குக்கூ குக்கூ.. பாடல் வரிகள் | Enjoy Enjaami song lyrics - பாடலின் முழுமையான அர்த்தங்களுடன்.

Enjoy Enjaami song lyrics and meaning

பாடல் வரிகள்:

குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி

குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி

அள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஓட்டரே ஓட்டரே சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே

சுருக்கு பையம்மா
வெத்தலை மட்டையம்மா
சொமந்த கையம்மா
மத்தளம் கோட்டுயம்மா

தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதியை கூறேண்டி
கண்ணாடியே காணோடி
இந்தர்ரா பேராண்டி

அன்னைக்கிளி அன்னைக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணை கொடுத்தானே பூர்வகுடி

கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு

குக்கூ குக்கூ
பச்சையை பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குனே கூட்டுக்கு

பாடுபட்ட மக்கா
வரப்பு மேட்டுக்காரா
வேர்வத்தண்ணி சொக்கா
மினுக்கும் நாட்டுக்காரா

ஆக்காட்டி கருப்பட்டி
ஊதங்கொழு மண்ணுச்சட்டி
ஆத்தோரம் கூடுகட்டி
ஆரம்பிச்ச நாகரீகம்

ஜன் ஜனே ஜனக்கு
ஜனே மக்களே
உப்புக்கு சப்பு கொட்டி
முட்டைக்குள்ள சத்துக்கொட்டு
அடக்கி ரத்தங்கொட்டு
கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் சேழிச்சாலும்
என் தொண்டை நனையலேயே

தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தில் பாடகி Dhee பாடிய “உட்றாதிங்க யப்போவ்” பாடல்

என் கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தா சுத்தி வந்தா
சேவ கூவுச்சு
அது போட்டு வச்ச எச்சம் தானே
காட மாறுச்சு
நம்ம நாடா மாறுச்சு
இந்த வீடா மாறுச்சு

என்ன கோரை என்ன கோரை
என் சீனி கரும்புக்கு என்ன கோரை
என்ன கோரை என்ன கோரை
என் செல்ல பேராண்டிக்கு என்ன கோரை

பந்தலுல பாவக்கா
பந்தலுல பாவக்கா
வேதகள்ளு விட்டுருக்கு
அது வேதகள்ளு விட்டுருக்கு
அப்பன் ஆத்தா விட்டதுங்க
அப்பன் ஆத்தா விட்டதுங்க

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

என் கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே
குக்கூ குக்கூ

..................

நேத்து பாடல்வரிகள் |Nethu Video | Dhanush | Santhosh Narayanan | Karthik Subbaraj

Padal Varigal யாதும் ஊரே யாவரும் கேளீர் முருகா பாடல் வரிகள் | Yathum oore Yavarum Kelir Muruga Song Lyrics | Vijay Sethupathi |STR விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படத்தில் சிலம்பரசன் பாடிய முருகா பாடலின் பாடல் வரிகள்

வாய்ங்கோ, வாய்ங்கோ Song Lyrics In Tamil| Brodha V x Jordindian - Vainko [Music Video] UDIO CREDITS - Music - Brodha V Lyrics and Performance - Brodha V Mixing - Brodha V

Novels tamil Ponniyin selvan comics pdf | பொன்னிணியின் செல்வன் காமிக்ஸ் Pdf Free download

 குக்கூ பாடலின் உண்மையான விளக்கங்கள்


குக்கூ குக்கூ
------------------------

கிழவிக்கு பெயர் வள்ளியம்மா.

நான் கண்ட பரிமளத்துக்கும், சிவக்கொழுந்துக்கும் இன்னும் மண்ணைக்கிண்டும் அத்தனை பெண்டுகளுக்கும் வள்ளியம்மாவுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு காலத்தில் இலங்கையில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்தவள் என்ற தகுதி கூடுதலாக இருக்கிறது.

