ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023

2022ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனால் எந்த ராசிக்கு என்ன பலன் என்பதை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

1. மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்தில்இருந்தும் காப்பாற்றக்கூடிய பரந்த மனப்பான்மைகொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்குஇது நாள் வரை 2, 8-ல் சஞ்சரித்த ராகு, கேதுதற்போது ஏற்படும் ராகு கேது பெயர்ச்சியால்திருக்கணிப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). சர்ப கிரகங்களான ராகு ஜென்மராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யஉள்ளனர். செவ்வாயின் ராசியில் பிறந்த உங்களுக்குராகு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் சிலநேரங்களில் உங்கள் நிதானத்தை இழக்க நேரிடும்என்பதால் எதை செய்வது என்றாலும் யோசித்துசெய்வது நல்லது. முன்கோபத்தை குறைத்துகொண்டு எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால்தான் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால்விட்டு கொடுத்து நடப்பது சிறப்பு. அதிலும் குறிப்பாகபுது மண தம்பதிகள் மிகவும் எச்சரிக்கையுடன்இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கானமுயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அலர்ஜி பிரச்சினை, மனைவிக்கு உடம்பு பாதிப்புகள் ஏற்படலாம்என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது.

                இக்காலங்களில் ஆண்டு கோளான குருஉங்கள் ராசிக்கு 13-04-2022 முதல் 22-04-2023 முடிய விரய ஸ்தாதனமான 12லும் அதன் பின்புஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் ஏற்ற தாழ்வுகள் தான் இருக்குமே தவிரதாராள வரவுகளை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு உங்கள்கையில் இருப்பதை வைத்து செலவு செய்தால்நிலைமையை சமாளிக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாககொடுப்பது, வாக்குறுதி அளிப்பது, முன் ஜாமீன்கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள்ஏற்படலாம் என்பதால் கடினமாக முயற்சித்தால் தான்ஒரு சிறு செயலையும் செய்து முடிக்க முடியும். 2023 ஏப்ரலுக்கு பிறகு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும்போது 5, 7, 9-ஆம் வீட்டை பார்க்கும் என்பதால்திருமண சுப காரிய முயற்சிகள் எளிதில் கைகூடும்யோகமும் பிள்ளைகள் மூலம் நற்பலனும் கிடைக்கும்.                

                ஒரு ராசியில் நீண்ட நாட்கள் சஞ்சரிக்கும்கிரகமான சனி உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால்தொழில் வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைபயன்படுத்திக் கொண்டால் போட்ட முதலீட்டைஎடுக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள்பணியில் கவனமாக செயல்படுவது நல்லது. சிறிதுகாலம் சற்று பொறுமையுடன் இருப்பது உத்தமம். திருக்கணிதப்படி வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை சனி அதிசாரமாக 11-ல் சஞ்சரிக்கஇருப்பதும், அதன் பிறகு முழுமையாக வரும் 17-01-2023 முதல் சனி 11-ல் சஞ்சாரம் செய்யும் காலத்தில்தொழில் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாகஇருக்கும். தொழிலில் அதிகபடியான லாபத்தைஅடையும் யோகமும், தொழிலை விருத்தி செய்யவும்முடியும். உத்தியோகஸ்தர்கள் திறமைகள்பாராட்டப்படும். உயர் பதவியை அடையும் வாய்ப்புகிடைக்கும். உங்கள் வாழ்க்கை தரம் உயரும். பல்வேறு வகையில் முன்னேற்றங்களை அடையமுடியும்.

  

உடல் ஆரோக்கியம்

உடல் நிலை சற்று சாதகமாக இருக்கும், குருபார்வை 6, 8-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் கடந்தகால சோர்வுகள் விலகி நீங்கள் சற்று சுறுசுறுப்பாகசெயல்படுவீர்கள் என்றாலும் முன் கோபத்தைகுறைத்து கொள்வது நல்லது. மனைவிபிள்ளைகளுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்புகள்ஏற்படும் என்பதால் அவர்கள் ஆரோக்கியத்தில் சற்றுகவனம் செலுத்துவது நல்லது. தேவையற்றஅலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம்என்பதால் பயணங்களில் கவனம் தேவை. வீண்குழப்பங்களால் மன நிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள்தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து செல்வதுநல்லது. உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது சிறப்பு. பண வரவுகள் சற்று சாதகமாகஇருப்பதால் குடும்ப சூழ்நிலையை சமாளிக்க முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில்சுபசெலவுகள் ஏற்படும். தெய்வ தரிசனங்களுக்காகபயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகம்

பணியில் வேலைபளு அதிகமாக இருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாகஇருப்பதால் எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில்செய்து முடித்து விட முடியும். தேவையின்றி பிறர்விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பதுநல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள்ஏற்பட்டு மனைவி பிள்ளைகளை விட்டுவெளியிடங்களில் தங்க நேரிடும். உயர்அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானம்தேவை. புதிய வேலை தேடுபவர்கள் தற்போதுகிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால்2023 ஜனவரிக்கு பிறகு உங்களுக்கு ஒரு உயர்வானநிலை காத்திருக்கிறது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்குவேலையாட்களையும், கூட்டாளிகளையும்அனுசரித்து சென்றால் நற்பலனை பெறுவீர்கள். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே உங்கள்இலக்கை அடைய முடியும். தொழில் வளர்ச்சிக்காகஅதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். நிறையபோட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். பெரியமுதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும்காரியங்களை தற்போது தவிர்த்து விட்டு இருக்கும்ஆடர்களை கை நழவாமல் பார்த்து கொள்வதுநல்லது. சனி 2023 முதல் 11-ல் சஞ்சரிக்கும்காலத்தில் நல்லதொரு வளர்ச்சியை தொழிலில்அடைய முடியும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைகையாலும் போது ஒரு முறைக்கு பல முறையோசித்து செயல்பட்டால் வீண் இழப்பை தவிர்க்கமுடியும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதிகொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில்கவனமாக செயல்படுவது நல்லது. கடந்த கால வம்புவழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். விரைவில் நல்ல மாற்றங்களை பெற முடியும்.

அரசியல்

உங்களது பெயர் புகழுக்கு எந்த விதத்திலும் குறைஏற்படாது. கட்சி பணிகளுக்காக நிறையசெலவுகளை செய்ய வேண்டியிருக்கும். முன்கோபத்தை குறைத்து கொள்வது, மேடைபேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது உடன்பழகுபவர்களிடமும் எச்சரிக்கையுடன் இருப்பது, பத்திரிக்கையாளர்களை பகைத்து கொள்ளாதுஇருப்பது நல்லது. பணவரவுகள் தாராளமாக இல்லைஎன்றாலும் உங்கள் தேவைக்கு ஏற்றவாறு அமையும். தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால்எதிலும் பொறுமையுடன் இருக்கவும். 

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்டபாட்டிற்கான பலனைப் பெறுவீர்கள். அரசு வழியில்எதிர்பார்க்கும் மானிய உதவிகள் சற்று தாமதமாககிடைக்கும். சந்தையில் விளைபொருளுக்கு ஏற்றவிலை சற்று குறைவாக கிடைக்கும். பொருளாதாரநிலை எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. நெருங்கியவர்களையும் பங்காளிகளையும்அனுசரித்து சென்றால் எதையும் சமாளித்து விடமுடியும்.

கலைஞர்கள்

தகுந்த கதா பாத்திரங்கள் கிடைத்து சமுதாயத்தில்நல்ல நிலையை அடைவீர்கள். போட்டி, பொறாமைகள் அதிகமாக இருந்தாலும் எதையும்சமாளிக்கும் பலம் உங்களிடம் இருக்கும். பணவரவுகள் சற்று சாதகமாக அமையும். அதிகஅலைச்சலால் சுகபோக வாழ்க்கையில் சிறிதுபாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில்சற்று கவனம் செலுத்தவும்.

பெண்கள்

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும் காலம்என்பதால் விட்டு கொடுத்து செல்லவும். மற்றவர்கள்விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். குடும்பவிஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கவும். உடல் நலத்தில்பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடுடன் இருக்கவும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பரசெலவுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.

மாணவ- மாணவியர்

கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். நல்லமதிப்பெண் பெற்று நல்ல பெயர் எடுப்பீர்கள். உடல்நிலை மந்தமாக இருக்கும் எதிலும் பொறுமையுடன்இருப்பது நல்லது. தேவையற்ற நண்பர்களின்சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்துசெல்லும் என்பதால் கவனம் தேவை. பெரியமனிதர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாகநட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

ஜென்ம ராசியில் ராகு சூரியன் நட்சத்திரத்தில்சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன்செயல்படுவது நல்லது. குரு 12-ல் சஞ்சரிப்பதால்பணவரவில் தேக்கங்கள் இருந்தாலும் சனிஅதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 11-ல்சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களைஅடைவீர்கள். 7-ல் சஞ்சரிக்கும் கேது குருநட்சத்திரத்தில் இருப்பதால் உடனிருப்பவர்கள்உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடல்ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும்அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். முன் கோபத்தை குறைப்பது, பேச்சில்நிதானத்தை கடைபிடிப்பது, கணவன்-- மனைவிஇடையே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரசெலவுகளை குறைப்பது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாகசெயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில்இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதியவாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம்ஏற்படும். வேலையாட்களால் தேவையற்றபிரச்சினைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்தகடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும்கவனம் செலுத்தினால் தேவையற்ற பிரச்சினைகளைகுறைத்துக் கொள்ள முடியும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாகநட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ஜென்ம ராசியில் ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில், 7-ல்கேது குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்நெருங்கியவர்களை அனுசரித்து சென்றால்உங்களது பொருளாதார நிலை சற்று சாதகமாகஇருக்கும். சனி 10-ல், குரு 12-ல் சஞ்சரிப்பதால்அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தள்ளிவைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவசெலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவிஇடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால்தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி ஒற்றுமைகுறைவுகள் உண்டாகும். புத்திரர்களால் நிம்மதிகுறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும்விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால்குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பரசெலவுகளை குறைத்து கொண்டால் வீண்விரயங்களை தவிர்க்க முடியும். எடுக்கும்முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவதுவெற்றியினைப் பெற்று விடுவீர்கள்.------ தொழில்வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்றநிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும்தொழிலாளர்கள் தேவையற்ற பிரச்சினைகளைஏற்படுத்துவார்கள் என்றாலும் செய்ய வேண்டியபணிகளை சிறப்பாக செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளுஅதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின்ஆதரவுகள் கிடைக்கும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதிநட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ஜென்ம ராசியில் ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில், 7-ல்கேது ராகு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சனி 10-ல், குரு 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும்சிக்கனமாக இருப்பது நல்லது. திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள்ஏற்படும். பணம் வரவுகளில் ஏற்ற இறக்கமானநிலையில் இருக்கும். பூமி, மனை, வண்டிவாகனங்கள் போன்றவற்றால் வீண் விரயங்கள்உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாககூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் திறம்படசெயல்பட முடியாமல் போகும். உற்றார்உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டிபொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும்அதிகரிப்பதால் வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கூட்டாளிகளும் வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணம்கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களேதுரோகம் செய்வார்கள் என்பதால் கவனமாகஇருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்குஎதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படுவதோடு பிறர்செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியசூழ்நிலைகள் உண்டாகும். உங்கள் உழைப்பிற்கானஊதியம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால்அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதிநட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

சர்ப கிரகமான ராகு ஜென்ம ராசியில் அசுவனிநட்சத்திரத்தில், 7-ல் கேது சுவாதி நட்சத்திரத்தில்சஞ்சரிப்பதால் நீங்கள் உணர்ச்சி வசப்படாமல்நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சனி லாபஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள்தாராளமாக இருக்கும் நிலை கடந்த காலநெருக்கடிகள் விலகி ஏற்றங்களை அடையும் யோகம்உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தையும்பூர்த்தி செய்துவிட முடியும். வரும் 22-4-2023 முதல்ஜென்ம ராசியில் குரு சஞ்சரித்து 7-ஆம் வீட்டைபார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமானசுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள்ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச்செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம்தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பதுஉத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரியதொகைகளை பிறருக்கு கடனாக கொடுத்தால் வீண்பிரச்சினைகளை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம்செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும்காரியங்களில்  கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதுநல்லது. கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றிகிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்படசெயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைபெறுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள்கிடைக்கும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரைநட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ஜென்ம ராசியில் ராகு அசுவனி நட்சத்திரத்தில், 7-ல்கேது சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது, சனி 11-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் சகலசௌபாக்கியங்களையும் நீங்கள் அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல்ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்றபாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில்திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில்உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகளைஎதிர் கொள்ள நேரிடும். கணவன்- மனைவி இடையேதேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது மூலம்குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாகசெயல்படுவார்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்குஇருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கானமுயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்லவரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சற்றுசாதகமாக இருக்கும். கொடுத்த கடன்களைவசூலிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. தொழிலில் நல்ல முன்னேற்றம், வியாபாரத்தைஅபிவிருத்தி செய்யும் யோகம் உண்டாகும். வரவேண்டிய லாபங்கள் தடையின்றி வரும். வெளியூர்வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நற்பலனைஅடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர்விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள்பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,                 நிறம் - ஆழ்சிவப்பு                              கிழமை - செவ்வாய்

கல் - பவளம்               திசை - தெற்கு                          தெய்வம் - முருகன்

 

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்மராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் ராகுகாலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில்விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனைசெய்வது, சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும்பைரவரையும் வணங்குவது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்புஆடைகள், கைகுட்டை போன்றவற்றைபயன்படுத்துவது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனைசெய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்குதானம் தருவது நல்லது.

