். சுஜாதாவின் விரிவான வாசிப்பும் அதற்கு ஒரு வகையில் காரணம். அறிவியலை பொது வாசகர்களிடம் கொண்டுசென்று சேர்த்ததில் இவருடைய பங்களிப்பு முக்கியமானது. முற்றிலும் புதிய முறையில் பத்தி எழுத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. கணையாழியின் கடைசிப் பக்கங்கள், கற்றதும் பெற்றதும் ஆகியவை அதற்கான சான்றுகள். நைலான் கயிறு, கரையெல்லாம் செண்பகப்பூ. பிரிவோம் சந்திப்போம், என் இனிய இயந்திரா, ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று சுஜாதாவின் படைப்புகள் நூற்றுக்கணக்கில் நீண்டாலும் ஒவ்வொன்றுக்கும் உலகம் முழுக்க வாசகர்கள் நிறைந்திருக்கிறார்கள். உலக சினிமா, சங்க இலக்கியம், ஹைக்கூ, அறிவியல் புனைக்கதை, ஜீனோம், கணிப்பொறியியல், நாட்டார் வழக்கியல், இசை என்று தமிழ் வாசிப்புலகை வளப்படுத்தியதிலும் விரிவுபடுத்தியதிலும் சுஜாதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. சுஜாதாவின் வாசகர் உலகம் ஆச்சரியமூட்டும் வகையில் தினம் தினம் வளர்ந்துகொண்டே செல்வது நமக்கு உணர்த்தும் செய்தி ஒன்றுதான். சுஜாதாவுக்கு மரணமில்லை.

அத்தியாயம்-1

டிசம்பர் 31, கிபி 2021

புத்தாண்டை எதிர்நோக்கி வானம் வெளிச்சத்தில் ஆரவாரித்துக் கொண்டிருந்தது. தெருக்களில் மக்கள் அனுமதிக்கப்பட்ட மகிழ்ச்சியில் உற்சாகமாக ஊடாடிக்கொண்டிருந்தார்கள்.

நிலாவுக்கு உள்ளமெல்லாம் பதறியது. காரணம், அவள் மார்பில் பத்திரப்படுத்தியிருந்த அரசாங்கக் கடிதத்திலிருந்து அனுமதி

நிலா-சிபி

107836-11343

உங்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பெயர் மணி... இந்த அனுமதிப் பத்திரம் 2022-ம்

ஆண்டு ஜூன் இருபத்தைந்து வரை செல்லும். அதற்குள் கர்ப்பம் ஏற்படவில்லையெனில் ஒரே ஒரு முறை அனுமதி நீட்டிக்கப்படுவதற்கு அரசின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுப் பிரிவில் 'Q' பகுதியில் விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும். கர்ப்பம் பெண் குழந்தை என்று தெரிந்தால் உடனே ம.க. பிரிவின்'D' பகுதிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மீறினால்

குற்றம்.

ஒப்பம் ஆர்.எம்.

இந்திய அரசு மக்கட் பிரிவுக்காக

நிலா தன் மார்பைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள். இன்னும் சிபிக்கு தெரியாது. புத்தாண்டுப் பரிசு. ஒரு குட்டி சிபியின் சலனம். கர்ப்பம் ஜூன் வரை எதற்கு? இன்றிரவே...இன்றிரவே!

வழியெல்லாம் உற்சாக மக்கள் தத்தம் ஒரே ஒரு குழந்தைகளை இழுத்துக்கொண்டு அனுமதித்த அளவுக்குச் சந்தோஷமாக இருந்தார்கள். ஜன்னல்களின் வழியாக பென்ஷன் இல்லங்களில் கிழவர்கள் பொக்கையாகச் சிரித்தார்கள். அமைதியாக இறந்துபோகக் காத்திருந்தார்கள்.

