காப்புறுதி என்றால் என்ன?

காப்புறுதியின் வரைவிலக்கணம் மற்றும் காப்புறுதியின் சட்டப்பிரிவுகள்.

காப்புறுதி என்றால் என்ன?
Google image

 காப்புறுதி வரைவிலக்கணம்.

காப்புறுதி என்றால் என்ன என்பதை காப்புறுதியின் செயற்பாடுகள் ஊடாகவே தெளிவு படுத்த வேண்டியுள்ளது. அதன்படி, "ஒரே வகையான அபாயவாய்ப்புகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய தனி நபர் கூட்டமொன்று பங்களிப்பு வழங்குகின்ற ஒரு பொது நிதியத்தினூடாக இழப்புகளுக்கு முகம் கொடுத்துள்ள ஒரு என்றழைக்கப்படுகிறது சிலருக்கு இழப்பீடு வழங்குகின்ற ஒரு நற்பணியே காப்புறுதி என்றழைக்கப்படுகிறது.

இந்த விளக்கத்தின் பிரகாரம் காப்புறுதியின் பிரதான நோக்கம், ஒரு பொது நிதியத்துக்கு பங்களிப்பு வழங்கி இழப்பு ஏற்பட்டுள்ள அளவுக்கு இணங்க இழப்பீடு வழங்குவதாகும். இந்த நிதியம் ஒரே வகையான அபாய வாய்ப்புக்களை எதிர் நோக்குகின்ற தனி நபர்களால் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அபாய வாய்ப்புகளால் இழப்பு ஏற்பட கூடியவர்களே நிதியத்துக்கு தமது பங்களிப்புகளை வழங்குகிறார்கள்

உதாரணமாக, தீக் காப்புறுதி நிதியத்துக்கு பங்களிப்பு செய்துள்ள ஒரு தொழிற்சாலை தீயினால் சேதமடைந்தால் அந்த சேதத்துக்கு நிதிசார் இழப்பீட்டை வழங்கி அவரது இழப்பை ஈடு செய்வதாகும். காப்புறுதியில் பங்களிப்புத் தொகை மிகவும் சிறியதாகும். எனினும் கிடைக்கின்ற அனுகூலம் பெரியதாகும்

காப்புறுதியின் சட்டப்பிரிவு

சட்டத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது காப்புறுதி ஓர் ஒப்பந்தமாகும். ஒப்பந்தம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்புகளுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படுகின்ற இணக்கமாகும். காப்புறுதியில் ஒப்பந்தம் ஒன்று ஏற்பட வேண்டுமாயின் குறைந்தது இரு தரப்பினராவது இருத்தல் வேண்டும். அதாவது, காப்புறுதியை பெற்றுக் கொள்பவர் எனும் காப்புறுதி செய்யப்பட்டவர் மற்றும் காப்புறுதியை வழங்குபவர் எனும் காப்புறுதிக் கம்பனி.

ஒப்பந்தங்கள்  எளிய / சாதாரண ஒப்பந்தங்கள், விசேட ஒப்பந்தங்கள் என இரண்டு வகைப்படும் காப்புறுதியானது எளிய / சாதாரண ஒப்பந்தச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்ததாகும், பொதுச் சட்டத்தில் காப்புறுதி எழுத்து மூல மான ஓர் ஒப்பந்தமாக பாவிக்கப்பட்டுள்ளது

எளிய / சாதாரண ஒப்பந்தமொன்று ஏற்படுவதற்கு பின்வரும் தேவைகள் நிறைவேற்றப்பட்டிருத்தல் வேண்டும் 1. பிரேரணை 2. ஏற்றுக் கொள்ளல் 3. பணப்பெறுமதி 4. ஒப்பந்தத்தில் இணைய இயலுமாக இருத்தல் 5. சட்டத்திற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்

  1. பிரேரணை

ஒப்பந்தமொன்று ஏற்படுவதற்கு முதலில் ஒரு தரப்பினரால் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படல் வேண்டும். எனவே காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பவர் முதலில் பிரேரணையை சமர்ப்பித்தல் வேண்டும். இதற்காக காப்புறுதிக் கம்பனிகள் பிரேரணைப் படிவங்களைத் தயாரித்து வைத்துள்ளன.

2.ஏற்றுக் கொள்ளல்

பிரேரணை மூலம் கோரப்பட்டுள்ள காப்புறுதியை வழங்க, காப்புறுதிக் இணங்கினால் மேற்படி பிரேரணை ஏற்றுக் கொள்ளப்படும். கம்பனி

  1. பணப்பெறுமதி

பிரேரணையை சமர்ப்பித்த நபர் காப்புறுதிக் கம்பனி விதிக்கின்ற கட்டுப்பணத்தை செலுத்தினால் பொறுத்தமட்டில் ஒப்பந்தம் அதன் பூரணமடைந்து பணப் விடும் காப்பறுதிக் பெறுமதி பிரேரிப்பவரிடமிருந்து கட்டுப்பணமாகும். காப்புறுதி செய்யப்பட்டவரின் பணப் பெறுமதியாக இருப்பது, தனக்கு ஏற்படுகின்ற இழப்புகளின் போது இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள தனக்குள்ள உரிமையாகும். இதன் படி, கட்டுப்பணம் செலுத்தப்பட்டிராத ஒரு சந்தர்ப்பத்தில் இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ளும் உரிமை இழக்கப்பட்டு விடுவதுடன், கட்டுப்பணம் செலுத்தியுள்ள சந்தர்ப்த்தில் இழப்பீடு வழங்கப்படாவிட்டால் காப்புறுதிக் கம்பனிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்

  1. ஒப்பந்ததத்தில் இணைய இயலுமாக இருத்தல்

ஒப்பந்தம் செல்லுபடியாக வேண்டுமாயின் அதன் தரப்பினர்களுக்கு சட்டபூர்வமாக ஒப்பந்தத்தில் இணையக் கூடிய தகுதி இருத்தல் வேண்டும். சிறு பராயத்தவர்களுக்கு சித்த சுவாதீனமற்றவர்களுக்கு ஒப்பந்தத்தில் இணைய முடியாது. ஒப்பந்தத்தின் பொறுப்புக்கள் பற்றிய பாரதூரத் தன்மைகளை அவர்கள் அறிந்திராதிருப்பதே இதற்கான காரணமாகும்.

  1. சட்டத்திற்கு உட்பட்டிருத்தல்

சட்டரீதியான ஒரு விடயத்துக்காக மாத்திரமே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு தாம் செய்துகொள்கின்ற காப்புறுதி ஒப்பந்தங்கள் சட்டத்தின் முன் செல்லுபடியாதலும் வேண்டும்.

இதனையும் படிக்க —> காப்புறுதி தத்துவங்கள் என்றால் என்ன?