புள்ளப்பூச்சி என்றால் என்ன?

பிள்ளைப்பூச்சி என்பதே புள்ளப்பூச்சியாக மருவியது என்ற தவறான கருத்தே பலராலும் நம்பப்படுகிறது. ஆனால் உண்மை அர்த்தம் அதுவல்ல. அதனை கீழ்க்காணும் வேர்ச்சொல் விளக்கம் நமக்கு உணர்த்துகிறது.

புள்ளப்பூச்சி என்றால் என்ன?

புள்ளப்பூச்சி என்பதே சரியான பொருள் பொதிந்த பெயர். புள்ளப்பூச்சி என்றால் தோண்டும் பூச்சி என்று பொருள்.

அகராதியின் விளக்கங்களுக்கமைய

" இப்பூச்சி 'கிரில்லோடால்பிடே' என்ற குடும்பத்தின் பூச்சி வகைகளுள் ஒன்றாகும்.

பிள்ளைப்பூச்சி என அழைக்கப்படும் 

இப்பூச்சி பேச்சு வழக்கில் 'புள்ளப்பூச்சி' என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றது.(ஆங்கிலத்தில் Gryllotalpa brachyptera)"

புள் - என்றால் தோண்டுதல், துளையிடுதல் என்று பொருள்.

இப்பூச்சிகள் மண்ணை வலுவாக தோண்டக்கூடியதாகவும் துளையிட்டு உட்செல்லும் ஆற்றல் கொண்டதாகவும் காணப்படுவதனால் நம் முன்னோர்கள் இட்ட காரணப்பெயர் - புள்ளப்பூச்சி ஆகும்புள் - என்ற அடிச்சொல் துளைப் பொருள் குறித்ததாகும்.

புள் = துளை, தோண்டு.

புள்ளுதல் = துளைத்தல், குத்துதல், தோண்டுதல்.

புள் > புல் = உள்ளார்ந்த துளையுள்ள தாவர வகை.

புள் > புழு.

புள் > புழை = துளை.

புள் > புள்ளாங்குழல் > புல்லாங்குழல்.

புள் > புள்ளி. புள் = பறவை. அலகினால்  கொத்தி /குத்தித் தின்னும் இயல்புடைய  பறவைக்கு 'புள்' - எனவும் பெயர் உண்டு. 

புள் > புள்ளினம்.

ஹே

Novels tamil Ponniyin selvan comics pdf | பொன்னிணியின் செல்வன் காமிக்ஸ் Pdf Free download