நிலா

பழவந்தாங்கல் கூண்டிலேயே டிக்கெட் வாங்கிக் கொள்ளும்போது இயந்திரம்

'உங்கள் எடை 52 புள்ளி 5. உயரத்துக்குச் சற்று அதிகம்' என்று சின்தசைசர் குரல் தர, கண்ணாடியில் பார்த்துக் கொண்டு, 'எடை கூடப் போகிறது. சீக்கிரமே எடை கூடும். மணி! பெயர்தான் நன்றாக இல்லை. வீட்டுக்குள் சோமசுந்தரேசுவர சுப்ரமணி' என்று நீட்டமாகப் பெயர் வைத்துவிடவேண்டும். வெளியேதான், அரசாங்கத்துக்குத்தான் இரண்டு எழுத்துக்கு மேல் பெயர் உதவாதே. எல்லாருமே ரவி, புவி, மதி, சுகி, திரு. இன்னும் இரண்டு மாதத்திலிருந்து எடை அதிகரித்து

எனக்கொரு மணி மணீ!'

சப்-வேயில் உஷ்ணக் காற்று அவள் பாவாடையை உயர்த்தியதைத் தழைத்துக்கொண்டு டெலி கூண்டில் நுழைந்து சிபியை ஒத்தினாள். 212-3446545.

போனுக்கு மேலே ஜீவாவின் படத்துக்குக் கீழே 'கொல்' என்று சிவப்பில் எழுதியிருந்தது.

கிறுக்கல்தான். இருந்தும் நிலாவுக்கு பயமாக இருந்தது. ஜீவாவைக் கொல்வதா! யார் எழுதியிருப்பது?

'பேசுபவரைப் பார்க்கவும் வேண்டுமெனில் ஒரு ரூபாய் அதிகமாகப் போடவும்’ என்றது குரல், இயந்திர முட்டாளாக.

‘என் இனிய இயந்திரா - நிச்சயம் உனக்கு நான் பணிந்து ஒரு ரூபாய் போடத்தான் போகிறேன். இன்று என் கணவனிடம் அந்தச் செய்தியைச் சொல்லும்போது அவன் முகம் மாறுவதைப் பார்த்தே ஆகவேண்டும்.'

'சிபி! நிலா பேசறேன்.'

'நிலா! எங்க இருக்கே?'

‘மால் பக்கத்தில் பூத்தில. சிபி, ஒரு சுபச் செய்தி!'

‘என்ன? உனக்கு காலேஜ்ல அனுமதி கிடைச்சுருச்சா?'

'இல்லை, அதைவிட இனிப்பான அனுமதி.' இப்போது திரையில் சிபியின் முழு முகமும் தெரிய, அவன் அலுவலக அறையின் டெர்மினல்கள் பின்னால் தெரிந்தன. 'உன்னை விவியில பாத்துக்கிட்டிருக்கேன் சிபி!'

'என்னது? ரூபா போட்டியா, நீயா?'

'ஆமாம். இந்தச் செய்தியைக் கேக்கறப்ப, உன் முகத்தைப் பார்த்தே ஆகணும் எனக்கு. சிபி, நமக்கு ஒரு குழந்தை பெத்துக்க அனுமதி வந்துருச்சு! பையன்! பேர் மணி!'

திரையில் சிபியையே கண்கொட்டாமல் பார்த்திருக்க, அவன் முகத்தில் முதலில் ஆச்சரியம். அதன்பின் செய்தியின் முழு அர்த்தம் புரிந்து அவன் உதட்டோரங்கள் தலைகீழ் வில்லாக மெல்ல உயர, கண்களின் இடது வலது ஓரங்களில் புன்னகை ஜனித்துக் கண்களைச் சுருக்கிப் பற்களை வரிசை தெரிய வைத்து ஈறுவரை விரிய, 'ஓ நிலா! நிசமாவா?'

‘ஆமா... எங்கிட்ட அரசாங்க அனுமதிக் காகிதம் இருந்தது. கம்பி வழியா அனுப்பட்டுமா?'