அதே கறுப்பு. உளவாரமும் புல்லுச்சத்தகமும் குல்லானும் பிடித்து மரத்துப்போன கைகள். விரல் முடிவில் தெட்டம் தெட்டமாய் கண்டிப்போன தோல். வலுவேறிய கைத்தசைகள். கந்தலும் பீத்தலுமான மண் ஒட்டிய பழைய சாறி. இடுப்பில் சொருகப்பட்ட லக்ஸ்பிறே பையினாலான சுருக்குப்பை. அதற்குள்  காய்ந்த வெற்றிலைகள், பாக்கு வெட்டியால் நறுக்கப்பட்ட கொட்டைப்பாக்கு, பொயிலை, காய்ந்துபோன சுண்ணாம்பு.

//சுருக்கு பையம்மா
வெத்தலை மட்டையம்மா சொமந்த கையம்மா மத்தளம் கொட்டுயம்மா//

இந்த கிழத்தி இன்று வீதிக்கு வந்திருக்கிறாள். கூடவே அவளது பேரனும் அவள் ஆசையாய் வளர்த்த குயில் "தீ" யும்.

***
வீதியோரத்தில் நின்ற ஆலமர நிழலில் மூவரும் ஒதுங்கிக்கொள்ள, வரண்ட தொண்டையினால் ஒப்பாரி பாட ஆரம்பித்தாள் வள்ளியம்மா.

//பந்தலுல பாவக்கா
பந்தலுல பாவக்கா வெதகல்லொ விட்டுருக்கு அது வெதகல்லொ விட்டுருக்கு அப்பன் ஆத்தா விட்டதுங்க அப்பன் ஆத்தா விட்டதுங்க//

பாகல், புடலை, பயிற்றை போன்ற கொடிவகைகள் வயலில் பந்தல் போட்டு படர விடப்படும். குறித்த காலத்தில் காய்கள் முற்றியதும் ஆய்ச்சல் நடக்கும். கொடிகளின் இறுதி விளைச்சலை ஆயாமல், காய்களை பந்தலிலேயே பழுக்க விடுவார்கள். அது பழுத்து காய்ந்த பின்னர், அதிலிருந்து விதைகள் எடுத்து அடுத்த வருட செய்கைக்காக சேர்ந்து வைப்பார்கள். இப்படியாகவே அந்த செடியோ கொடியோ சந்ததி சந்ததியாக காக்கப்படும். இன்று காய்க்கும் பாகற்காய்கான விதை என் முன்னோர் தந்தது.

இன்றோ, சோறு போட்ட இந்த மண்ணை குத்திக் கிழித்து பாழாக்கி வேலி போட்டு விலை பேசி வியாபாரம் நடக்கிறது. இந்த மண்ணோடு உரையாடி உறவாடி உயிராகி வாழும் இவளுக்கு இது பொறுக்காமல், இன்று சந்திக்கு வந்திருக்கிறாள். இந்த மண்ணை பற்றி அதன் செல்வம் பற்றி மக்களுக்கு சொல்ல போராளியாய் வந்திருக்கிறாள்.

//பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி//

சாமி என்பவன், இந்த பூமி மேல் அக்கறை இல்லாது அதனை அறுத்து விற்கும் பெரு முதலாளிகள்.

***
வள்ளியம்மா சொல்லும் கதையை கேட்க ஒவ்வொருவராய் கூவிக்கூவி அழைக்கப்படுகிறது குயில். அதன் நா, குக்கூ குக்கூ என்று பா பாடும் தொனியில் இசை தீ மூளும்.

//குக்கூ  குக்கூ தாத்தா தாத்தா களவெட்டி//

களவெட்டி ஊரிலேயே வயதான கிழம். வெறும் மேல். தோளில் கிடக்கும் வெற்றிலை கயர் ஊறிய துண்டு. முழுங்காலுக்கு மேல மடிச்சு சண்டிக்கட்டு கட்டின சறம். எப்போதுமே வெத்திலையை குதப்பும் வாய்.

