உடனடி தமிழ் செய்திகள் (நேரலை) 2022-02-28 Monday - Live News Updates AK Tamil

இலங்கையில் இடம்பெறும் முக்கிய செய்திகள் உடனுக்குடன் நேரடியாக.

1. வாரத்தின் வேலை நாட்களை நான்கு (4) நாட்களாக குறைக்கும் திட்டம் முன்மொழிவு

வாரத்தின் வேலை நாட்களை நான்கு (4) நாட்களாக குறைக்கும் திட்டம் முன்மொழிவு

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அஜித் நிவாட் கப்ரால் இந்த யோசனையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) கடனுதவியை தொடர்ந்தும் வழங்கினால் இரண்டு வங்கிகளும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பது கடினமாகும் என்பதால், அதற்கான கடனை உடனடியாக நிறுத்தவும் மத்திய வங்கி முன்மொழிந்துள்ளது.

 பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுமார் ரூ.  560 பில்லியன் (US $ 280 மில்லியன்) இரண்டு அரசு வங்கிகளுக்கும்.

 இந்த நிலையில், CPC க்கு மேலும் கடன் வழங்குவது இரண்டு வங்கிகளின் வீழ்ச்சிக்கும் பொருளாதாரத்தில் கடுமையான நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்பதால் மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.

 எரிபொருள் விற்பனையில் CPC க்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைப்பதற்காக எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்குமாறும் மத்திய வங்கி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது.

 வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை 4 ஆக குறைக்கவும், ஒரு நாளைக்கு வேலை நேரத்தை அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 அதன்படி, வேலை நேரத்தை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை மாற்றி அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  நிறுவனங்களுக்குள் பணிபுரியும் ஊழியர்கள் காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், முன்கூட்டியே வீடுகளுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்குமாறும் மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.  அதன்படி, நெருக்கடி மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், ஒரு பெரிய ஊடகப் பிரச்சாரத்தையும் அதன் முன்மொழிவு கோருகிறது.

2.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இரத்தினபுரி,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

3. இன்று (28) மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

இன்று (28) மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

நாடு முழுவதும் இன்றைய தினம் (28) மின்சாரம் துண்டிக்கப்படும் விதத்தை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு 5 மணித்தியாலங்களும், 15 நிமிடங்களும் மின்சார துண்டிப்பை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

மேலும், A, B, C ஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும், 40 நிமிடங்களும் மின்சார துண்டிப்பை ஏற்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.