பொதுவெளியில் பிரான்ஸ் ஜனாதிபதியின் கண்ணத்தில் அறைந்த மர்ம நபர்

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரானை கன்னத்தில் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மெக்ரான் அங்கு சென்றிருந்தார். அதன் ஒரு பகுதியாக அந்த நகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்வதற்காக சென்றார்.

அப்போது தன்னை வரவேற்க பள்ளிக்கூடத்துக்கு வெளியே காத்திருந்த பொதுமக்களை சந்தித்து கை குலுக்க அவர் மக்கள் கூட்டத்துக்கு அருகே சென்றார்.

அப்போது கூட்டத்தில் முன்வரிசையில் நின்றிருந்த ஒருவர் திடீரென ஜனாதிபதி மெக்ரான் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இதைத்தொடர்ந்து கன்னத்தில் அறைந்த நபரையும் அவருடன் இருந்த மற்றொரு நபரையும் பொலிசார் கைது செய்தனர்.

இதனிடையே ஜனாதிபதி மெக்ரானை கன்னத்தில் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.