உங்களுக்கு குரு பகவான் சாதகமின்ற சஞ்சரிப்பதால்வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குருதட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாககோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால்அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முகருத்ராட்சம் அணிவதும், குரு எந்திரம் வைத்துவழிபடுவதும் நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியபிராமணர்களுக்கு தானம் செய்யவும்.

2. ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

சாந்தமான குணம் இருந்தாலும் கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாதஇயல்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, சர்ப கிரகமான ராகு ஜென்மராசியில், கேது 7-ல் இது நாள் வரை சஞ்சரித்ததால் பல நிம்மதிகுறைவுகளை குடும்பத்தில் சந்தித்து வந்த உங்களுக்கு தற்போதுஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் திருகணிதப் பஞ்சாங்கப்படிவரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). ராகு ஜென்ம ராசிக்கு 12-ஆம் வீட்டிலும், கேது 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். இதனால் உங்கள்வாழ்வில் நல்லதொரு மாற்றங்கள் உறுதியாக ஏற்படும். குடும்பத்தில்இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தை விட்டு பிரிந்துஇருப்பவர்களுக்கு குடும்பத்துடன் இணையும் நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் இருந்த மன கசப்புகள் விலகி சுமுக நிலைநிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உங்கள் பலம்அதிகரித்து இது வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் முழுமையாகமறையும்.

ஆண்டு கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை சஞ்சாரம் செய்யஉள்ளதால் பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள்யாவும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில்காப்பாற்ற முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும்யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள்படிப்படியான வளர்ச்சியை அடைய முடியும். கூட்டாளிகளும்தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று சிந்தித்து செயல்பட்டால்எதிர்பார்க்கும் உயர்வினை அடையலாம்.

குரு வரும் 22-04-2023 முதல் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்கஉள்ளதால் இக்காலத்தில் பொருளாதார ரீதியாக சற்று தேக்கங்கள்ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.  

                உங்கள் ராசிக்கு தர்ம கர்மாதிபதியான சனி பாக்கியஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்துஅன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வெளியூர்தொடர்புகள் மூலம் நல்ல பலனை அடையும் யோகம் உண்டு. திருக்கணிதப்படி வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரைஅதிசாரமாகவும் அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் ஜீவனஸ்தானமான 10-ல் சனி சஞ்சரிக்க உள்ள காலத்தில் தொழில்வியாபாரத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில்சுறுசுறுப்பாக செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். கடந்த காலஅலைச்சல் டென்ஷன்கள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களுக்குஇருந்து வந்த மருத்துவ செலவுகள் மறையும். நீண்ட நாட்களாகமருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு படிப்படியாகமுன்னேற்றம் உண்டாகும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

பண வரவுகள் மிகச் சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும்பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மங்களகரமானசுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமைநிலவும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது உறவினர்களை அனுசரித்துசெல்வது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்ககூடிய யோகம் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்தியோகம்

பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால்மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதியஉயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர்வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம்நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதிலும்திறம்பட செயல்பட முடியும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமானநிலையிருப்பதால் லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில்எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளையும்வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர்வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் புதிய ஆடர்கள் கிடைத்து லாபத்தைஅடைய முடியும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களைமேற்கொள்வீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரியதொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெறுவீர்கள் என்றாலும் சற்றுகவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் யாவும்தடையின்றி வசூலாகும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும்.

அரசியல்

பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள்பெருகுவதால் அவர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யகூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்துஇடங்களிலும் ஆதரவுகள் பெருகும் என்றாலும் கவனத்துடன் பேசுவதுநல்லது. கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களைமேற்கொள்வீர்கள். பத்திரிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சிஅளிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்றவிலை கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம்மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். உற்றார்உறவினர்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

கலைஞர்கள்

மக்களின் ஆதரவும், ரசிகர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால்எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும். வர வேண்டியபணத்தொகைகளில் சற்று இழுபறி நிலை இருந்தாலும் வர வேண்டியநேரத்தில் கைக்கு கிடைக்கும். படப்பிடிப்பிற்காக செல்லும்பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கார் பங்களா போன்றவற்றைவாங்கும் வாய்ப்பு அமையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில்திறம்பட செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையேஅன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார்உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பொன்பொருள் சேரும். தாய் வழி சொத்துக்களால் அனுகூலப்பலன்களை பெறமுடியும்.

மாணவ மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்லமதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப்பெறுவீர்கள். கல்விக்காக வெளியூர் செல்வீர்கள். நல்ல நட்புகளால்அனுகூலப்பலன் உண்டாகும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில்பரிசுகளைப் பெறுவார்கள். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை, தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை போன்ற யாவும் விலகும். 

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

உங்கள் ராசிக்கு 6-ல் கேது குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், லாபஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும்அமைப்பாகும். கடந்த கால சோதனைகள் மறைந்து வளமானபலன்களை பெறுவீர்கள். ராகு 12-ல் சஞ்சரிப்பதால் வெளியூர்தொடர்புகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். பணவரவுகள்தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள்படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமைஅதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக்குறைந்து நிம்மதி நிலவும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதுநல்லது. கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உடல்ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சீராகும். உற்றார்உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அவர்களால்கிடைக்க வேண்டி உதவிகள் கிடைக்கும். திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடக்கும். புத்திர வழியில்மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும்எண்ணங்கள் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம்கிடைக்கும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால்அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில்இருப்பவர்கள் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வெளியூர்வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள்நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ஜென்ம ராசிக்கு 6-ல் கேது, 9-ல் சனி, 11-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள்நினைத்ததெல்லாம் நடக்க கூடிய இனிமையான காலமாக இக்காலம்அமையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். ராகு12-ல் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராதஅனுகூலங்களை நீங்கள் அடைவீர்கள். உங்களுக்குள்ள எதிர்ப்புகள்பிரச்சினைகள் யாவும் குறையும். எதிர்பாராத திடீர் தனவரவுகள்உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். உடல்ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில்தெம்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர் ஓரளவுக்கு ஆதரவாகநடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாகஅமையும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள்மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப்பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள்கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்யும் அளவிற்கு நல்லமுன்னேற்றம் ஏற்படும். வேலையாட்கள் உதவியாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபங்கள் கிடைக்கும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

கேது 6-ல் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும்தைரியத்துடன் செயல்படுவீர்கள். குரு 11-ல் சஞ்சரிப்பதால்பணவரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ராகு 12-ல் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் ஆடம்பரசெலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. மங்களகரமானசுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமைசிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் உங்கள்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்தமந்தநிலை விலகி அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன்செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம்காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள்ஆதரவாக நடப்பதால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைத்துகடன் சுமைகள் சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும்உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தங்கள் பணிகளில்மட்டும் கவனம் செலுத்துவது முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடுசெய்யாது இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்குதகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

கேது சுவாதி நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமானபலன்களை பெறுவீர்கள். குரு 11-ல் வரும் 22-04-2023 வரைசஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை அடைவீர்கள். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சற்றுபொறுமையுடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில்மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்தமறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்றுஅக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவசெலவுகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கானமுயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு சாதகமான பலனைப் பெறுவீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள்நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார் உறவினர்களின்ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம்கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும்என்றாலும் 22-04-2023 முதல் குரு 12-ல் இருப்பதால் எதிர்பாராத சுபவிரயங்கள் ஏற்பட கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். பெரிய தொகைகளைபிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களைவசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள்எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான பதவி உயர்வுகளையும்அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றிநடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

கேது செவ்வாய் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள்உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும் சனி 10-ல், குரு12-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக தேவையற்ற நெருக்கடிகள்ஏற்படும். ------ராகு 12-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் பயணங்கள்மேற்கொள்கின்ற போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் வெளி ஆட்களால்ஏற்படும் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும். பேச்சில் நிதானத்தைகடைபிடிப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலஎதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றேவிலகும். புத்திர வழியில் சிறுசிறு வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச்செலவுகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுகஎதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும்வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. அதிகதொகை கொண்ட செயல்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதியஉயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வேலைபளு அதிகரிப்பதால் ஒய்வுநேரம் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் உங்களுக்குகிடைப்பதால் மன நிம்மதி ஏற்படும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,     நிறம் - வெண்மை, நீலம்,                கிழமை - வெள்ளி, சனி

கல் -  வைரம்              திசை - தென்கிழக்கு,         தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி

 

பரிகாரம்

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12-ல் ராகுசஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில்விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. மந்தாரைமலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது அம்மனுக்கு குங்குமஅபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றைபயன்படுத்துவது நல்லது.

3. மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

நல்ல தீர்க்கமான சிந்தனையும், அறிவாற்றலும், நினைவாற்றலும்கொண்ட மிதுனராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை 6, 12-ல் சஞ்சரித்த ராகு கேது தற்போது ஏற்பட உள்ள இடபெயர்ச்சியால்திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). சர்பகிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 11-ஆம் வீட்டிலும், கேது பகவான்5-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள் எதிர் நீச்சல்போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். ராகு11-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் சிலகிடைத்து குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். தேவையற்ற செலவுகளைகுறைத்து கொண்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். கேது 5-ல் இருப்பதால் வயிறு பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம்கருத்து வேறுப்பாடு, பூர்வீக சொத்து ரீதியாக பிரச்சினை ஏற்பட வாய்ப்புஉள்ளதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில்பிள்ளைகளால் நிம்மதி குறைவு ஏற்படலாம். உணவு விஷயத்தில் சற்றுகவனம் செலுத்துவது நல்லது.

ஆண்டு கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்யஉள்ளதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளைஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் சற்று நிதானம்தேவை. எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே இருப்பதை தக்கவைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில்சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலைபளு சற்றுஅதிகப்படியாக இருக்கும். உழைப்பிற்கான பலனை அடைய இடையூறுஏற்படும். சுப காரியங்கள் தாமதம் ஆகும். அசையா சொத்து வழியில் சுபசெலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும் என்பதால்கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும்.

10-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 22-04-2023 முதல் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் குருமாற்றத்திற்கு பிறகு பண வரவுகளில் முன்னேற்றம் ஏற்படும். கடன்கள்குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த நெருக்கடிகள் குறையும். கூட்டாளிகள் மற்றும்தொழிலாளர்களின் ஆதரவுகளால் தொழிலில் இருந்த பிரச்சினைகள்குறைந்து லாபம் அதிகரிக்கும்.  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்தஇடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் கிடைக்கும். எதிலும் திறம்படசெயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். 

சனி 8-ல் சஞ்சரித்து உங்களுக்கு அஷ்டமச்சனி நடைபெறுவதால்நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உடல் நலத்தில்அக்கறை எடுத்து கொள்வது உற்றார் உறவினர்களை அனுசரித்துசெல்வது நல்லது. திருக்கணிதபடி வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை அதிசாரமாகவும், அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் சனி 9-ல் சஞ்சரிக்க இருக்கும் இக்காலத்தில் உடல்ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நிலை, உங்களுக்கு உள்ளநெருக்கடிகள் விலகும் அமைப்பு உண்டாகும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும்அன்றாட பணிகளில் திறம்பட செய்து முடிக்க முடியும். குடும்பத்தில்உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். புத்திர வழியில்தேவையற்ற கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும். பயணங்களால்அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்வதுநல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது மருத்துவ காப்பீடுஎடுத்து கொள்வது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமணசுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் தீவிர முயற்சிக்கு பின்புநல்லது நடக்கும். உற்றார் உறவினர்களிடம் பேசும் போது சற்றுகவனத்துடன் இருப்பது நல்லது. புரிந்து கொள்ளாமல் பிரிந்துசென்றவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாகஇருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படவும். பூர்வீகசொத்துக்கள் ரீதியாக சிறிது மன நிம்மதி குறைவு ஏற்படும்,

உத்தியோகம்

பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் உங்களது உடல்நிலை ஒத்துழைக்காது. எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப் பின் கிட்டும். பொருளாதாரரீதியாக தேக்க நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளுகுறையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்போதுபயன்படுத்தி கொண்டால் 2023-ல் மிகவும் உயர்வான நிலையை அடையமுடியும்.