சாறும் போது,நிரை இழுக்கும் போது, பாத்தி கட்டும் போது, குழை தாழ்க்கும் போது, தண்ணி கட்டும் போதெல்லாம் அந்த துண்டு தலைப்பாகையாகும். மேலும் கடைவாயால் வடியும் வெற்றிலை எச்சில் துடைக்க, வியர்வை துடைக்க, நிழலை கண்டால் விரித்துவிட்டு படுக்க என்று எல்லாமே அந்த துண்டோடு தான்.

ஊர் வயல் வழிய கொத்துற வேலை என்ன எண்டாலும் களவெட்டியாரிட்ட தான் வரும். பல இடங்களுக்கு போய்வாற மனுசன். இந்த கதையை பல இடங்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென்றால் களவெட்டியானை தானே முதலில் கூப்பிட வேணும்.

//குக்கூ குக்கூ பொந்தில யாரு மீன்கொத்தி//

அவர்கள் ஒதுங்கிய  ஆலமரக் கிளைகளுக்கு நடுவில் செல்லும் கோறையினுள் ஒரு பொந்து. அதனுள்ளிருந்து ஒரு  மீன்கொத்தி எட்டிப்பார்க்கிறது. பல இடங்களுக்கு சுற்றித்திரியும் மீன்கொத்தியையும் கதை கேட்க அழைக்கப்படுகிறது குயில்.

//குக்கூ குக்கூ தண்ணியில ஓடும் தவளைக்கு//

வயலில் வந்து விழும் வண்டுகளையும் வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளையும் பிடித்து தின்று பயிர்களுக்கு சேதம் வராமல் காப்பது தவளைகள். இந்த நன்றிக்காகவும், இரவென்றால் பெக்கு பெக்கு என்று கத்தி அவை ஊரெல்லாம் கதை சொல்லும் என்பதாலும் தவளைகளுக்கு குக்கூ என்று அழைப்பு.

//குக்கூ குக்கூ கம்பளிப்பூச்சி தங்கச்சி//

கம்பளிப்பூச்சி வண்ணத்துப்பூச்சியின் குடம்பி நிலை மயிர்கொட்டியின் எடுப்பான பெயர். யாழ்ப்பாணத்தில் அது மசுக்குட்டி. குயிலுக்கும் அதன் குடும்பத்தை சேர்ந்த செண்பகத்துக்கும் மயிர்கொட்டி தான் உணவு. இதனால் குயிலுக்கு கம்பளிப்பூச்சி என்றால் ஒரு இளக்காரம். அந்த தொனியில் வந்து விழும் வார்த்தை தான் "தங்கச்சி".

அதே கம்பளிப்பூச்சி நாளை பட்டாம்பூச்சியாகும் போது மலர்களின் மகரந்தச்சேர்க்கைக்கு அவை தான் உதவி. இதனால் "கொஞ்சம் நீயும் கேளேன்" என்ற நக்கலாக ஒரு குக்கூ.

***

தீ அழைத்தவரெல்லாம் கதை கேட்க கூட, வள்ளியம்மாவின் பேரன் தொடங்குகிறான்,

//தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா வள்ளியம்மா பேராண்டி சங்கதியை கூறேண்டி கண்ணாடியே காணோடி இந்தர்ரா பேராண்டி//

என்ன சங்கதிக்கு இந்த அழைப்பு என்று அறிய கூட்டம் ஆவலாய் இருக்க, குயில்  தீந்தமிழ் அடியில் தீச்சுவை கவியாய் நாயகி வள்ளியம்மையை வர்ணிக்க ஆரம்பிக்கிறது.

//அல்லி மலர் கொடி அங்கதமே//

அங்கதம் என்றால் கேலி- கிண்டல் - நக்கல் - நையாண்டி. அல்லி மலர் போன்ற மென்மையான வள்ளியின் பேச்சில் எப்பொழுதுமே நகைச்சுவை தெறிக்கும். அங்கதம் என்பது கையின் மேற்புயத்தில் அணியும் ஆபரணத்தையும் குறிக்கிறது.

//ஒட்டார ஒட்டார சந்தனமே//

ஒட்டாரம் என்றால் பிடிவாதம். கிழவி ரொம்பவே பிடிவாதக்காரி. ராங்கி.

