உடனடி தமிழ் செய்திகள் (நேரலை) 2022-04-05 Tuesday- Live News Updates AK Tamil

இலங்கையில் இடம்பெறும் முக்கிய செய்திகள் உடனுக்குடன் நேரடியாக

1. “இராஜினாமா செய்ய அவசியம் இல்லை”

“இராஜினாமா செய்ய அவசியம் இல்லை”

இலங்கையிலுள்ள 69 இலட்சம் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று (04)  தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அமைச்சர், மக்கள் ஆணையை ஜனாதிபதி இன்னும் வைத்திருப்பதாக தான் நம்புவதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கு இன்னும் மக்களின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார்.

தற்போது முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்கள் சிறிய போராட்டங்கள் என தெரிவித்த அமைச்சர், எனினும் மக்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

2. ஜனாதிபதி செயலகம், ஆர்ப்பாட்டக்காரர்களால் தற்போது முற்றுகை

ஜனாதிபதி செயலகம், ஆர்ப்பாட்டக்காரர்களால் தற்போது முற்றுகை

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம், ஆர்ப்பாட்டக்காரர்களால் தற்போது முற்றுகையிடப்பட்டுள்ளது.

பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பு- காலி வீதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது

3.

தற்காலிக அமைச்சரவை அமைச்சர்கள் பலர் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாகவும், சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், நிதி அமைச்சின் செயலாளராக தொழிலதிபர் தம்பிக்க பெரேராவை நியமிப்பதுடன், தற்போதைய நிதி அமைச்சின் செயலாளரை இலங்கை மத்திய வங்கி ஆளுநராகவும் நியமிக்க கலந்துரையாடப்படுகிறது.

4. புதிய அமைச்சரவை நியமனம்

நீதி அமைச்சராக செயற்பட்ட அலி சப்ரி நிதி அமைச்சராகவும், தினேசஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜொன்ஸ்ட்ன பெர்னாண்டோவும் , வெளிவிவகார அமைச்சராக ஜீ. எல். பீரிஸ் வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

5. ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதியின் போக்குவரத்து தடை

6. கோட்டாவின் அழைப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி வழங்கிய பதில்

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நிராகரித்துள்ளது.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “பொதுமக்களின் வேண்டுகோள் கோட்டா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதே, நாங்கள் அந்த போக்கை ஆதரிப்போம் மற்றும் ராஜபக்ஷர்களின் கீழ் எந்த பதவியையும் ஏற்க தயாராக இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

7. வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்பட்டவர்கள் கைது!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியும், தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறும் கோரி நாட்டில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் தீ மூட்டுதல், வீதித் தடைகளை உடைத்தல் மற்றும் வீதித் தடைகளை மீறி உள்நுழைதல் உள்ளிட்ட வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனையோரை காணொளி பதிவுகளின் ஊடாக அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.