'வேண்டாம், செலவு! நான் வீட்டுக்கு எட்டு மணிக்குள்ள வந்துர்றேன். நிலா, நாம பொண்ணுன்னா கேட்டிருந்தோம்?'

"பிள்ளைக்குத்தான் அனுமதி!'

'பெண் பிறந்தால் என்ன செய்வார்களாம்?'

‘நீ முதலில் வாயேன்.'

அந்தக் கேள்விக்கு இருவருக்குமே பதில் தெரியும். சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. கொன்றுவிடுவார்கள். மக்கட் தொகைக் கட்டுப்பாடு அத்தனை முக்கியம். எத்தனை பெண்கள், எத்தனை பிள்ளைகள் என்று ரேஷன்.

‘ராத்திரிக்குள் வந்து விடுகிறேன். இன்றைக்குக் கொண்டாட்டம்! இன்றைக்கே கொண்டாட்டம்!'

‘இப்போதே வாயேன்!'

'என்னால் ராத்திரிதான் வர முடியும் நிலா. எல்லாரும் புத்தாண்டு கொண்டாடினால் கம்ப்யூட்டரைப் பார்த்துக்கொள்ள என் போன்ற அப்பாவிகளும் தேவையிருக்கிறதே!’

‘நாசமாய்ப் போ' என்று திட்டிவிட்டு நிலா, கூண்டை விட்டு வெளிவந்தாள். அறிமுகமில்லாதவர்கள் எல்லாம் அவளை வரவேற்றுச் சிரித்தார்கள். எல்லாரிடமும் அரசின் கொடி சின்னச் சின்னதாக, ஒரு பக்கத்தில் சிவப்பும் மறுபக்கத்தில் ஜீவாவுமாக, அவற்றை அசைத்துக்கொண்டே நடந்தார்கள். நிலாவுக்கு தானும் ஒரு கொடி வைத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. வானத்தில் தொடர்ச்சியாக வாணங்கள் வெடித்தன. அவற்றின் அழுத்தப்பட்ட ஓசைகள் தாமதமாகக் கேட்டன. பொன்னேரி நிசமாகப் பொன்னேரி போல இருந்தது. யாரோ அவளை அணைத்து உப்புக் கரிக்க முத்தமிட்டதில் காமம் இல்லை!

நிலாவுக்கு இப்போது இதயத்துடிப்பு அதிகரித்தது. பவுன் கலரில் இதயம் தனியாக தடக் தடக்கென்று சத்தமாக இரைச்சலிட்டது. பிழம்பாக அதற்குள் ஒரு சந்தோஷம்

ஒளிந்துகொண்டு பிதுங்கினாற் போல் வெளிக்காட்டியது. வயிற்றுக்குள் தேன் கலந்த ஒரு நேர்த்தி தெரிந்தது. கான்கிரீட் கட்டடங்களின் உச்சியில் வெள்ளி விளிம்புகளில் சிலிக்கன் தேவதைகள் தெரிந்தார்கள். புதிய யுகம், புதிய சகாப்தம், புதிய குழந்தை, புதிய பிரஜை - குழந்தை மணி! 'மணியோ மணி என் பொன்மணி... தங்க மணி... ரேடிய மணி... சோமசுந்தரேசுவர சுப்ரமணி’ என்று வீட்டுக்குள் கூப்பிட, சிற்றில் சிதைத்து, பொன்முகத்துச் சுட்டி தொங்கத் தொங்க வருவான்! பதக் பதக்கென்று நடந்து வருவான்.

மணி! இன்றே மணியை உண்டாக்கவேண்டும். சிபி எத்தனை நேரம் தாமதித்து வந்தாலும் பரவாயில்லை!