//முல்லை மலர் கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே//

முல்லை மலர்களாலான முத்து மாலையை அணிந்தவளே! எங்கள் ஊருக்கே தனித்துவமான குத்தாலம் இவள்.

//அன்னக்கிளி அன்னக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி//

கூட்டத்தில் நின்ற அன்னக்கிளியையும் ஆலமரத்தின் மேல் இருந்த கிளியையும் அழைத்து சொல்ல வந்த சேதியை சொல்கிறது குயில்.

//நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணை கொடுத்தானே பூர்வகுடி கம்மங்கரை காணியெல்லாம் பாடி திரிஞ்சானே ஆதிக்குடி நாய் நரி பூனைக்கெல்லாம் இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி//

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று திரிந்த குடியின் நிலங்களை துண்டாக்கி சாதி என்ற வேலிபோட்டு இன்று பணப்பாயில் சுற்றி விற்கிறார்களடி! கேளுங்கோ! இதை வடிவா கேளுங்கோ!

***

குயில் இன்னும் இன்னும் கூவிக்கூவி அழைக்கிறாள். இந்த முறை அழைப்பு இயற்கைக்கு. அது வரிந்து கொண்ட அழகுக்கு. அதனை வனைந்த கடவுளுக்கு!

//குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு குக்கூ குக்கூ ஒப்பனை யாரு மயிலுக்கு குக்கூ குக்கூ பச்சையை பூசும் பாசிக்கு குக்கூ குக்கூ குச்சிய அடுக்குனே கூட்டுக்கு//

பேரன் கூட்டத்தை விளித்து, கதையை தொடங்குகிறான்.

//பாடுபட்ட மக்கா
வரப்பு மேட்டுக்காரா வேர்வத்தண்ணி சொக்கா மினுக்கும் நாட்டுக்காரா//

வரப்பு மேடெல்லாம் நாளெல்லாம் ஓடாய் தேய்ந்து வியர்வையால் நனைந்த ஆடையை உடுத்திய உழைப்பாலே மினுங்கும் நாட்டுமக்களே! கதையை கேளு!

//ஆக்காட்டி கருப்பட்டி
ஊதாங்குழல் மண்ணுச்சட்டி//

கருப்பட்டி என்பது பனம்பாளையை சீவி வரும் பனை நீரை சுண்ணாம்பு பூசிய முட்டியில் சேகரிப்பதால் வரும் பதநீரை காய்ச்சி செய்யப்படுவது. யாழில் அதற்கு பனங்கட்டி என்று பெயர். ஆக்காட்டி என்பது ஒரு பறவை. இங்கே அது கருப்பட்டி தயாரிப்பின் பெயர்.

இந்த விவசாய மக்களின் உணவு கூழும் களியும் தான். ஒடியல் கூழ், கேப்பைக்கூழ்(குரக்கன்கூழ்), பனங்கூழ் என்று நீளும் கூழ். ஊதாங்குழல் என்றால் புகையும் அடுப்பை ஊதி பற்ற வைக்க பயன்படும் இரும்புக் குழாய். அடுப்பை ஊதி மண்சட்டியின் களி கிண்டும் சனம்.

//ஆத்தோரம் கூடுகட்டி
ஆரம்பிச்ச நாகரீகம் ஜன் ஜனே ஜனக்கு ஜனே மக்களே//

ஆறுகள் தேடி விவசாயம் செய்து வளர்த்தது தானே மனித நாகரிகம்!

//உப்புக்கு சப்பு கொட்டு
முட்டைக்குள்ள சத்துக்கொட்டு அட்டைக்கு ரத்தங்கொட்டு கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு//

கொட்டு என்பது ஒரு வகை தாளவாத்தியம். கொட்டு என்றால் உடல் அல்லது உள்ளீட்டை போர்த்திய ஆதாரம். பனங்கொட்டு என்றால் வெட்டப்பட்ட பனை மரத்தின் அடி.