தொழில் வியாபாரம்

செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும்உங்களது உழைப்பு சற்று அதிகமாக இருக்கும். கூட்டாளிகளின்ஒத்துழைப்பால் சில பிரச்சினைகளை சமாளிக்க முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர்தொடர்புகள் மூலம் அனுகூலம் ஏற்படும். போட்டி பொறாமைகளால்மனநிம்மதி குறையும். நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்கநேரிடும். அதிக முதலீடு விஷயத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தற்போது சற்று பொறுமையுடன் இருந்தால் 2023-ல் தொழிலில் நல்லமுன்னேற்றங்களை அடையலாம்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுத்தகடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளைஈடுபடுத்தும் போது கவனத்துடன் செயல்பட்டால் லாபம் காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவிஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வம்பு வழக்குகளில் சற்றுஇழுபறி நிலை நீடித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்

மேலிடத்தில் உள்ளவர்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களைமேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு பங்கம்ஏற்படாது. மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எடுக்கும்காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடை பேச்சுகளில்நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறையபயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்

உழைப்பு அதிகமாக இருந்தாலும் பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். வேலையாட்களை சற்றுஅனுசரித்து சென்றால் அவர்களது ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் தக்கநேரத்தில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில்பங்காளிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம் என்பதால்பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்

கிடைத்த வாய்ப்புகளை கைநழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வதுநல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். சுக வாழ்வுக்குபஞ்சம் ஏற்படாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வதுநல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பெரியதொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன்செயல்படவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப்பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி இடையேமகிழ்ச்சி நிலவும். தடைபட்ட திருமண சுப காரியங்களில் தடை விலகிகைகூடும். புத்திர வழியில் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றிமறையும். பண வரவுகள் தக்க நேரத்தில் கிடைப்பதால் குடும்பத்தில்சுபிட்சமான நிலையிருக்கும். முன் கோபத்தை குறைத்துக் கொண்டுஉற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டுபோட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர்ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். நல்ல நட்புகளால் பலநன்மைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் நற்பலன்கிடைக்கும்.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

உங்கள் ராசிக்கு ராகு சூரியன் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில்சஞ்சரிப்பதால் எதிர்பாராத சில அனுகூலங்களை அடைவீர்கள். குரு10-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்ற இறக்கமான பலன்களேஉண்டாகும். சனி வரும் 29-04-2022 முதல் அதிசாரமாக 9-ல்சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள ஆரோக்கிய குறைப்பாடுகள் விலகிநல்லது நடக்கும். 5-ல் சஞ்சரிக்கும் கேது குரு நட்சத்திரத்தில்இருப்பதால் ஆன்மீக பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.  தொழில்வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் கவனமாக செயல்பட்டால் அனுகூலம்உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவதுவெற்றியினைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை எதிர்கொள்ளும்ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடியதேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார்உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம்கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்யமுயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளையாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில்கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

உங்கள் ராசிக்கு 11-ல் ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில், 5-ல் கேது குருநட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும்வெற்றியினைப் பெறுவீர்கள். பண வரவுகள் தேவைக்கேற்ற படிஇருந்தாலும், குரு 10-ல் சஞ்சரிப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில்நிதானத்தை கடைபிடிப்பது விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப்பெறும் என்றாலும் திருமணம் நடைபெறுவதில் தாமத நிலை ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம்கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமாக இருக்கவும். பெரியதொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கொடுத்தகடன்களை வசூலிக்க தேவையற்ற இடையூறு ஏற்படும். உங்கள் ராசிக்கு8-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒருவிஷயத்திலும் சற்று நிதானித்து செயல்படுவது நல்லது. உடல்ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளைஏற்படுத்தும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம்தேவை. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் என்றாலும்வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. தடைபட்டவாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில்நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு அதிகப்படியாகஇருக்கும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 11-ல் சஞ்சரிப்பதால் எந்த விதநெருக்கடிகளையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும்.  சனி 8-ல், குரு10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனமாக செயல்பட்டால் ஒரு சிலமுன்னேற்றங்களை அடைய முடியும். பேச்சில் சற்று நிதானத்தைகடைபிடிப்பது குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால்  தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல்ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்றவை உண்டாகும். கேது 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. இயற்கை உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியம் சிறப்பாகஇருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறுகள்ஏற்படும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்கநேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில்சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் சென்று பணிபுரியவிரும்புவோரின் விருப்பங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம்கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த வேண்டாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்என்றாலும் வேலையாட்களை அனுசரித்து செல்லவும். கூட்டாளிகள்ஆதரவால் ஒரு சில ஆதாயங்களை அடைவீர்கள்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

சர்ப கிரகமான ராகு அசுவனி நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11-ல்சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்து எல்லாம் நடக்கும். சனி பாக்கியஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்களது ஆரோக்கியம் சிறப்பாகஇருக்கும். வரும் 22-4-2023 முதல் குரு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால்உங்களின் பொருளாதார நிலை மிகவும் சிறப்படையும். மங்களகரமானசுபகாரியங்கள் கைகூடும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும்நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளைதற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும்.  குடும்பத்தில்சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகைமகிழ்ச்சியினை அளிக்கும். கேது 5-ல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில்சிறுசிறு மன கவலை ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன்இருப்பது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்தபிரச்சினைகள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றுநல்ல லாபத்தினை கொடுக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்புஅமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள்கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புமகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில்நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்குதகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ராகு 11-ல் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில்ஏற்றங்களை அடைவீர்கள். சனி 9-ல், குரு 11-ல் சஞ்சரிப்பதால் எதிலும்தைரியத்துடன் செயல்பட முடியும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில்வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டிபொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதியகூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்கஉதவும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் செல்லக் கூடியவாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பொன்பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கேது 5-ல் சஞ்சரிப்பதால்பிள்ளைகளால் சிறுசிறு மன கவலை தோன்றும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கம்நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைஉண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பானநிலை இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். வெளிவட்டாரத்தொடர்புகளும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமானபதவி உயர்வுகள் கிடைக்கும். உங்களின் வேலைபளு குறைந்து மனநிம்மதியுடன் பணியாற்ற முடியும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,     நிறம் - பச்சை, வெள்ளை,              கிழமை - புதன், வெள்ளி

கல் - மரகதம்              திசை - வடக்கு                          தெய்வம் - விஷ்ணு

 

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 5-ல் சஞ்சரிப்பதால்விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனைசெய்வது. சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது. சதுர்த்தி விரதங்கள்இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றைஏழைகளுக்கு தானம் தருவது. சர்ப சாந்தி செய்வது நல்லது.

சனி 8-ல் சஞ்சரித்து 17-01-2023 முடிய அஷ்டமச்சனி நடைபெறுவதால்அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனி பகவானுக்கு கருப்பு நிறவஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளைபூக்களால் அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் ஊற்றி எள் தீபமேற்றிவழிபடவும்.

குரு 10-ல் 22-04-2023 வரை சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்துஅணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றிவழிபடுவது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வது, மஞ்சள் நிறஆடைகள் அணிவது நல்லது. புஷ்பராக கல் அணிவது நல்லது.

4. கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

யாருக்கும் அஞ்சாத குணமும் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பும்கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5, 11-ல் சஞ்சரித்தராகு கேது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). கேது ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டிலும், ராகு ஜீவனஸ்தானமான 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதும், சனி 7-ல்சஞ்சாரம் செய்வதும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. தேவையில்லாத அலைச்சல், வேலைபளு காரணமாக உடல்அசதி இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். உற்றார்உறவினர்களை அனுசரித்து செல்வது, விட்டு கொடுத்து நடந்துகொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதுஉத்தமம். அசையும் அசையா சொத்துக்களால் சுப செலவுகளைசந்திப்பீர்கள்.

பொன்னவன் என போற்றப்படும் குரு வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்றுசஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை மிகவும் சிறப்பாகஇருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையும் யோகம் உண்டு. குருபார்வை 1, 3, 5 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் எடுக்கும்முயற்சியில் வெற்றி, மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும் யோகம், பிள்ளைகளால் இருந்த கவலைகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும் யோகம்வரும் நாட்களில் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரியதொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். ஆன்மீக தெய்வீகதரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

                தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் கிடைப்பதுமட்டுமின்றி தொழிலை அபிவிருத்தி செய்யும் யோகம் உண்டாகும். கூட்டாளிகளையும், வேலையாட்களையும் அனுசரித்து செல்வதுசெல்வது மூலம் வீண் செலவுகளை தவிர்க்க முடியும். அதிக முதலீடுகொண்ட செயல்களில் உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகமாக இருந்தாலும்நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் பணிகளை உங்கள் தனிதிறமையால் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் உண்டு. புதிய வேலைதேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

                உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படிவரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை அதிசாரமாகவும், அதன்பின்பு முழுமையாக 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரித்துஅஷ்டம சனி நடைபெற இருப்பதால் உங்கள் உடல் நலத்தில் அக்கறைஎடுத்து கொள்வது நல்லது.

                2023 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை உங்களுக்கு பல்வேறுஅனுகூலமான பலன்கள் கிடைக்கும் யோகம் உண்டு என்றாலும் 22-04-2023 முதல் குரு 10-ல் சஞ்சரிக்க உள்ளதாலும் அக்காலத்தில் அஷ்டமச்சனியும் நடக்கும் என்பதால் நீங்கள் பொருளாதார ரீதியாக சற்றுநெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்பதால் எதிலும் எதிர்நீச்சல்போட்டே முன்னேற வேண்டி இருக்கும். தேவையற்ற அலைச்சல்டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களைதவிர்க்கவும். தொழில் வியாபாரதில் நீங்கள் கவனமாக செயல்பட்டால்மட்டுமே நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் கிடைக்கும்வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியேஇருக்கும் என்பதால் உடற்பயிற்சி செய்வது, உணவு விஷயத்தில்கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். தேவையற்ற மனக்குழப்பங்களால்நிம்மதி குறைவு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம்சிறப்பாக இருப்பது சற்று ஆறுதலை தரும். அலைச்சல் டென்ஷன்அதிகரிக்கும் என்பதால் எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும்விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதுநல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்துசெயல்படுவது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால்உங்களது அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். ஆடம்பரசெலவுகளை சற்று குறைப்பது உத்தமம். குடும்ப விஷயங்களை பிறரிடம்பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சுபகாரிய முயற்சிகளில் வரும்நாட்களில் நற்பலன் கிடைக்கும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலைபளு காரணமாக உடல் அசதி இருந்தாலும் கௌரவ பதவிகளைஅடைய முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் விரும்பியஇடமாற்றங்களும் கிடைக்கும். பொருளாதாரநிலை மிக சிறப்பாகஇருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால்எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பாக முடிக்க முடியும். உயர்அதிகாரிகள் ஆதரவால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புதியவேலை தேடுபவர்களுக்கு வரும் நாட்களில் சிறப்பாக வாய்ப்புகள்கிடைக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறைந்து படிபடியானமுன்னேற்றம் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் நீங்கள்அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்களில்கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திசெய்யும் காரியங்களில் சாதிக்கும் யோகம் உண்டாகும். கூட்டாளிகள்ஆதரவு சற்று சுமாராக இருக்கும் என்பதால் விட்டு கொடுத்து செல்வதுநல்லது. வெளியூர், வெளிநாடு மூலம் எதிர்பார்க்கும் லாபம் ஓரளவுக்குகிடைக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் பொருளாதாரஅனுகூலம் உண்டு.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகள் சிறப்பாக இருக்கும் காலம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நற்பலனை அடையமுடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இழுபறி நிலை நிடித்தாலும்தக்க நேரத்தில் திரும்பி வரும்.  பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன்கொடுப்பதில் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன் கிடைக்கும். உடன்இருப்பவர்களை சற்று அனுசரித்து சென்றால் எந்த நெருக்கடிகளும்இன்றி அன்றாட செயல்களை செய்ய முடியும்.

