சுஜாதாவின் நாவல்கள் - பிரிவோம் சந்திப்போம் | pirivom santhipom Novel free pdf

சுஜாதா எழுதிய பிரிவோம் சந்திப்போம் pdf வடிவில் இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும்

சுஜாதாவின் நாவல்கள் - பிரிவோம் சந்திப்போம் | pirivom santhipom Novel free pdf

சுஜாதா - சிறு அறிமுகம்

சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, கட்டுரை, தொலைக்காட்சி, இணையம், திரைப்படம் என்று கால் பதித்த அனைத்துத் துறைகளிலும் தனது அழுத்தமான, தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் சுஜாதா (1935-2008). ஆண்டாள் முதல் அறிவியல் வரை எதையும் புதுமையாகவும் வசீகரிக்கக்கூடிய வகையிலும் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றவை இவருடைய எழுத்துகள். சுஜாதாவின் விரிவான வாசிப்பும் அதற்கு ஒரு வகையில் காரணம். அறிவியலை பொது வாசகர்களிடம் கொண்டுசென்று சேர்த்ததில் இவருடைய பங்களிப்பு முக்கியமானது. முற்றிலும் புதிய முறையில் பத்தி எழுத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. கணையாழியின் கடைசிப் பக்கங்கள், கற்றதும் பெற்றதும் ஆகியவை அதற்கான சான்றுகள். நைலான் கயிறு, கரையெல்லாம் செண்பகப்பூ, பிரிவோம் சந்திப்போம், என் இனிய இயந்திரா, ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று சுஜாதாவின் படைப்புகள் நூற்றுக்கணக்கில் நீண்டாலும் ஒவ்வொன்றுக்கும் உலகம் முழுக்க வாசகர்கள் நிறைந்திருக்கிறார்கள். உலக சினிமா, சங்க இலக்கியம், ஹைக்கூ, அறிவியல் புனைக்கதை, ஜீனோம், கணிப்பொறியியல், நாட்டார் வழக்கியல், இசை என்று தமிழ் வாசிப்புலகை வளப்படுத்தியதிலும் விரிவுபடுத்தியதிலும் சுஜாதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. சுஜாதாவின் வாசகர் உலகம் ஆச்சரியமூட்டும் வகையில் தினம் தினம் வளர்ந்துகொண்டே செல்வது நமக்கு உணர்த்தும் செய்தி ஒன்றுதான். சுஜாதாவுக்கு மரணமில்லை.

இங்கு பிரிவோம் சந்திப்போம் எனும் அற்புதமான நாவலின் இரு பாகங்களையும் பார்க்கப் போகிறோம். 

வாருங்கள் பாகம் 1 ஐ பார்க்கலாம் ..!

I love you sometimes foolishly and at those moments I do not understand that could not, would not, and should not be so absorbing a thought for you as you are for me.

ஒரு பிரெஞ்சு காதல் கடிதத்திலிருந்து

தி ருநெல்வேலி ஜங்ஷனில் அந்த ரயில் வண்டி தன் எக்ஸ்பிரஸ் ஸ்தானத்தை இழந்து மூன்று பெட்டிகளுக்குக் குறைக்கப்பட்டுக் கடைசி பிளாட்பாரத்தில் புறக்கணிக்கப்பட்டது. ரகுபதி எதிரே இருந்த பெரியவரிடம், ‘ஐயா! கொஞ்சம் இந்தப் பெட்டியைப் பாத்துக்கிறீங்களா? காப்பி சாப்பிட்டுட்டு வந்துர்றேன்' என்றான்.

‘தாராளமாப் போயிட்டு சீக்கிரம் வாங்க. வண்டி புறப்பட்டுறப் போவுது!' ‘இந்த வண்டி லேசில புறப்படாதுங்க, ரெண்டு மணி நேரம் ஆகும்.

இன்ஜின் தேடிக்கிட்டு இருப்பாங்க.' பெரியவர் சிரிக்கவில்லை. ‘அம்பாசமுத்திரத்தில் நிக்குமுங்களா?’

‘நிக்கும், நான் அங்கதானே இறங்கறேன்!’

‘அம்பாசமுத்திரத்தில் எங்கே?'

'நான் பஸ் புடிச்சு பாவநாசம் போறங்க.'

‘பாவநாசத்தில் எங்க?’

‘அங்கிருந்து அப்பர் டாம் போகணுங்க. எங்கப்பாரு அங்க ப்ராஜக்டில் இன்ஜினியரா இருக்காரு.'

‘பேரு?’

‘கோவிந்தராஜ்.’

'உங்களுக்கு டவுன்ல போத்தி ஓட்டல் இருக்குதா?'

'சேச்சே! நாங்கள்ளாம் மதுரைங்க.'

‘மதுரைல எங்க?’