சப்புகொட்டுதல் என்றால் ருசித்தல். சுவைக்கு உப்பு. எளிய மக்களுக்கு ஒரே சத்துணவு முட்டை தான். சத்துக்கு முட்டை. தேயிலை தோட்டங்களில் வாழும் அட்டைகள் அங்கு கொழுந்து பறிக்கும் பெண்களின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்வது. அதன் உடல் தொழிலாளிகளின் இரத்தம்.
கிட்டிப்புள்ளு எளிய மக்களின் கிரிக்கெட்.

***
அட்டை - ரத்தம் என்று பேராண்டி முடிக்க, வள்ளியம்மாவிற்கு தன் தேயிலை தோட்ட நினைவுகள் வருகிறது.

//நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன் தோட்டம் செழிச்சாலும் என் தொண்டை நனையலேயே//

விவசாயி எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் அவன் வயிற்று பசியை போக்கும் அளவுக்கு ஊதியம் கிடைப்பதில்லை. பட்டினியும் பழச்சோறும் கஞ்சியுமே வாழ்க்கை.

வள்ளியம்மா கலங்க, குயிலும் பேரனும் கதை கேட்க திரண்டு வரும் மக்களை நோக்கி வரவேற்கிறார்கள்.

//Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி//

என் சாமி. வீட்டில் பெரியவர்களையும் குழந்தைகளையும் "சாமி" என்ற விளிப்போடு அழைக்கும் வழக்கம் எளிய மக்களிடம் இருக்கிறது. கோவில்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் போது " அப்புசாமியை கும்பிடு" என்றே தாத்தாமார்கள் சொல்வார்கள். அப்புசாமி என்றால் கடவுள். 'வெறும்' சாமி என்றால் மனிதன்.

//அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி//

அம்பாரி என்றால் யானை மேல் இருக்கும் இருக்கை. சிறுபோகம், இடைப்போகம், பெரும்போகம் என்று மூன்று போகமும் மழை நன்றாக பெய்தால் அது மும்மாரி. மும்மாரி பொழிந்தால் விவசாயிக்கு அம்பாரியில் போகும் சந்தோஷம் கிடைக்கும்!

மீண்டும் குயில் சத்தமாய் கேவிக்கேவிக் கூவி அழைக்கிறது இயற்கையை.

//என் கடலே கரையே
வனமே சனமே நிலமே குளமே இடமே தடமே//

தடமே!  வாழ்ந்த வாழ்க்கை சுவடே! என்று காலத்தையும் துணையாக அழைத்துக்கொண்டு தொடர்கிறது.

//ராட்டினந்தா சுத்தி வந்தா
சேவ கூவுச்சு அது போட்டு வச்ச எச்சம் தானே காட மாறுச்சு நம்ம நாடா மாறுச்சு இந்த வீடா மாறுச்சு//

ராட்டினம் - மணிக்கூடு பார்த்தா கோழி கூவுது? இயற்கையை காப்பாத்துங்கடா மக்களே! என் மக்கா!

//என்ன கொற என்ன கொற
என் சீனிகரும்புக்கு என்ன கொற என்ன கொற என்ன கொற என் செல்ல பேராண்டிக்கு என்ன கொற..

கர்ணன் பாடல் Karnan | Pandarathi Puranam Lyric Video Song | Dhanush | Mari Selvaraj | Santhosh Narayanan | Deva   

புஜ்ஜி பாடல் வீடியோ வரிகள் | Bujji Song video lyrics பாடல்- புஜ்ஜி படம் - ஜகமே தந்திரம் பாடியவர் -அனிருத் இசை - சந்தோஷ் நாராயனன்


போ போ யென் | Po Po yen song lyrics in tamil | Sid sriram album song lyrics

Teddy | En Iniya Thanimaye Video Song | Arya, Sayyeshaa | D. Imman | Shakti Soundar Rajan

மேலும் செய்திகள்

- Srilanka News

- India News

- Technology News

-Sports News

- Cinema News - Trailers - Image Gallery - Song Lyrics

-ஆன்மீகம்