அரசியல்

மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின்தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாவதால்அவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். பத்திரிக்கை நண்பர்களைபகைத்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். நீங்கள் எதிர்பார்க்கும்கௌரவ பதவிகள் தேடி வரும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும்- என்றாலும் பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உடன் பழகுபவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்து சந்தையில் விலை பொருளுக்குஏற்ற விலை கிடைக்கும். காய், கனி, பூ போன்றவற்றாலும் கால்நடைகளாலும் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். சில இடங்களில் நீர்வரத்து குறைவதால் தொடர்ந்து பயிரிட முடியாத நிலை ஏற்படும். அரசுவழியில் மானிய உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் கூலி ஆட்கள் ஒத்துழைப்புநன்றாக இல்லாத காரணத்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் புதிய ஒப்பந்தங்களில்கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத் தொகைகள் தக்க நேரத்தில் கிடைப்பதால் கடந்தகால கடன்கள் பைசல் ஆகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகபோக வாழ்வை அனுபவிக்க இடையூறுஏற்படும். இசைத் துறைகளில் உள்ளவர்களுக்கு எதிர்பாராதமுன்னேற்றங்கள் உண்டாகும்.

பெண்கள்

உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடபணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண வயதைஅடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. புத்திர வழியில்மகிழ்ச்சி தரும் நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்களை அனுசரித்துசெல்வதன் மூலம் ஓரளவுக்கு ஆதாயப்பலனை அடைய முடியும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன்செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்றநட்புக்களால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால் நல்லநண்பர்களை தோந்தெடுத்து பழகுவது உத்தமம். கல்வி ரீதியாகமேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வண்டிவாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

ராகு சூரியன் நட்சத்திரத்தில் 10-ல், கேது குரு நட்சத்திரத்தில் 4-ல்சஞ்சரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமேஅனுகூலங்களை அடைய முடியும். இருப்பதை அனுபவிக்கஇடையூறுகள் ஏற்படும். அசையா சொத்து வழியில் சுப செலவுகள்உண்டாகும். குரு 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாகஇருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும்படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மகிழ்ச்சி நிலவும். கணவன்--- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள்தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரிய முயற்சிகளில்நல்ல செய்தி கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் ஆதாயம்அடைய முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள்கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம்நி¬வேறும். பயணங்களால் அலைச்சல் அதனால் உடல் அசதி ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களில் இருந்தநெருக்கடிகள் மறைந்து தற்போது லாபத்தை ஈட்ட முடியும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 10-ல், கேது குரு நட்சத்திரத்தில் 4-ல்சஞ்சரிப்பதால் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்கஇடையூறுகள் ஏற்படும். குரு 9-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் நன்றாகஇருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள்அனைத்திலும் தடையின்றி வெற்றியினைப் பெறுவீர்கள். சனி 7-ல்சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம்செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்லவும். அசையும்அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். பூர்வீகசொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். குழந்தைபாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு இக்காலத்தில் நல்ல செய்திகிடைக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள்தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரியதொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அலைச்சல்டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களைதவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமானநிலைகள் உண்டாகும். கூட்டாளிகள் மூலம் சிறுசிறு பிரச்சினைகள்ஏற்படலாம் என்பதால் அவர்களை கலந்தாலோசித்து செயல்படுவதுநல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும்உயரதிகாரிகளின் ஊக்குவிப்புகள் உற்சாகத்தை அளிக்கும். எதிலும்சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 10-ல், கேது ராகு நட்சத்திரத்தில் 4-ல்சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று நிதானமாக செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடைய முடியும். குரு பாக்கிய ஸ்தானத்தில்சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றிகிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திரவழியில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சனி 7-ல்சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலன்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில்பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்துஉயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். சிலருக்குஎதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மூலம் நல்லசெய்தி வரும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெறமுடியும். நல்ல வாய்ப்புகள் கிடைத்து போட்ட முதலீட்டை உங்கள் தனிதிறமையால் எடுத்து விட முடியும். கூட்டாளிகளையும் வேலையாட்களைஅனுசரித்து சென்றால் நற்பலனை அடையலாம்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 10-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 4-ல்சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். இருப்பதைஅனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். சனி 8-ல் சஞ்சரிப்பதால்ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது இயற்கை உணவுகளைஉண்பது உடல் நலத்திற்கு நல்லது. வரும் 22-04-2023 வரை குரு 9-ல்சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலம், பண வரவுகள்சாதகமாக இருக்கும் நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில்பாதிப்புகள் ஏற்படும் என்பதால் சிறு பிரச்சினை என்றாலும் உடனேசிகிச்கை எடுத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையேபேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தேவையற்ற வாக்கு வாதங்களைதவிர்ப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களால் சிறுசிறு அலைச்சல்டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்றுதாமத நிலை உண்டாகும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின்விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள்  கூட்டாளிகளை அனுசரித்துசெல்வது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். அரசு வழி அதிகாரிகள் செய்யும் கெடுபிடிகளால் செய்யும் தொழிலில்நிம்மதி குறையும். வேலையாட்கள் தேவையற்ற நெருக்கடிகளைஏற்படுத்தும் காலம் என்பதால் அவர்களை கவனத்துடன் கையாள்வதுநல்லது.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 10-ல், கேது சித்திரை நட்சத்திரத்தில் 4-ல்சஞ்சரிப்பதாலும், சனி 8-ல், குரு 10-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும்கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியபாதிப்புகளால் எடுத்த பணிகளை முடிப்பதில் இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில்நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களால் வீண்அலைச்சல்கள் உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் ஏற்றஇறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம்போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளைஈடுபடுத்துவதை தவிர்க்கவும். அசையும் அசையா சொத்துக்கள் மூலமும்வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில் வியாபாரம்செய்பவர்களுக்கு சற்று நெருக்கடி நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கிடைக்கும் வாய்ப்புகளை தற்போதிய காலத்தில்பயன்படுத்தி கொள்வது நல்லது. நீங்கள் தொழிலுக்காக எதிர்பார்க்கும்பண உதவிகள் கிடைக்க இடையூறுகள் ஏற்படும். கூட்டாளிகளால் வீண்பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள்பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின்ஆதரவினைப் பெற முடியும். சக ஊழியர்களை அனுசரித்து சென்றால்எடுத்த பணியை சரியான நேரத்தில் முடித்து விட முடியும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,                 நிறம் - வெள்ளை, சிவப்பு              கிழமை - திங்கள், வியாழன்

கல் -  முத்து திசை - வடகிழக்கு               தெய்வம் - வெங்கடாசலபதி

 

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 4-ல் கேது, 10-ல் ராகுசஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றைதொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்குமஅபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றைபயன்படுத்துவது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால்கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வைபோன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

5. சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும், எதிலும் தனித்து நின்று போராடிவெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் சிம்மராசிநேயர்களே, சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு 4, 10-ல்சஞ்சரிக்கும் ராகு கேது தற்போது ஏற்படும் இடபெயர்ச்சி மூலம்திருக்கணிதப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை(வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). ஜென்ம ராசிக்குமுயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் கேதுவும், 9-ஆம் வீட்டில் ராகுவும்சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பான அமைப்பாகும். ஒரு ராசியில்நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முடிய உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள்எல்லாம் நிறைவேறி சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். உங்களுக்கு இதுநாள் வரை இருந்த அலைச்சல்கள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும்சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களும்ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள்மகிழ்ச்சி அளிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளைகுறைப்பது நல்லது. கடந்த கால கடன்கள் எல்லாம் படிப்படியாககுறையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம்உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடைவதால் பல பெரிய மனிதர்களின்ஆதரவுகள் கிடைக்கும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவும் ஒருமுடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். வெளியூர்வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்தலாபத்தை அடையலாம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்லபெயர் எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த வேலைபளுகுறைந்து உயர்வுகளும் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். புதிய வேலைதேடுபவர்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். சிலர் நீண்டநாட்களாக எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன்இணைவார்கள்.

ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு 8-ல் வரும் 13-04-2022 முதல்22-04-2023 வரை சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சற்று தேக்கம், சுபகாரியங்கள் கைகூட இடையூறுகள் ஏற்படும் என்றாலும் சனி, கேதுசாதகமாக இருப்பதால் எதையும் சிறப்பாக கையாண்டு நற்பலனைஅடைய முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்றுபொறுமையை கடைபிடிப்பது நல்லது.

வரும் 22-04-2023 முதல் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம்வீட்டில் குரு சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை மேலும்அதிகரிக்கும் அமைப்பாகும். இக்காலத்தில் பொருளாதார நிலை மிகசிறப்பாக இருந்து உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து ரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் விலகிகுடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகவும் அற்புதமாக இருக்கும். கடந்த காலமருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள்ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில்கைகூடுவதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் மருத்துவசிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியானமுன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல்உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுபகாரியங்கள் தற்போது தடைப்பட்டாலும் 2023 ஏப்ரலுக்கு பிறகு எளிதில்கைகூடும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் உண்டு. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார்உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் யாவும்குறையும்.

உத்தியோகம்

பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களை அடைய முடியும். எதிர்பார்த்தஇடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளைதிறம்பட செய்து முடிப்பீர்கள். வெளியூர் சென்று பணிபுரியவிரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம்ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பு அமையும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும்,

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் சிறப்பான நிலைகள் உண்டாகும். புதியஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். அரசு வழியில்எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர்வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையானசெயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும். போட்டி பொறாமைகள்மறையும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவதுநல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில்சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்கள் சற்றுதாமதமாக வசூலாகும். பெரிய தொகைகளை கையாளும் போதுசிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய அனுகூலத்தை அடையமுடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கொடுத்தவாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் நட்புகிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

அரசியல்

பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும்முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காகஅடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள்சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகளில் சில ஏற்றதாழ்வுகள் இருக்கும் என்பதால் சிக்கனமாக செலவு செய்யவும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். பத்திரிக்கையாளர்கள் மற்றும் உடன்இருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்றவிலை சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர்வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டுஅபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனைபோன்றவற்றை வாங்கும் யோகம் உண்டு. பங்காளிகளிடம் சற்று விட்டுகொடுத்து செல்வது நல்லது. கால் நடைகளால் எதிர்பாராதசெலவுகளை எதிர் கொள்வீர்கள். கடன் சுமைகள் குறையும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதுப்புது ஒப்பந்தங்களில்கையெழுத்திடுவீர்கள். கைக்கு வராமல் தடைபட்டு கொண்டிருந்தபணத்தொகைகள் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம்ஏற்படாது. புதிய கார் வீடு போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். இசைதுறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலைஉண்டாகும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் அமையும். கடன்களும்படிபடியாக குறையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கடந்த காலங்களில் இருந்த பாதிப்புகள் விலகிஅன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதைஅடைந்தவர்களுக்கு ஏப்ரல் 2023க்கு பிறகு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும்பூர்த்தியாகும் என்றாலும் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.  சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில்மகிழ்ச்சி ஏற்படும்.

மாணவ மாணவியர்

நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின்பாராட்டுதல்களைப் பெற முடியும். கல்விக்காக வெளியூர் செல்லும்வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள்கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலன்கள் ஏற்படும். படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு நல்லஆதரவு கிடைக்கும். 