‘உன் தலை மேல' என்று சொல்லும்வகைக்கு எரிச்சல் வந்தது. பெரியவர் ராத்திரி பூரா வாணியம்பாடி விபத்தில் தான் தப்பித்ததைப் பற்றி உரத்த குரலில் பேசி கம்பார்ட்மெண்ட் முழுவதையும் விழிப்பில் வைத்திருந்தார். விபத்தில் போயிருக்க வேண்டும் என்று அநியாயமாக நினைத்தான். பெட்டியை விட்டு வெளியே வந்தான். மழை பெய்ததில் பிளாட்பாரம் நனைந்திருந்தது. வானத்தில் கந்தலாக மேகங்கள் மிச்சமிருந்தன. மேம்பாலத்தில் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் அணுகி, ‘பிரதர் என்கிட்ட ஃபோர் அணாஸ் இருக்கு. இன்னும் ஃபோர் அணாஸ் கிடைச்சா ஒரு காப்பி சாப்பிடுவேன்’ என்றான். தன் சொந்தப் பிரச்னையை அன்னியோன்னிய நண்பனிடம் பேசுவது போலத்தான் இருந்தது அவன் தொனி.

‘பிரதர்! உனக்கும் எனக்கும் அதிக வித்தியாசமில்லை. எனக்கும் வேலையில்லைதான். நீ மேம்பாலத்துக்கு வந்துட்ட, என்னை மேம்பாலத்துக்கு வர எங்கப்பா விட மாட்டாரு!' நாலணா கொடுத்துவிட்டு ஜங்ஷனுக்கு வெளியே வந்தான். கடைக்காரன் முகம் தெரியாமல் வாரப் பத்திரிகைகள் மறைத்திருந்தன. ஒரே சிகரெட் வாங்கி பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டான். இரைச்சலாகி இருந்த ஓட்டலுக்குள் சென்று காது குத்தின பித்தளை டம்ளரில் காப்பி சாப்பிட்டான். பசித்தால் அம்பையில் டிபன் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இன்டர்வியூவின் நினைவு வந்தது. Why do we use AM for video in TV?

ச்சே! பேண்ட்விட்த்! என்ன சுலபமாகப் பதில் சொல்ல வேண்டியது! சட்டென்று சொல்ல முடியாமல் தயங்கி, அவர்கள் மௌனமாகத் தன் முகத்தையே பார்த்துக்கொண்டு காத்திருக்க....

‘ஆல் ரைட், யூ மே கோ!' நிச்சயம் கிடைக்காது! ரகுபதிக்குப் பொதுவாக ஓர் ஆத்திரம் வந்து பக்கத்தில் கிடந்த நிரம்பியிருந்த குப்பைத் தொட்டி ஒன்றை உதைத்தான். பி.இ. பாஸ் பண்ணினாலும் வேலை கிடைக்கும் நிச்சயம் இல்லை. அதற்குப் பின்னும் பரீட்சை, பி.எச்.இ.எல் பரீட்சை, பி.இ.எல் பரீட்சை, என்.டி.பி.சி பரீட்சை! பரீட்சை எழுதியே செத்துச் சுண்ணாம்பாகிப் போய், அப்புறம் அந்தக் கட்டத்தைத் தாண்டி, அசுரனின் உசிர் நிலை கிடைத்ததுபோல இண்டர்வியூ கால் வந்து, கடைசியில் பேண்ட்விட்த் என்கிற ஒரு வார்த்தை பதில் அவன் வாழ்க்கையையே திசை திருப்புகிறது. மற்றொரு கதவு மூடப்படுகிறது!

பெரியவர் அவன் பெட்டிமேல் கைவைத்துக்கொண்டு பத்திரமாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் பார்வையிலிருந்து விலகி சிகரெட் பிடித்தான். மேலே போனால் அதிகம் சிகரெட் பிடிக்க முடியாது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்றுதான் முடியும். அப்பாவுக்குத் தெரிந்துதான் வேண்டும். வேலை கிடைக்கும்வரையாவது சிகரெட் பற்ற இருக்க வேண்டும். வைக்கும் ஒவ்வொரு சமயமும் குற்ற உணர்ச்சி தோன்றும். இது நான் சம்பாதித்த காசில்லை!

வேலை! வேலை! வேலை மாலை அணிந்ததும் உலகமே அவனைப்பார்த்துப் புன்னகைக்கிறது. ஹாலுக்க வரவேற்கிறது. பெண்ணைக் கல்யாணத்துக்குக் கொடுக்க இசைகிறது. அம்பையில் இறங்கினதும் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்தான். அப்பர் டாம் போகும் பஸ் வாசலில் கூட்டம் அதிகமிருந்தது. கண்டக்டர் தனிப்பட்டமுறையில் வெளியே டிக்கெட் கொடுத்துக் கொண்டிருக்க, 'ஐயா, ஒருவிக்ரமசிங்கபுரம்!' 'ஒரு பாபநாசம்!' என்று குரல்கள் கெஞ்சலில்

பல கண்டக்டர், ‘இது பாருங்க, அப்பர் டாம் டிய்ட்டு யாராவது இருக்குதா?’

