கொரோனா காரணமாக காமெடி நடிகர் பாண்டு திடீர் மரணம்!

கொரோனா காரணமாக காமெடி நடிகர் பாண்டு திடீர் மரணம்!

பொதுவாகவே காமெடி நடிகர்களுக்கென்று தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு. நாகேஷ், சந்திரபாபு தொடங்கி யோகி பாபு வரை பல ஜாம்பவான் காமெடியன்கள் இருந்தாலும், காமெடி நடிகர் பாண்டுவுக்கு திரைத்துறையில் நல்ல வரவேற்பு இருந்தது. இவர் தனியாக வந்தாலே அதகளம் செய்வார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, என எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். காதல் கோட்டை படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மற்றும் தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் இவர் ஏற்றி இருந்த கதாபாத்திரமும் இன்னும் பல வருடங்களுக்கு பேசப்படும்.

இப்படி தமிழ் சினிமாத் திரை உலகை ஆண்ட இவருக்கு சமீபகாலமாக தொடர்ந்து படவாய்ப்புகள் அமையவில்லை. நகைச்சுவையில் உச்சம் பெற வேண்டும் என்னும் ஆசையோடு சென்னைக்கு வந்தவர், இறைவன் ஆசீர்வாதத்தால் ஓரளவு பிரபலமாகி இன்று நம்மை விட்டு பிரிந்து உள்ளார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. இதனை அடுத்து திரை உலகினர் அவருக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.