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

ராகு சூரியன் நட்சத்திரத்தில் 9-ல், கேது குரு நட்சத்திரத்தில் 3-ல்சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமிகுந்த பலன்கள்கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுகஎதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். உங்கள்செயல்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விடகூடிய ஆற்றல் உண்டாகும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் ஏற்றஇறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பரசெலவுகளை குறைத்து கொள்வது நல்லது. சிலருக்கு வண்டிவாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். சனி அதிசாரமாக வரும்29-04-2022 முதல் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவி சற்றுவிட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகஇருக்கும். தொழில் வியாபாரத்தில்  எதிர்பார்த்த லாபங்கள்கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். வெளிவட்டாரத்தொடர்புகள் யாவும் விரிவடையும். வேலையாட்களிடமும்கூட்டாளிகளிடமும் சற்று விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும்வேலைபளு கூடுதலாக இருக்கும். உடன் வேலை செய்பவர்களைஅனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வேலை தேடுபவர்கள் தற்போதுகிடைக்கும் சிறு வாய்ப்பை கூட தவற விடாமல் பயன்படுத்தி கொள்வதுஉத்தமம்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 9-ல், கேது விசாக நட்சத்திரத்தில் 3-ல்சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு உடன் இருப்பவர்களின் ஆதரவுசிறப்பாக இருக்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் பல்வேறுவகையில் அனுகூலமான பலனை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள்அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்றகூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறுபாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாகஇருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். குரு8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதுநல்லது. கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள்ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்குஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும்விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது.  தொழில் வியாபாரம்செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால்அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். நல்ல வாய்ப்புகள்கிடைப்பதால் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த நெருக்கடிகள் விலகிநிம்மதியுடன் பணி புரிய முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்கள்கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்தலாபத்தை பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாககொடுப்பதை தவிர்க்கவும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு பரணி நட்சத்திரத்தில் 9-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 3-ல்சஞ்சரிப்பதாலும் சனி 6-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எல்லா வகையிலும்வளமான பலன்களை பெறுவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகிகுடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையேசிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சிஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும்மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் சிலதடைகளை சந்தித்தாலும் வெற்றியினை பெற்று விட முடியும். கடன்பிரச்சினைகள் சற்றே குறையும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சிந்தித்து செயல்பட்டால் ஏற்றங்களைஅடைய முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள்செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் சற்றே ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகிலாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைத்து உங்களுக்கு இருந்தபொருட்தேக்கங்கள் குறையும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்தஉதவிகள் கிடைத்து தொழிலை விரிவுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கானசந்தர்ப்பங்கள் உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்லவாய்ப்புகள் அமையும். சிலருக்கு வெளியூர் மூலம் நல்ல செய்திகிடைக்கும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 9-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 3-ல்சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குரு வரும் 22-04-2023 முதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். தடைப்பட்ட திருமணசுபகாரியகங்ளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால்அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் போன்றவற்றைவாங்கும் வாய்ப்பு அமையும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள்தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள்ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல்போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். பகைமை பாராட்டியவர்களும் நட்புகரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்குகூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்குபெருகும். புதிய திட்டங்களை செயல்படுத்தி தொழிலில் லாபம் காணமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிகிட்டும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைந்துவாழும் வாய்ப்பு ஏற்படும். வேலை தேடியவர்களுக்கு கௌவரமானஇடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெற்று 9-ல், கேதுசெவ்வாய் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்தகாரியங்கள் எல்லாம் சிறப்பாக நடக்கும். உங்களின் பொருளாதாரநிலை மிக சிறப்பாக இருக்கும். கடந்த கால பண பிரச்சினைகள் விலகிமன நிம்மதியுடன் வாழ முடியும். வாங்கிய கடன்களை பைசல் செய்யமுடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டுகொடுத்து செல்வது நல்லது.  பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாகஇருக்கும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்துகூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதியவாய்ப்புகள் கிடைப்பதால் லாபம் அதிகரிக்கும். கடந்த கால மறைமுகஎதிர்ப்புகள் விலகி நல்ல வளர்ச்சி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள்தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களைபெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புஅமையும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,                                 நிறம் - வெள்ளை, சிவப்பு              கிழமை - ஞாயிறு, திங்கள்

கல் -  மாணிக்கம்                   திசை - கிழக்கு                         தெய்வம்- சிவன்

 

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு 22-04-2023 முடிய குரு 8-ல்சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குருதட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்துஅணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றிவழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணியவும் அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.

6. கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

கூர்மையான அறிவும், எதையும் முன்கூட்டியே செய்யும் திறனும்கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரித்தசர்ப கிரகங்களான ராகு கேது திருக்கணிதப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). கேது 2-ஆம் வீட்டிலும், ராகு 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம்செய்வதால் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமைகுறைவு, ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் விட்டு கொடுத்து செல்வதுநல்லது. உற்றார் உறவினர்களிடம் பேச்சில் பொறுமையுடன் நடந்துகொண்டால் மட்டுமே ஏற்படும் சிறுசிறு சிக்கல்களை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது, உணவு விஷயத்தில்கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

                உங்கள் ராசிக்கு 4, 7 ஆம் வீட்டிற்கு அதிபதியான குரு வரும்13-04-2022 முதல் 22-04-2023 வரை 7-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால்உங்களது பொளாதார நிலை அற்புதமாக இருக்கும். பண வரவுகளுக்குபஞ்சம் இருக்காது. உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும்முயற்சிகளில் வெற்றி கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள்எளிதில் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி அளிக்கும் நிகழச்சிகள்நடைபெறும். நவீன பொருட்கள், வீடு வாகனம் போன்றவற்றை வாங்ககூடிய யோகம் சிலருக்கு உண்டாகும். எடுக்கும் பணிகளை சிறப்புடன்செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்ட முதலீட்டை எடுப்பதுமட்டுமின்றி தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு உண்டு. கூட்டாளிகளின் ஆதரவால் நற்பலன்கள் அதிகரிக்கும். வேலையாட்கள்சரியான நேரத்திற்கு கிடைக்காத காரணத்தால் நீங்கள் நேரடியாக சிலநேரங்களில் வேலை செய்ய வேண்டி இருக்கும்.  பணம் கொடுக்கல்- வாங்கலில் அனுகூலங்களை அடைய முடியும். பெரிய தொகைகளைஈடுபடுத்தி வளர்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குநல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு காரணமாக உடல்அசதி ஏற்படும். வெளியூர் சென்று பணிபுரிய வேண்டும் எனஎண்ணியவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

ஒரு ராசியில் நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படிஉங்கள் ராசிக்கு வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரைஅதிசாரமாகவும் அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிக்க இருப்பது உங்களுக்கு மிக பெரியஅதிர்ஷடத்தை தரும் அமைப்பாகும்.

                வரும் 22-04-2023 முதல் குரு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால்பொருளாதார ரீதியாக சற்று தேக்கத்தை ஏற்படுத்தும் அமைப்புஎன்றாலும் வரும் 17-01-2023 முதல் சனி 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்கஇருப்பதால் எதையும் எதிர் கொண்டு பல்வேறு வலமான பலன்களைஅடைவீர்கள். சனி 6-ல் சஞ்சரிக்கும் காலம் என்பது மிகவும் அற்புதமானஅமைப்பு என்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ்மேலோங்குவது மட்டுமின்றி தொழில் வியாபாரம் லாபகரமாக இருந்துஅனைத்து வகையிலும் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மிகபெரிய பதவி கிடைக்கும். உங்களது பொருளாதார நிலை மிக சிறப்பாக இருந்து நல்லமுன்னேற்றங்களை அடைவீர்கள்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், அலர்ஜி ஏற்படலாம்என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உணவுவிஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. குடும்பத்தில்உள்ளவர்களுக்கு சில நேரங்களில் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம்என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது, மருத்துவ காப்பீடு எடுத்துகொள்வது நல்லது. முன் கோபத்தை குறைப்பது, பேச்சில்பொறுமையை கடைபிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களைதவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே தேவையற்ற பிரச்சினைகள், கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, உற்றார்உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். குரு சனிசாதக சஞ்சாரத்தால் பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்றுசுபகாரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்குஅழகிய குழந்தை கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகம்

செய்யும் பணியில் சில நிம்மதி குறைவுகளை சந்திக்க நேர்ந்தாலும்கௌரவமான பதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின்பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பாராதஇடமாற்றங்கள் ஏற்பட்டு வெளியிடங்களில் தங்கி பணிபுரிய நேரிடும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபங்களை பெறமுடியும். வேலையாட்களால் சிறிது தொந்தரவு ஏற்பட்டாலும் எதையும்சமாளிக்க முடியும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில்கடனுதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதுநல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் லாபம் அடைய முடியும். கடன்கள்ஒரளவுக்கு குறையும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் உங்களது சேமிப்புஅதிகரிக்கும். கொடுத்த பணத்தை வரும் நாட்களில் எளிதில் வசூல்செய்ய முடியும். உங்களுக்கு உள்ள கடன் பிரச்சினைகள் படிப்படியாககுறையும். கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்புசாதகமாக வரும். உற்றார் உறவினர்கள் பண விஷயத்தில் சிறிதுநெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் கவனத்துடன் இருப்பதுநல்லது.

அரசியல்

மக்களின் ஆதரவை நீங்கள் பெற முடியும். பெயர் புகழ் கௌரவபதவிகள் தேடி வரும். பேச்சால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் எதுபேசுவது என்றாலும் சிந்தித்து பேச்சினால் நற்பலனை அடைய முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தாராளமாக பலருக்கு உதவி  செய்யும்வாய்ப்புகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள்இருந்தாலும் உடல் நிலையில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலைசந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். உடன்இருப்பவர்களிடமும் பங்காளிடமும் பேச்சில் கவனத்துடன் இருப்பதும், வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. புதிய நவீன கருவிகளைவாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில்சிந்தித்து செயல்படுவது நல்லது. காய்கனிகளாலும், கால்நடைகளாலும்லாபத்தை அடைய முடியும்.

கலைஞர்கள்

உங்கள் உழைப்பிற்கான பலனை பெற முடியும். உங்கள் திறமைக்குஏற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் செயல்பாடுகளால்ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகைகள்கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்து உங்கள் அனைத்துதேவைகளும் பூர்த்தியாகும். இழந்தவற்றை மீட்க கூடிய ஆற்றல்உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சல்கள் இருந்தாலும் அதனால்ஆதாயம் இருக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது மூலம் தேவையற்றமருத்துவ செலவுகளை தவிர்க்க முடியும்.  மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். புத்திர வழியில் நல்ல செய்திகிடைக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, கணவர் வழி உறவினர்களிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் அற்புதமாக இருப்பதால் நவீன பொருட்களைவாங்குவீர்கள். தாய் வழி சொத்துகளால் நற்பலன் கிடைக்கும்.

மாணவ மாணவியர்

கல்வியில் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றாலும் உடல் சோர்வுஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களிடம் வீண் வாக்கு வாதங்களைதவிர்த்தால் நற்பெயர் எடுக்க முடியும். உங்கள் தனி திறமைகளைவெளிகாட்டி பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போதும் நிதானம் தேவை.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

ராகு சூரியன் நட்சத்திரத்தில் 8-ல், கேது குரு நட்சத்திரத்தில் 2-ல்சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது உடன்இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குரு 7-ல்சஞ்சரிப்பதாலும், வரும் 29-04-2022 முதல் சனி 6-ல் அதிசாரமாகசஞ்சரிப்பதாலும் பண வரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை பல்வேறுவளமான பலன்களை அடையும் யோகம் உண்டு. எந்தவிதபிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள்பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள்தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது.  பேச்சில் சற்றுநிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்டமுடியும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடுமனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பு உண்டாகும். தொழில்வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகிடைக்கும். வேலையாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதாரஉதவிகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும்அதனால் பொருளாதார அனுகூலம் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும்தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியானநிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகிட்டும். மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்லவாய்ப்பை அடைய முடியும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ராகு பரணி நட்சத்திரத்தில் 8-ல், கேது குரு நட்சத்திரத்தில் 2-ல்சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதுநல்லது. குரு 7-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் நன்றாகஇருந்து உங்கள் வாழக்கை தரம் உயரும் யோகம் உண்டாகும். உடல்ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் இருந்தாலும் அன்றாடபணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள்தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும்பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைபாடுகள்ஏற்படும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெறமுடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றல்உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். உங்கள்மீது இருந்த வீண் பழி சொற்கள் விலகும். தொழில் வியாபாரம்செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின்ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வேலையாட்களின் உதவி குறைவாக இருப்பதால் உங்களுக்கு பணிசுமை அதிகரித்து ஒய்வு நேரம் குறையும். 

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 8-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 2-ல்சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. குரு 7-ல்சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு பல்வேறு வளமான பலன்களைபெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றியும் கிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்தபிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையேசிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றுசோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன்அமையும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப்பெருக்கி கொள்ள முடியும். புதிய திட்டங்களை போட்டு அதன் மூலம்பொருளாதார மேன்மைகளை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள்பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள்கிடைக்கும். சிலருக்கு வெளியூர் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைத்துமகிழ்ச்சி ஏற்படும். 