பைத்தியக்காரி நான்! இன்றைக்குத்தான் கடிதம் வந்திருக்கிறது. இன்னும்

எத்தனை பரிசோதனைகள் பாக்கியிருக்கின்றன? சிபிக்கு க்ரோமோஸோம்

சிகிச்சை, எனக்குப் பயிற்சிகள். எப்போது மருந்தை நிறுத்தலாம் என்று சலுகை! முதன் முதலாக மக்கட் பெருக்கம் சரிய ஆரம்பித்த சாதனை! போதிய மக்கள், போதிய கோதுமை, ஜீவாவின் சாதனை!

ஜீவா! எங்கு நோக்கினும் அந்த முகம்! நாட்டைக் காப்பாற்றின ஆபத்பாந்தவன். பிரசிடெண்ட் ஜீவா! விளக்கு வெளிச்சத்தில் அவருடைய மூவர்ண முகத்தைப் பார்த்தாள் சற்று நேரம்!

வந்தனம் ஜீவா!

வெட்ட வெளியில் ஜீவாவின் மெகா புன்னகை சற்றுநேரம் ஹொலோகிராப்தனமாக உயிருடன் தெரிய, நிலா ஜன வெள்ளத்தில்

அலையடித்துக்கொண்டு சென்றாள். ஜிம்னேஷியத்திலிருந்து படபடவென்று கைதட்டல் ஒலி கேட்க, வெள்ளையுடைப் பெண்கள் வெல்வெட் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டிருப்பது வெளியே ராட்சச எல்.சி.டி திரையில் தெரிந்தது. எட்டாவது தெருவில் டிக்கெட் வாங்கிக்கொண்டு மானோ பிடித்தாள். அதன் காந்தத் தண்டு காற்று மெத்தையில் வழுக்கிக்கொண்டு செல்ல, சின்த் இயந்திரக் குரலில்,

பல்லாவரம், மீனம்பாக்கம், பரங்கிமலை, கிண்டி என்று அறிவிக்க, பத்தாவதில் இறங்கி பூமியடி ரயில் பிடித்து எட்டாவது குறுக்குத் தெருவில் இறங்கிக்கொண்டாள். சூப்பர் மார்க்கெட் சென்று ஒரு வாரத்துக்கு உண்டான காய்கறி வகைகள் ஆர்டர் செய்தபோது திரையில் மறுபடி ஜீவா தெரிய, கடையில் யாவரும் தத்தம் வியாபாரங்களை மறந்து ஜீவா என்ன சொல்கிறார் என்று கேட்டார்கள்.

'என்னருமை மக்களே! புத்தாண்டில் காலடி வைக்கும் உங்கள் எல்லோருக்கும் ஜீவாவின் வாழ்த்துக்கள். நாளையிலிருந்து அரசு உங்களுக்கு அளிக்கப்போகும் புதிய புதிய திட்டங்களைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்....

வருமான வரி முழுமையாக நீக்கப்பட்டு விட்டது.'

எங்கிருந்தோ படபடவென்று கைதட்டல் தாளித்தது.

'பொய்!' என்று பக்கத்தில் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது அந்த இளைஞன், ‘நீதானே நிலா?' என்றான்.

நிலா சற்று சந்தோஷத்துடன் அவனைப் பார்க்க, முரட்டுச் சட்டையும், பெட்டியும், நாயுமாக நின்று சுலபமாகப் புன்னகைத்தான்.

'உன்னைப் பார்க்கத்தான் உன்னையே தொடர்ந்து

என்றான்.

‘யார் நீங்க?’

வந்து கொண்டிருக்கிறேன்’

‘எம் பேரு ரவி. தெரிஞ்சோ தெரியாமலோ அறிஞ்சோ அறியாமலோ என் விதியும் உங்க விதியும் ஒண்ணு சேர்றது. ஜீவாவுக்கு வந்தனம். ஜீவாவென்னும் மகத்தான பொய்யனுக்கு, டூப் மாஸ்டருக்கு, நம் நாட்டின் அபாண்ட மெஸ்ஸையாவுக்கு!'

நிலா சற்றுப் பயந்து சுற்றுமுற்றும் பார்த்தாள்.