‘இதோ’ என்று பாய்ந்தான் ரகுபதி. ஒரு நிமிஷம் வேலை கிடைத்துவிட்ட மாதிரி சந்தோஷமாக இருந்தது. அவனுக்கு. 'அண்ணாச்சி, அம்பாசமுத்திரத்துல எவ்வளவுங்க ஜிடி?' என்று டிரைவரைப் பார்த்துக் கண்டக்டர் கேட்க, கட்டபொம்மனாகப் பெயர் மாறினாலும் பழைய டி.வி.எஸ் சம்பிரதாயங்கள் இன்னும் இருப்பதும் தூரப் பிரயாணிகளுக்கு ஒரு நியாயம் இருப்பதும் அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. இந்த கண்டக்டரைப் பற்றி டயரியில் எழுதவேண்டும். நிரம்பி வழிந்த பஸ்ஸில் திருநெல்வேலி இயங்கியது.

‘என்னவே, பாத்துக்கிட்டு நிக்கயளே, போவட்டும்!' ‘ஏன் போட்டுத் தொண்டையைத் தீட்டுதே, டயம் இருக்கில்லை?’

‘என்னடே, ஒன்னை ஆசுத்திரிலே வெச்சுப் பாத்தனே?' எல்லாவற்றையும் அங்க வெச்சு, இங்க வெச்சுப் பார்க்கும் இந்தத் தமிழ் அவனுக்குப் பல தருணங்களில் புரியாது. இருந்தும் தாமிரபரணியைப்போல ஒரு களங்கமற்ற தன்மை எல்லார் சகவாசத்திலும் இருக்கிறது. பஸ் புறப்படுவது அவன் எதிர்காலத்தைப்போலத் தீர்மானமில்லாமல் இருந்தது. அப்பா இருக்கிறவரைக்கும் கவலையில்லை. ‘டியர் சார்' என்று டைப் அடித்த விண்ணப்பங்களாக மற்றொரு நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு காலம் தாழ்த்தலாம். என்றாவது ஒரு நாள், யாராவது ஏமாந்து வேலை கொடுக்காமலா இருக்கப் போகிறார்கள்?

'மிஸ்டர் ரகுபதி, இந்த பென்சிலை வைத்துக்கொண்டு அந்த மூலை நேர் கோணமா என்று கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள்!'

யோசனை, தவிப்பு! ‘ஐம் ஸாரி சார், ஐம் அனேபிள் டு ஆன்ஸர் தட்!’ 'போங்கடா பொங்கிப் பசங்களா' என்று பதில் அளித்திருக்க வேண்டும்.

பஸ் புறப்பட்டு விக்கிரமசிங்கபுரம்வரை கூட்டம் அம்மியது. ஹார்வி மில்ஸ் தொழிலாளர்கள் எம்.ஜி.ஆர் க்யூவில் நின்று கொண்டிருந்தார்கள். இ.எஸ்.ஐ. டிஸ்பென்சரி இடம் மாறியிருந்தது. தாமிரபரணி நதி தெரிந்தது. மழை நிரம்பிச் சலசலத்தது. பாவநாசத்தில் குரங்குகள் மாறவில்லை. மீன்களுக்குப் பொரி அள்ளிப் போடுபவர்களும் அகஸ்தியர் காலத்திலிருந்து மாறவில்லை. மலை தெரிந்தது. பச்சைப் போர்வையில் பாதை வெட்டப்பட்டு மோகனமாகப் பள்ளத்தாக்கை அங்கங்கே காட்டிக்கொண்டு பஸ் ஊர்ந்தது. பவர் ஹவுஸ் தெரிந்தது. அருகே புதிய கட்டடம் பாதி வளர்ந்திருந்தது. பெரிய பைப் குழாய்கள் ஜப்பானிய இன்ஜினியர்கள் வருகைக்காகக் காத்திருந்தன. வெள்ளித் தகடு போல டைவர்ஷன் வியரில் தண்ணீர் ததும்பிக்கொண்டிருந்தது

இறங்கி, பெட்டியை எடுத்துக்கொண்டு நடந்தான். சரியும் பாதையில் அஸ்பெஸ்டாஸ் வீட்டுக் கூரைகள் தெரிந்தன. கல்யாண ரிசப்ஷன் போல லேசாகத் தூறல் தெளித்தது. டென்னிஸ் கோர்ட் மௌனமாக இருந்தது. பிராஜக்ட் ஆபீசரின் வீடு தனியாக உயர்ந்து தெரிந்தது. மரக்கிளைகளுக்கு இடையில் நதி மறுபடி தெரிந்தது. அப்பா இந்நேரம் சைட்டிலிருந்து வந்திருப்பார். முதல் கேள்வி, ‘என்ன ஆச்சு இன்டர்வ்யூ?' கேட்டுத்தான் ஆகவேண்டும். அவர் அப்பா இல்லையா? மனைவியை இழந்தும் கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் தன் ஒரே மகனுக்குத் தியாகம் செய்து படிக்க வைத்தவர் இல்லையா? தன்னைப் போல் மற்றொரு இன்ஜினியர் உருவாகவேண்டும் என்று ஆசைப்படுகிறவர் இல்லையா? இன்ஜினியராகி, கல்யாணம் செய்துகொண்டு இன்னொரு இன்ஜினியரைப் பெற்றெடுத்து....

மேலும் படிக்க… கீழே உள்ள Download பட்டனை கிளிக் செய்யுங்கள்

Download