மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 09( துரோணரிடம் பயிற்சி)

சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 09( துரோணரிடம் பயிற்சி)

பரத்வாய முனிவரின் மகன் துரோணர். துரோணர் சிறந்த

அஸ்திரப் பயிற்சி பெற்றவன். அத்துடன் இருவரும் நல்ல

வில் வீரர். பஞ்சால தேசத்தின் அரசனான துருபதன் துரோணருடன் நண்பர்கள். அதனால் துருபதன் பாஞ்சால தேசத்தின் அரசனாக முடிசூடியதும் தனது இராச்சியத்தில் அரைவாசியைத் துரோணருக்குக் கொடுப்பதற்காகக் கூறியிருந்தான். அதைத் துரோணர் நம்பியிருந்தார்.

ஆச்சிரம வாழ்க்கை முடிந்தபின் துரோணர் கிருபருடைய சகோதரியை மணந்து அசுவத்தாமன் என்ற மகனைப் பெற்றார்.

ஒருநாள் பாசுராமர் தன்னிடமிருந்த பொருட்கள்

எல்லாவற்றையும் தானமாகக் கொடுத்து முடிந்தபின் துரோணர் அவரிடம் பொருள் பெறவந்தார். பாசுராமரிடம் பொருட்கள் எதுவும் இல்லாததால் தான் கற்ற வித்தைகள் அனைத்தையும் துரோணருக்கு உபதேசித்தார்.

பாஞ்சாலமன்ன ன்முடிசூட்டப்பட்டது. இதை அறிந்த இறந்ததும் துரோணர் துருபதனுக்கு துருபதனிடஞ்சென்று

முன்பு தனக்குத் தருவதாகச் சொன்ன அரைவாசி நாட்டைத் தரும்படிகேட்டார்.

அதைக்கேட்டுப் பரிகசித்த துருபதன் துரோணரை அவமானப் படுத்தி அனுப்பினான். அதனைால் அவமானமடைந்த துரோணர் தனது மனைவியின் அண்ணனின் வீட்டுக்குச்சென்று தங்கியிருந்தார்.

ஒருநாள் பீஷ்மர், துரோணரை அழைத்துப் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஆயுதப்பயிற்சியளிக்குமாறு கேட்டுக்கொண்டார் அதன்படி துரோணர் அவர்களுக்கு ஆயுதப்பயிற்சியளித்தார். பாண்டவர்கள் மாவீரர்களாயினர். ஆயுதப்பயிற்சி முடிந்ததும் தனது மாணவர்களிடம் துருபதனை உயிருடன்

பிடித்து வந்து தனக்குக் குருதட்சணையாகத் தரும்படி வேண்டினார்.

முதலில் துரியோதனனும் கர்ணனும்

சென்று தோற்றுத்திரும்பினர். பின்னர் அருச்சுனன் சென்று போரிட்டுத் துருபதனைக் கைது செய்து துரோணரின் முன் நிறுத்தினான்.

அதனால் துருபதனுக்குத் துரோணரின் மீது கடுங்கோபம்

உண்டானது. அதனால் அவன் துரோணரைக் கொல்லக் கூடிய ஒருமகனும், அர்ச்சுனனுக்குத் திருமணம் செய்து கொடுக்க ஒருமகளும் வேண்டி யாகம் செய்தான். அதன்படி திருஷ்டத்யும்மன் என்ற மகனும் திரௌபதி என்ற மகளும் அவனுக்குப் பிறந்தனர்.

பாகம் 9 பதிவேற்றப்பட்டுள்ளது அதனை படிக்க

 Click to See more பட்டனை கிளிக் செய்யுங்கள்பின்குறிப்பு:- சிறுவர்கள் வாசித்து பயன்பெறும் வகையில் மிகவும் எளிய வடிவில் முழு மகாபாரதமும் சுருக்கப்பட்டு இங்கே எழுதப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன