காதல் சொட்டும் கவிதைகள்

ஹைக்கு காதல் கவிதைகள், வாட்ஸ்அப், பேஸ்புக் ஸ்டேட்டஸ்

1.

தன்னைத் தொலைத்து
நின்னில் நிலைக்கொள்வதே
காதல்...!!

2.

நேசிக்க அனுமதி அளித்தபோதே
கோபம் கொள்ளும் உரிமையையும் 
சேர்த்தே தான் அளிக்கிறோம் என்பது
நினைவில் இருந்தால் 
பிரிவு என்ற வார்த்தைக்கு அவசியமிருக்காது ..

3.

முத்தம் கூட வேண்டாம்
உன் அருகாமையில் 
கிடைக்கும் உன் 
சுவாசகாற்றின் 
வெப்பம் போதும் 
வாழும் காலம் வரை

4.

அவன் பார்வை சூட்சுமம்

அனைத்தும்..
என் நாண நகைத்தலை
ரசித்திடவே..!

5.

எப்பொழுதாவது 
மனதில் தோன்றும் 
நீயில்லாத நான் 
என்னாவேன் என்று 
ஆம் நிச்சயம் 
தனிமைக்கு 
சொந்தமாவேன் 
என்பதே பதிலானது 
என்காதலே..

6.

படபடக்கும் என் நெஞ்சின்
துடிப்பறியும் ஸ்டெதஸ்கோப்
உன் கைகளே...

7.

ரத்த நாளங்களில்
வெள்ளை அணுக்களும்
சிவப்பு அணுக்களுமே
உருமாறி விட்டது
உன் வருகையால்

8.

நீ நினைத்திட்டால்
போதும்
உனை நனைத்திடவே
வருவேன்
மேகமாய் சாரலாய்
உருமாறி

9.

கைகள் இரண்டும்
கோர்த்து விட்ட பிறகு
பயணத்தின் பாதை பற்றிய
கவலையே இல்லை

10.

பார்த்து ரசித்திட
அழகுக்கொண்டவள் 
நானல்ல...

படையெடுத்து வருமளவு
பணத்தைப் வைத்துருப்பவளும் 
அல்ல...

ஆசை மொழியில்
அடைக்கலம் கேப்பவளும் 
நானல்ல...

பதறிப் போன நொடிநேரம்
பற்றிக் கொண்ட 
மனித மனங்களில் 
உறைந்து போகின்றேன்
நானும் பேரன்புக்காரி தான் என்றும்..

11.

இருள் சூழ்ந்த நம்வாழ்வில்
இறைவன் நம் காதலுக்கு கொடுத்த
இந்த மெழுகினால் தான்
இனி வரும் காலம்
நமக்கு வெளிச்சம் கிடைக்கும்
ஆனால் யார் பற்ற வைப்பது
என்பதில் தான்
உன் சிந்தனையென்றால்
நம்மிடம் இருக்கும் ஒற்றை சொற்தீக்குச்சியை
நானே பயன் படுத்துகிறேன்.
மன்னிப்பில் தான் வாழ்கிறது காதல்.

12.

நீ ஏதோ ஒரு விலாசம் விசாரித்த போதே.. அறியாமல் இருந்தேன் உன் பாதசுவடுகளில் என் விலாசம் தொலைந்ததை...!

13.

இந்த காதலில்

உன் 
பேரன்பை பெறுவதை தவிர!!!!

உன்னிடம் பெற்றுக் கொள்ள ஏதும் இல்லை,

14.

கிழிந்த ரூபாய் நோட்டிலும்.. 
வாடிய ரோஜா இதழ்களிலும்
இன்னும்  உதிராமல் ஒட்டிக் கொண்டிருக்கிறது
நம் காதல்..!!

15.

பார்த்து ரசித்திட
அழகுக்கொண்டவள் 
நானல்ல...

படையெடுத்து வருமளவு
பணத்தைப் வைத்துருப்பவளும் 
அல்ல...

ஆசை மொழியில்
அடைக்கலம் கேப்பவளும் 
நானல்ல...

பதறிப் போன நொடிநேரம்
பற்றிக் கொண்ட 
மனித மனங்களில் 
உறைந்து போகின்றேன்
நானும் பேரன்புக்காரி தான் என்றும்

16.

விரல் படும் தூரத்தில் 
இருக்கிறாயா இல்லை 

தொலை தூரத்தில் 
இருக்கிறாயா 

என்பதை பற்றிஎல்லாம் ஏதும் கவலை இல்லை

      நீ என் நினைவுகளில் இருக்கிறாய் அது போதும் பேரழகே 

17.

நேசத்தின் பிடிப்பில் 
நீயும் நானும் நாமாகி 
பயணிப்போம்
வாழ்க்கையெனும் 
பயணத்தில்..!!

18.

விடுதலை இல்லா
சட்டம் வேண்டும் அன்பே
உன் காதல் பிடிக்குள்
சிறை பட்டுக் கிடக்க..!

19.

அன்பைத் தாங்கிய 
ஆலயம் நீ....
அகரவரிசைச் சிற்பம் நீ....
இங்கிவள் 
உன்னை எழுத 
என் உயிர் சேர்ந்த 
உறவும் நீ....
அன்னை வேறாய் 
அகிலத்தடம் வேறாய்
அன்பைச் சுமந்த அடையாளம் நீ..

20.

நிழல் பேசிய நினைவுகள்
நிஜத்தில் பேசும் நிமிடங்கள்
நிரந்தரமாகும் கனவுகள்
நிறைவாகும் கணங்கள்;
ஒன்றுமில்லை.. கனவின் கனங்கள் தான்..