‘பயப்படாத. ராணுவத்து ஆசாமிங்க யாரும் இல்லை!'

‘நீங்க யாருன்னே...'

'உங்க வீட்டு முன் அறைக்குப் புதுசா குடிவரப்போகிற மாணவன் நான். இந்தாங்க அரசாங்கக் கடிதம்!' - அவன் தன் பைக்குள்ளிருந்து கடிதத்தை எடுத்துக் காட்ட, அவர்கள் முன்னறை அவனுக்கு அளிக்கப்பட்டிருந்ததை வீட்டுவசதிப் பிரிவிலிருந்து தெரிவித்த ஆணைக் கடிதம்.

‘நீங்க கல்யாணம் ஆனவங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். குறுக்கீட்டுக்கு ஆயிரம்

மன்னிப்புகள்,' 'எப்படி உங்களுக்கு அறையைக் கொடுக்க முடியும்? எங்களுக்கு அனுமதி வந்திருக்கே!'

'எதற்கு?'

‘குழந்தைக்கு!'

'உத்தமம்! அப்படியென்றால், குழந்தை வந்தால் மறுபடி என்னைத் துரத்துவார்கள் என்பது நிச்சயம். அதுவரைக்கும் என்னை நீங்கள் சமாளித்துத்தான் ஆகவேண்டும்!'

அவனை இப்போது நேராகப் பார்த்தாள். இளைஞன்தான். உயரமாக இருந்தான். நெற்றிப் புருவங்கள் பென்சிலால் வரைந்ததுபோல, இன்றைக்கு ஷேவ்பண்ணிக்கொள்ளாததால் லேசான பச்சைப் பூச்சு முகத்தில் தெரிய, கண்கள்தான் சற்றுக் கோபமாகவும், அதே கோபம் மூக்கின் ஓரத்தில் மேல்நோக்கிச் சற்றே திறந்திருந்த கூர்மையாலும்...

'என்னை நீங்க சகிச்சுக்கிட்டே தீரணும். விதி, ஜீவாவின் விதி என்னையும் என் நாயையும்... என்ன ஜீனோ!' அந்த நாய் ஒரே ஒருமுறை வாலாட்டியது.

'என் கணவர் வீட்டில் இல்லை.'

‘பயப்படாதீர்கள். கற்பழிக்கமாட்டேன்.'

'உங்களைப் பார்த்தாலும் கற்பழிப்பவர்போல இல்லை.'

'நிலா! நல்ல பேர்தான். ஆனால் நாடு பூரா நிலா நிலான்னு எத்தனை ஆயிரம் பொண்ணுங்கன்னு யோசிக்கிறபோதுதான் ஒரு மாதிரி மயிர் சிலிர்க்குது. என்ன

ஒரு நாடு! என்ன ஒரு ஊரு!'

வீட்டுக்கு வந்து கதவைத் திறந்து அவனுக்கு டீ போட்டுக் கொடுத்தபோது அவன் சுதந்தரமாக முன்னறையில் போய் உட்கார்ந்தாலும் அவனைக் கண்டால்

நிலாவுக்குப் பயமாக இல்லை.

போன தடவை வாடகைக்கு வந்திருந்தவனைப் பார்க்கப் பயமாக இருந்தது. குண்டாக, பெரிசாக, அடர்த்தியாகத் தாடி வைத்து இருந்தான். இவனைப் பார்த்தால் சின்னப் பையன் போல இருக்கிறான். ஜீவாவைப் பற்றிப் பேசுவதில்தான் சற்று

அபாயம்!

'உங்க கணவர் என்ன செய்கிறார்?' ‘கம்ப்யூட்டர் சென்டரில்,'

'கம்ப்யூட்டர் சென்டரில் என்ன வேலை?' என்று நாய் கேட்டது.

மேலும் படிக்க… கீழே உள்ள Download பட்டனை கிளிக் செய்யுங்கள்

Download