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 8-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 2-ல்சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை கை கால் அசதி சோர்வுபோன்றவை ஏற்பட்டாலும் சனி 6-ல் சஞ்சரிப்பதால் அன்றாட பணிகளைசெய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. குரு வரும் 22-04-2023 வரை 7-ல் சஞ்சரிப்பதால் பண வரவுக்கு பஞ்சமிருக்காது. உற்றார்உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணிபுரிபவர்களுக்கு பணியில்எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின்விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்தஇடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும்அதன் மூலம் அனுகூலப் பலனையும் அடைய முடியும். தொழில்வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்காகநீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் வீண் இழப்புகளை தவிர்க்கமுடியும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெற்று 8-ல், கேதுசித்திரை நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில்சிக்கனமாக இருப்பது உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வதுநல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனைஅடைய தாமதநிலை ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமானநிலையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொள்வது நல்லது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களின்ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல்போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளைஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. சனி 6-ல்சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து நல்லமுன்னேற்றங்களை அடைவீர்கள். உங்களுக்கு இருந்த வந்த கடன்கள்படிப்படியாக குறையும். எதையும் எதிர் கொள்ளும் திறன் தொழில்வியாபாரத்தில் லாபகரமான பலன்களும், புதிய வாய்ப்புகளும்கிடைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் நல்ல லாபங்களைஅடைவீர்கள். உங்கள் தனி திறமையால் எதிலும் சிறப்பாக செயல்பட்டுநல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள்பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். நீங்கள்எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்லவாய்ப்புகள் அமையும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,7,8                   நிறம் - பச்சை, நீலம்           கிழமை - புதன், சனி

கல் -  மரகத பச்சை              திசை - வடக்கு                          தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

 

பரிகாரம்

கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2-ல் கேது, 8-ல் ராகுசஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலத்தில் துர்க்கைஅம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால்அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனைசெய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள்போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. கண்ணில்மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்புஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லிபூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது. 

7. துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

முன்கோபம் அதிகம் இருந்தாலும் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால்பிறரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2, 8-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்களான ராகு கேதுவரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம்வீட்டிலும் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது, கூட்டு தொழில் செய்பவர்கள்கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. நெருங்கியவர்களைஅனுசரித்து செல்வதன் மூலம் ஏற்படும் சிறு சிறு சிக்கல்களை எதிர்கொள்ள முடியும். கடந்த கால உடல் நிலை பாதிப்பு விலகும் என்றாலும்உணவு விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பஒற்றுமை சற்று சாதகமாக இருக்கும் நிலை, பெற்றோர்களின் ஆதரவுமூலம் குடும்பத்தில் நல்லது நடக்கும் வாய்ப்பு உண்டாகும்.

சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட காலம்தங்கும் கிரகமான சனி 17-01-2023 வரை 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமநடப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறு, அசையும் அசையா சொத்து வழியில் சுப செலவுகள் ஏற்படும்.

ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு 6-ல் வரும் 13-04-2022 முதல்22-04-2023 வரை சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை சற்றுஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரியதொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. தொழில்வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால்கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. கூட்டாளிகளையும், வேலையாட்களையும்அனுசரித்து செல்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில்முன்னெச்சரிக்கையுடன் இருப்பது முடிந்த வரை கடன் வாங்குவதைதவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்றநிலை ஏற்படும். வேலைபளு அதிகமாக இருப்பதால் உடல்நிலைசோர்வடையும். எடுக்கும் பணிகளை திறம்பட செயல்படுத்த முடியாதநிலை ஏற்படும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டிஇருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடியகாலம் என்பதால் பயணங்களை தவிர்க்கவும். புதிய வேலைதேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது மூலம்எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும்.

அர்த்தாஷ்டம சனி நடைபெற்றாலும் வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை அதிசாரமாகவும், அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் சனி 5-ல் சஞ்சரிக்க இருப்பது சற்று சாதகமாக அமைப்புஎன்பதால் உங்களுக்கு உள்ள அலைச்சல்கள் குறையும். தற்போது சிலநெருக்கடிகளை நீங்கள் எதிர் கொண்டாலும் வரும் 22-04-2023 முதல்குரு 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களது பொருளாதார நிலையில்முன்னேற்றம் ஏற்பட்டு தாராள தன சேர்க்கை உண்டாகும்.

சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட காலம்தங்கும் கிரகமான சனி 17-01-2023 வரை 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமநடப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறு, அசையும் அசையா சொத்து வழியில் சுப செலவுகள் ஏற்படும்.

ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு 6-ல் வரும் 13-04-2022 முதல்22-04-2023 வரை சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை சற்றுஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரியதொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. தொழில்வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால்கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. கூட்டாளிகளையும், வேலையாட்களையும்அனுசரித்து செல்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில்முன்னெச்சரிக்கையுடன் இருப்பது முடிந்த வரை கடன் வாங்குவதைதவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்றநிலை ஏற்படும். வேலைபளு அதிகமாக இருப்பதால் உடல்நிலைசோர்வடையும். எடுக்கும் பணிகளை திறம்பட செயல்படுத்த முடியாதநிலை ஏற்படும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டிஇருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடியகாலம் என்பதால் பயணங்களை தவிர்க்கவும். புதிய வேலைதேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது மூலம்எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும்.

அர்த்தாஷ்டம சனி நடைபெற்றாலும் வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை அதிசாரமாகவும், அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் சனி 5-ல் சஞ்சரிக்க இருப்பது சற்று சாதகமாக அமைப்புஎன்பதால் உங்களுக்கு உள்ள அலைச்சல்கள் குறையும்.

தற்போது சில நெருக்கடிகளை நீங்கள் எதிர் கொண்டாலும் வரும் 22-04-2023 முதல் குரு 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களதுபொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தாராள தன சேர்க்கைஉண்டாகும். கடன்கள் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்குபோட்டிகள் விலகி அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தேடி வரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்லதுநடக்கும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் நிலையில் கவனம் செலுத்துவது உணவு விஷயத்தில் சற்றுகட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. உங்களின் விடா முயற்சியால்எதையும் எதிர் கொள்வீர்கள். எந்தவொரு காரியத்திலும் அதிகஉழைப்பினை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் உடல் சோர்வுஏற்படும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதிகுறையும். தூர பயணங்கள் உங்களுக்கு அலைச்சலை தந்தாலும்அதனால் பொருளாதார அனுகூலங்கள் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

பண வரவுகள் சாதகமாக இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள்உண்டாகும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதுநல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாககூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உற்றார்உறவினர்களை அனுசரித்து நடப்பது மூலம் எதிர்பாராத உதவிகள்கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்கு பின்பு நற்பலன்உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் வழியில் வீண் செலவுகள்உண்டாகும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் எதிலும் திறமையுடன் செயல்பட முடியும்என்றாலும் அதற்கான சன்மானம் குறைவாக கிடைக்கும்.  வேலைபளுஅதிகரிப்பதால் உடல் அசதி ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த பதவிஉயர்வுகள் தாமதம் ஆகும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போதுபேச்சில் நிதானமாக இருந்தால் நல்ல நிலையை அடைய முடியும். புதியவேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திகொண்டால் 2023-ல் உயர்வான நிலையை அடைய முடியும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் இருக்கும் வாய்ப்புகளை தக்கவைத்து கொள்வது நல்லது. போட்டிகள் அதிகமாக இருப்பதால் எதிலும்ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுவது நல்லது. வெளியூர்பயணங்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளைமேற்கொள்ளும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வளமான பலனைஅடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும் அவர்களைகலந்தாலோசித்து எந்த முடிவுகளையும் எடுப்பதும் நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராதஉதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பணவிஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி, முன் ஜாமீன் கொடுப்பதுபோன்றவற்றில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் மேன்மைகள்உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க இடையூறுகள் ஏற்படும்.  உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

அரசியல்

உங்கள் முன் கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தைகடைபிடிப்பது நல்லது. பத்திரிக்கை நண்பர்களை அனுசரித்துசெல்வது உத்தமம். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதிலும்உற்சாகமாக செயல்படுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றிநற்பெயர் எடுப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்வதால்உங்கள் கையிருப்பு குறையும். தூர பயணங்கள் காரணமாக உடல்அசதி ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் நன்றாக இருந்தாலும் அதற்கான விலை கிடைக்கஇடையூறுகள் ஏற்படும். உழைப்பிற்கு ஏற்ற லாபத்தை பெறதடங்கல்கள் உண்டாகும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள்கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டாலும் எதையும் தனித்து நின்றுசமாளித்து விடுவீர்கள். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானியஉதவிகள் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். புதிய பூமி, மனை வாங்கும்முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பங்காளிகளிடம் பேச்சைகுறைக்கவும்.

கலைஞர்கள்

எதிலும் திறமையுடன் செயல்படுவீர்கள் என்றாலும் போட்டிகள்காரணமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்க இடையூறுகள் ஏற்படும். ரசிகர்களின் ஆதரவுகள் குறையாமல் இருப்பதால் எதிலும்உற்சாகத்துடன் ஈடுபட முடியும். வெளியூர்  மூலம் சாதகமான வாய்ப்புகள்கிடைக்கும் என்றாலும் அதனால் அலைச்சல் ஏற்படும். பத்திரிக்கைகளில் வரும் கிசுகிசுக்களால் மனநிம்மதி குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவசெலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் ஓரளவுக்குசுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண சுபகாரியங்கள் கைகூடஉடன் இருப்பவர்களே இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். கணவன்- மனைவி இடையே அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தைகடைபிடிப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடிஇருக்கும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். தேவையற்ற பொழுது போக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு மாறிச்செல்லும். போட்டி தேர்வுகளில் சற்று கவனமுடன் செயல்படுவதும், உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வதும் நல்லது. கல்விக்காகபயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும்.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

ஜென்ம ராசியில் கேது குரு நட்சத்திரத்தில், 7-ல் ராகு சூரியன்நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 6-ல் குரு சஞ்சரிப்பதாலும் பணவிஷயத்தில் நெருக்கடி நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். முடிந்தவரை ஆடம்பரசெலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையேகருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துநடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண்பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உத்தியோகத்தில்இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின்பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உங்கள் பணியில்மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உழைப்பிற்கான சன்மானம்தற்போது கிடைக்காது. வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின்விருப்பம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளைஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் மூலம் வீண் பிரச்சினைகளை எதிர் கொள்ளநேரிடும். தொழிலில் ஏற்படும் மறைமுக எதிர்ப்பு காரணமாக நீங்கள்அடைய வேண்டிய லாபங்கள் தடைப்படும். வெளி நபர்களிடம் தொழில்விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ஜென்ம ராசியில் கேது குரு நட்சத்திரத்தில், 7-ல் ராகு சுக்கிரன்நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 4-ல் சனி, 6-ல் குரு சஞ்சரிப்பதாலும்நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. இருப்பதை அனுபவிக்கஇடையூறுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்து வழியில் வீண்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடியபாதிப்புகளால் மன அமைதி குறையும். சுபகாரியங்களுக்கானமுயற்சிகளில் இடையூறு உண்டாகும். கணவன்- மனைவியிடையேஏற்பட கூடிய வாக்கு வாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போதுகவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். தொழில்வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய மறைமுக எதிர்ப்புகளால்வர வேண்டிய வாய்ப்புகளில் தாமத நிலை ஏற்படும். சரியான நேரத்திற்குவேலையாட்கள் கிடைக்க மாட்டார்கள் சில நேரங்களில் நீங்கள்நேரடியாக வேலை செய்தால் தான் எடுத்த பணியை முடிக்க முடியும். அரசு வழியில் ஏற்படும் கெடுபிடியால் தொழிலில் நிம்மதியுடன் பணிபுரியமுடியாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால்அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளு கூடுதலாக இருக்கும். தேவையற்ற வீண் பழி சொல்லைஎதிர் கொள்ள நேரிடும். சக ஊழியர்கள் உதவியால் எடுத்த பணியைகுறிப்பிட்ட நேரத்தில் முடிப்பீர்கள்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ஜென்ம ராசியில் கேது சுவாதி நட்சத்திரத்தில், 7-ல் ராகு பரணிநட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 4-ல் சனி, 6-ல் குரு சஞ்சரிப்பதாலும்பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் வீண்செலவுகளை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் விட்டு கொடுத்து செல்லவும்.  உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதைதவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும்என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில்நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அன்றாட செலவுகளை சமாளிக்க கடன் வாங்கநேரிடும். வண்டி, வாகனங்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்துசெயல்படுவது மூலம் வீண் விரயங்களை குறைத்து கொள்ள முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்துகொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். வேலைபளுகாரணமாக மன நிம்மதி குறையும். நீங்கள் எதிர்பார்க்கும் பொருளாதாரஉதவிகள் கிடைக்க இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்குபணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்ற கூடும். வேலைபளுஅதிகரித்து மற்றவர்கள் பணியை நீங்கள் எடுத்து செய்ய நேரிடும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால்விரைவில் நல்ல நிலையை அடைய முடியும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

ஜென்ம ராசியில் கேது சுவாதி நட்சத்திரத்தில், 7-ல் ராகு அசுவனிநட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துசெல்வது நல்லது. வரும் 22-04-2023 முதல் குரு 7-ல் சஞ்சரிக்கஇருப்பதால் தற்போது உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாககுறைந்து தாராள தன வரவு, குடும்பத்தில் நல்லது நடக்கும் வாய்ப்புகள்உண்டு. முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன்மூலம் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். உடல்ஆரோக்கியத்தில் சோர்வு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள்தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாககூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை மறைந்து லாபம்காண முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவது உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். வரும் நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து பணியில் நிம்மதியுடன்பணி புரிய முடியும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த புதிய வேலைவாய்ப்புகிடைத்து மன நிம்மதி ஏற்படும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள்அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப்பெறுவீர்கள். இதுவரை இருந்த பொருட் தேக்கங்கள் விலகி கிடைக்கவேண்டிய லாபம் கிடைக்கும். புதிய ஆடர்கள் கிடைத்து உங்களுக்குஉள்ள தொழில் பிரச்சினைகள் படிப்படியாக விலகும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ஜென்ம ராசியில் கேது செவ்வாய் நட்சத்திரத்தில், 7-ல் ராகு கேதுநட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள்ஏற்படும். கணவன்- மனைவி இடையே ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறுபாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும்சனி 5-ல், குரு 7-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த பொருளாதாரநெருக்கடிகள் எல்லாம் குறைந்து சகல விதத்திலும் ஏற்றமிகுந்தபலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும்வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு, மனை போன்றவற்றைவாங்கும் முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். நல்லவரன்களும் தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பானமுன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரியமனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரியமுதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். நல்ல வேலையாட்கள்கிடைத்து தொழிலை விரிவுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள்பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின்பாராட்டுதல்களை பெறுவீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துசென்றால் நற்பலனை அடைய முடியும். நீண்ட நாட்களாக வேலை தேடிகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்குவெளியூர் மூலம் நல்ல செய்திகள் வரும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 4,5,6,7,8                               நிறம் - வெள்ளை, பச்சை               கிழமை - வெள்ளி, புதன்

கல் - வைரம்                               திசை - தென் கிழக்கு         தெய்வம் - லக்ஷ்மி

 

பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது ஜென்ம ராசியிலும், ராகு7-லும் சஞ்சாரம் செய்வதால் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லிபூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள்இருப்பது நல்லது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றைதொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்குமஅபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றைபயன்படுத்துவது நல்லது.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 22-04-2023 முடிய சாதகமின்றசஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குருதட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்துஅணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றிவழிபடவும்.

சனி 4-ல் 17-01-2023 முடிய சஞ்சரிப்பதால் சனிக்கு தொடர்ந்துபரிகாரம் செய்வது அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும்கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது.

8. விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அதிக புத்திக்கூர்மையும், சமூகப் பற்றும் கொண்ட விருச்சிக ராசிநேயர்களே, உங்கள் ராசிக்கு 1, 7-ல் சஞ்சரித்த சர்ப கிரகங்கள்திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). ராகு 6-ஆம்வீட்டிலும், கேது 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதுசிறப்பான அமைப்பாகும். உடல் நிலை சிறப்பாக இருந்து எதிலும்சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிலும் நிதானத்துடன் செயல்பட்டுஇருக்கும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். சமுதாயத்தில் கௌரவபதவிகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கடந்த கால கருத்துவேறுபாடுகள் படிப்படியாக குறைந்து கணவன்- மனைவியிடையேஒற்றுமை அதிகரிக்கும். நெருங்கியவர்கள் மற்றும் கூட்டாளிகளின்ஒத்துழைப்பு திருப்திகரமாக அமைந்து ஏற்றங்களை அடைவீர்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். ஆன்மீகதெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகள் ஏற்படும்.

ராகு 6-ல் சஞ்சரிப்பது மட்டுமில்லாமல் ஒரு ராசியில் நீண்ட நாள்சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 17-01-2023 முடிய 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிலும்தைரியத்துடன் செயல்படும் திறன், உங்களின் நீண்ட நாளைய கனவுகள்நிறைவேறும் வாய்ப்புகள் வரும் நாட்களில் ஏற்படும்.

உங்கள் ராசிக்கு 2, 5-க்கு அதிபதியான குரு பஞ்சம ஸ்தானமான 5-ல்வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை சஞ்சாரம் செய்வது உங்கள்பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும். பண வரவுகள் சிறப்பாகஇருந்து கடன்கள் யாவும் குறையும். திருமண வயதைஅடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சுப காரியங்கள் யாவும்தடையின்றி கைகூடும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்குநல்ல செய்தி கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம்உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு உறுதுணையாகசெயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். எதிர்பார்க்கும் நல்லவாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும்கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்றுகுடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வர். உயர் அதிகாரிகளின் ஆதரவும், உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மனநிம்மதியை ஏற்படுத்தும். உங்களுக்கு இருந்த நீண்ட நாள் நெருக்கடிகள் விலகி திறமைகளைவெளிகாட்டுவதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

சனி வரும் 17-01-2023 முதல் 4-ல் சஞ்சரிக்க உள்ளதால் அர்த்தாஷ்டமசனி நடைபெற இருப்பதாலும், குரு வரும் 22-04-2023 முதல் உங்கள்ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதாலும் இக்காலத்தில்பொருளாதார ரீதியாக நெருக்கடி, தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம்என்பதால் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. ராகு 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் பலம் கிடைக்கும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்த சொல்ல முடியாத பிரச்சினைகள் விலகிஎதிலும் சுறுசுறுப்பாகவும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள். கடந்தகால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகளின்ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டுஇருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமணசுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். கணவன்- மனைவிஒற்றுமையுடன் செயல்படுவதால் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சி அளிக்கும். பண வரவுகள்தாராளமாக இருந்து குடும்பத் தேவைகள் யாவும் தடையின்றிபூர்த்தியாகும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைஎளிதில் நிறைவேற்ற முடியும். பூமி, மனை வாங்கும் யோகம் வரும்நாட்களில் உண்டு.

உத்தியோகம்

பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். எதிர்பார்த்தஇடமாற்றங்களை அடைய முடியும். எடுக்கும் பணிகளை குறித்தநேரத்தில் செய்து முடிக்க முடியும். வெளியூர் பயணங்களால் ஆதாயம்கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள்கிடைக்கும். வரும் நாட்களில் உயர்வான நிலையை எட்ட முடியும். சகநண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்த கால நெருக்கடிகள்விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்குசாதகமாக வந்து மன நிம்மதி அடைவீர்கள். கூட்டாளிகளும்தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் அடையவேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். வெளியூர் தொடர்புகளால்மேன்மைகளை அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில்சாதகமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும்தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை கையாண்டு நல்லலாபத்தை அடைவீர்கள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள்ஒரு முடிவுக்கு வரும். பல பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்

பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும்முயற்சிகளில் எதிர்பார்த்ததை விட அதிகமான அனுகூலங்கள்கிடைக்கும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களைமேற்க்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் அனைவரையும் திருப்திபடுத்த முடியும். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்றவிலையும் சந்தையில் கிடைப்பதால் பண வரவுகள் சிறப்பாக அமையும். நீர் வரத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுவரும் நாட்களில் குறையும். நவீன முயற்சிகளை கையாண்டுஅபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனைபோன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் உண்டு. உறவினர்களின் ஆதரவுமனநிம்மதியை தரும்.

கலைஞர்கள்

எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்றுஉங்களின் நடிப்புத் திறன் வெளிச்சத்திற்கு வரும். ரசிகர்களின்ஏகோபித்த ஆதரவுகளால் மனநிறைவு உண்டாகும். சுகவாழ்வு, சொகுசுவாழ்விற்கு பஞ்சம் இருக்காது. புதிய முதலீடுகளில் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் சற்று குறையும். இசைத்துறையில் உள்ளவர்களுக்கும் சாதிக்க கூடிய அளவிற்குவாய்ப்புகள் தேடி வரும்.

பெண்கள்

உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாடப் பணிகளில்சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன்- மனைவியிடையேஅன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள்கிடைக்கப் பெற்று திருமணம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி, உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

மாணவ மாணவியர்

உங்களுக்கு இருந்த மந்த நிலை முழுமையாக விலகி கல்வியில்திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர்ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். போட்டி தேர்வுகளில்சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். மேற் கல்விக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவுகிடைக்கும்.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், குரு 5-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்து எல்லாம்நடக்கும். கேது 12-ல் குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் வெளியூர்பயணங்கள் மூலம் நல்லது நடக்கும். குடும்பத்தில் இருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். பண வரவுகள்தாராளமாக இருக்கும் என்பதால் உங்கள் கடன் பிரச்சினைகள்குறையும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைநிறைவேற்ற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அன்றாடபணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில்பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். தொழில்வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால்லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள்கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி ஏற்படும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். கூட்டாளிகள் ஆதரவாகசெயல்படுவார்கள். உத்தியோகத்தில் பணி சுமை குறைந்து நிம்மதியுடன்பணி புரிய முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள்கிடைக்கும். வெளியூர் மூலம் நல்ல செய்தி வரும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைய முடியும்.  

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ராகு பரணி நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், சனி 3-ல் குரு 5-ல்சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும்அனுகூலங்கள் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள்விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கூட்டுகுடும்பத்தில் உள்ளவர்களுக்கு உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுப்பாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வயதைஅடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமானசுபகாரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால்குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாககுறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு சொந்த வீடுவாகனம், போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள்நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில்பெரிய தொகைகளை பயன்படுத்தி வளர்ச்சி அடைய முடியும். கொடுத்தகடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம்செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். பயணங்களால்அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில்உயர்வடைவார்கள். பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் கிடைத்துஉங்கள் வாழக்கை தரம் உயரும். உங்கள் திறமைகளை வெளிகாட்டநல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரியவிரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதாலும், 3-ல் சனி, 5-ல்குரு சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள்நடக்கும். 12-ல் கேது ராகு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் தூரபயணங்கள் மூலம் அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் அனுகூலம்கிடைக்கும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உடல் நிலை சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகசெயல்படும் ஆற்றல் உண்டாகும். கடந்த கால மருத்துவ செலவுகள்குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பணவரவுகள்தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள்சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாகஇருப்பார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள்நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலைஇருக்கும். வேலையாட்கள் உதவியாக இருப்பதால் பெரிய ஆடரை கூடஎளிதில் கையாண்டு நல்ல லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளிடம்இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறைந்து நிம்மதியுடன் தொழில் செய்யமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில்ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில்எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்படசெயல்பட முடியும். வேலைபளு குறைவது மட்டுமில்லாமல் எதிர்பார்த்தநல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திவரும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதாலும், வரும் 22-04-2023 முடிய குரு 5-ல் சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக வளமானபலன்கள் கிடைக்கும். சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனிநடப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில்சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. இருப்பதை அனுபவிக்கஇடையூறுகள் உண்டாகும். வண்டி வாகனங்கள் மூலம் எதிர்பாராதசெலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம்உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள்அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும்.  உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலநேரங்களில் அவர்களே தேவையற்ற பிரச்சினைகளையும்ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரியதொகைகளை ஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும். தொழில்வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதோடுஎதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். தொழிலாளர்களும் கூட்டாளிகளும்ஆதரவாக செயல்படுவார்கள். பயணங்களால் சாதகப்பலன் அமையும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின்பாராட்டுதல்களைப் பெற முடியும். எதிர்பார்க்கும் இட மாற்றம்கிடைக்கும். உங்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கானஆதாயம் கிடைக்கும். உங்கள் மீது இருந்த வீண் அவபெயர் விலகும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதால் உங்கள் உழைப்பால்நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 6-ல்குரு, 12-ல் கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் பணவிஷயத்தில் நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றுஅக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. அலைச்சல் காரணமாக உடல்அசதி உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்றபிரச்சினைகள் உண்டாகி குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப்பெற முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால்அவர்கள் மூலம் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலைஉண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சிஅளிப்பதாக அமையும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளைபிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில்மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபத்தினைப் பெற முடியும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்திகொள்வது நல்லது. வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கபெறும் என்றாலும் தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்ளவும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9   நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்         கிழமை - செவ்வாய், வியாழன்

கல் - பவளம்,              திசை - தெற்கு                          தெய்வம் - முருகன்

 

பரிகாரம்

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 12-ல் சஞ்சரிப்பதால்தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்குஅர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை, போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம்தருவது, சர்ப சாந்தி செய்வதும், விநாயகரை வழிபடுவது நல்லது.

9. தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவிசெய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள்ராசிக்கு 6, 12-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்கள் தற்போது ஏற்படும் ராகு- கேது பெயர்ச்சி மூலம் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). உங்கள் ராசிக்கு ராகு 5-லும், கேது 11-லும் சஞ்சரிக்கஉள்ளனர். நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் சற்று சிந்தித்துசெயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கியவிஷயத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில்திறம்பட செயல்பட முடியும். உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடுடன்இருப்பது நல்லது. பூர்வீக சொத்து ரீதியாக பங்காளிகளிடம் தேவையற்றகருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையுடன்இருப்பது சிந்தித்து பேசுவது நல்லது. எவ்வளவு நெருக்கடிகள்இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கைஅடைந்து விடுவீர்கள்.

உங்கள் ராசிக்கு தற்போது 2-ல் சனி சஞ்சரிப்பதால் சிறிது காலத்திற்குபேச்சில் பொறுமையுடன் இருக்கவும். குடும்பத்தில் உள்ளவர்களால்தேவைற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்கள் ராசியாதிபதி குரு 4-ல் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை சஞ்சரிப்பதால்பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக தற்போது இருக்கும் என்றாலும்எதிர்பாராத உதவிகள் மூலம் உங்களின் அனைத்து தேவைகளும்பூர்த்தியாகும்.

தொழில் வியாபாரத்தில் தற்போது உள்ள வாய்ப்புகளை தக்க வைத்துகொண்டு நீங்கள் சற்று கடினமாக உழைத்தால் படிப்படியானமுன்னேற்றங்களை அடைய முடியும். அதிக முதலீடு கொண்டசெயல்களை தற்காலிகமாக தள்ளி வைக்கவும். உத்தியோகத்தில்இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். உங்கள்திறமைகளை வெளிபடுத்த நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது குடும்பவிஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை 3-ல் அதிசாரமாக சஞ்சரிக்க இருக்கும்காலத்தில் உங்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை அடையும்யோகம் உண்டு. வரும் 17-01-2023 முதல் சனி உங்கள் ராசிக்கு 3-ல்திருக்கணிதப்படி சஞ்சரிக்க இருப்பதால் ஏழரைச்சனி முழுமையாகமுடிந்து உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். அது மட்டுமில்லாமல்குரு 22-04-2023 முதல் 5-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமானஅமைப்பாகும்.

வரும் 2023-ல் உங்கள் வாழ்வில் மிகபெரிய முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமாகன சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்புபிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபரத்தில் நல்லமுன்னேற்றம், இருந்த நெருக்கடிகள் விலகி அனைத்து வகையிலும்லாபங்கள் கிடைக்கும். தற்போது உள்ள கடன் பிரச்சினைகள் எல்லாம்படிப்படியாக விலகி சேமிக்கும் அளவிற்கு உங்களின் பொருளாதாரநிலை மேன்மை அடையும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும்யோகம் உண்டாகும். உத்தியோக ரீதியாக இருந்த பணி சுமைகள் விலகிஉங்கள் திறமைகள் பாராட்டப்படும். உயர் பதவிகள் கிடைக்கும்யோகம், எதிர்பார்த்த இடமாற்றங்களை அடையும் வாய்ப்பு உண்டாகும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த மன கவலைகள் விலகிசமுதாயத்தில் கௌரவமான நிலையை எட்ட முடியும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் இருந்தாலும் எதையும்சமாளித்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். சிறுபாதிப்பு என்றாலும் உடனே அதற்கு சிகிச்சை எடுப்பது நல்லது. நீண்டநாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள்படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். ஜனவரி 2023 முதல் உங்கள்ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். சிலருக்கு வயிறு பிரச்சினைஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதுஇயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. 

குடும்பப் பொருளாதார நிலை

குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சிலருக்குஅசையும் அசையா சொத்துக்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறிது மன கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களைபக்குவமாக கையாளுவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் ரீதியாகஉறவினர்களிடம் கருத்து வேறுப்பாடுகளுக்கு வாய்ப்பு இருப்பதால் சற்றுகவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவுகள் சற்று சாதகமாகஇருக்கும். 2023 ஜனவரிக்கு பிறகு உங்களுக்கு உள்ள அனைத்துபிரச்சினைகளும் விலகி சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள்.

உத்தியோகம்

பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால்மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதியஉயர்வுகளும், பதவி உயர்வுகளும் சற்று தாமதமாக கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பது மன நிம்மதியை தந்தாலும்சக நண்பர்களிடம் சற்று கவனத்துடன் பேசுவது நல்லது. புதிய வேலைதேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திகொண்டால் 2023 ஜனவரிக்கு பிறகு மிக பெரிய வாய்ப்புகள்கிடைக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் படிப்படியாக முன்னேற்றங்கள் இருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உங்கள்செயல்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். கூட்டாளிகளை மட்டும்அனுசரித்து செல்வது  நல்லது. தற்போது சிறிது நெருக்கடிகள்இருந்தாலும் 2023 ஜனவரி முதல் தொழிலில் சிறப்பான நிலையைஅடைவீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் ஆதாயம் கிடைக்கும். பெரியதொகைகளை கையாள்வதை தற்போதிய காலத்திற்கு தள்ளிவைக்கவும். 2023 ஜனவரிக்கு பிறகு உங்கள் பிரச்சினைகள் குறைந்துநல்ல லாபத்தை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள்கிட்டும். கொடுத்த கடன்கள் சற்று தாமதமாக வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு வழக்குபோன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும். வெளிவட்டாரத் தொடர்புகள்விரிவடையும்.

அரசியல்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமேஅவர்களின் ஆதரவுடன் பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் மாண்புமிகு உயர் பதவிகள் ஜனவரி 2023-ல் கிடைக்கும். கட்சிப் பணிகளுக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உங்கள் பேச்சிற்கு அனைத்துஇடங்களிலும் ஆதரவு அதிகரிக்கும். பத்திரிக்கையாளர்களின் ஆதரவுசிறப்பாக இருக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். கூலியாட்களின் ஒத்துழைப்புகுறைவாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு பயிர்விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள்கிடைக்கும். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். பங்காளிகளைஅனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். கால்நடைகளால் அனுகூலம் உண்டாகும்.

கலைஞர்கள்

எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று தங்கள்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உங்கள்உழைப்பிற்கான பலன் தற்போது கிடைக்காக விட்டாலும் விரைவில்நல்ல நிலை அடைவீர்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு இடையூறுஏற்படும். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும். படப்பிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சாதகமாக இருக்கும். சிலருக்கு கர்பபைசம்மந்தபட்ட பாதிப்பு ஏற்படலாம் என்பதால் உடல் நலத்தில் சற்றுஅக்கறை எடுத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் சற்றுஅனுசரனையாக நடந்து கொள்வது நல்லது. 2023 ஜனவரிக்கு பிறகுஅனைத்து வகையிலும் மகிழ்ச்சி குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்லமதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப்பெறுவீர்கள். மேற்படிப்பிற்காக வெளியூர் செல்வீர்கள். தேவையற்றநண்பர்களின் சேர்க்கை உங்களை வேறு பாதைக்கு அழைத்து செல்லும்என்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. பள்ளிகல்லூரிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நடந்து கொள்வீர்கள்.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

உங்கள் ராசிக்கு 5-ல் ராகு கிருத்திகை நட்சத்திரத்தில்சஞ்சரிப்பதாலும், 4-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக சிலஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் கேது 11-ல்ராசியாதிபதி குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், சனி 3-ல் வரும் 29-04-2022 முதல் அதிசாரமாக சஞ்சரிப்பதாலும் எதிர்பாராதஅனுகூலங்களை அடைவீர்கள். எதையும் சமாளித்து ஏற்றம் பெறமுடியும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பதுநல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ணசம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம் என்பதால் உணவுவிஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் சுமாராகஇருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். உங்களின் கடன் பிரச்சினைகள் சற்று குறைந்து நிம்மதி ஏற்படும். பின்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள்ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் சற்றுமந்தமான சூழ்நிலை இருத்தாலும் பொருட் தேக்கங்கள் விலகிபடிப்படியான முன்னேற்றங்களை அடைய முடியும். கூட்டாளிகளையும்தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில்இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பார்க்கும்உயர்வுகள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும். சிலருக்கு தேவையற்றஇடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் சுபசெலவுகளை சந்திப்பீர்கள்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

உங்கள் ராசியாதிபதி குரு நட்சத்திரத்தில் கேது 11-ல் சஞ்சரிப்பதால்எதிர் நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். சனி 2-ல், குரு 4-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, கிடைக்கும் வாய்ப்புகளைபயன்படுத்தி கொள்வது நல்லது. ராகு 5-ல் சுக்கிரன் நட்சத்திரத்தில்சஞ்சரிப்பதால் ஒரு சில அனுகூலங்கள் கிடைக்கும் என்றாலும்பங்காளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில்சற்று கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே தேவையற்ற மருத்துவசெலவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பண வரவுகளில்நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளைஎதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள்தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களைஅனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்றுமந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர் நீச்சல் போடவேண்டி வரும். இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்வதுநல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியானநிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும். தேவையின்றி பிறர்விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தேவையற்றபயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில்பெரிய தொகைகளைத் ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

கேது 11-ல் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும்தைரியத்துடன் செயல்பட்டு நற்பலனை பெறுவீர்கள். குரு 4-ல்சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்துசெயல்பட்டால் லாபங்களை அடைய முடியும். சனி 2-ல்சஞ்சரிப்பதாலும், ராகு 5-ல் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும்நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது உணவுவிஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பணவரவுகள்தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துகொள்ளலாம். குடும்பத்தில் அடிக்கடி சிறு சிறு தேவையற்ற ஒற்றுமைகுறைவுகள் உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள்தவறாக எடுத்து கொள்வார்கள் என்பதால் சிந்தித்து பேசுவது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின்புஅனுகூலமானப் பலனை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விட கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும்கூட்டாளிகளையும் அனுசரித்து சென்றால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைஈடுபடுத்துவதை தற்போது தள்ளி வைக்கவும். உத்தியோகஸ்தர்கள்பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப்பெறுவார்கள். பணிசுமை காரணமாக அதிக அலைச்சலை எதிர்கொள்ள நேரிடும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

உங்கள் ராசிக்கு 11-ல் கேது சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும். 3-ல்சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில்மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். எல்லா வகையிலும்அனுகூலங்கள் கிடைக்கும். ராகு 5-ல் அசுவனி நட்சத்திரத்தில்சஞ்சரிப்பதால் இயற்கை உணவுகளாக எடுத்து கொண்டால் உடல் நலம்நன்றாக இருக்கும். வரும் 22-04-2023 முதல் குரு 5-ல் சஞ்சரிக்கஇருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்த பொருளாதாரநெருக்கடிகள் குறைவது மட்டுமில்லாமல் கடந்த கால கடன்பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகளில்எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும்ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலைவிலகி முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்வாய்ப்பினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துசெயல்பட்டால் லாபம் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள்வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குமேலதிகாரிகளால் கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின்ஒத்துழைப்பால் எதையும் சமாளிப்பீர்கள். உங்களுக்கு இருந்தவேலைபளு குறைந்து நல்ல பதவியை அடையும் யோகம் உண்டு. நீண்டநாட்களாக வராது இருந்த சம்பளபாக்கி வந்து மகிழ்ச்சி ஏற்படும். அரசுவழியில் எதிர்பார்க்கும் ஆதாயங்கள் தேடி வரும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

உங்கள் ராசிக்கு கேது 11-ல் சித்திரை நட்சத்திரத்தில்சஞ்சரிப்பதாலும். சனி 3-ல், குரு 5-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள்வாழ்வில் இருந்த அனைத்து விதமான சோதனைகளும் மறைந்துமிகபெரிய வளர்ச்சியை அடைவீர்கள். உங்களுக்கு இருந்த வம்புவழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். ராகு 5-ல்சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, பங்காளிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள்உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன்கடன்களும் நிவர்த்தி ஆகும். தடைபட்ட திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால்சாதகப்பலனை அடையலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமைசிறப்பாக இருக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள்விலகி நிம்மதியான நிலை ஏற்படும். தொழில் வியபாரம் நல்ல முறையில்நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளைசமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள்தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளைபெற முடியும். வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப்பெறுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால்எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9, நிறம் - மஞ்சள், பச்சை     கிழமை - வியாழன், திங்கள்

கல் - புஷ்ப ராகம்   திசை - வடகிழக்கு               தெய்வம் - தட்சிணாமூர்த்தி

 

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 5-ல் சஞ்சாரம் செய்வதால்ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்கள், மந்தாரை மலர்களால்அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்குமஅபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றைபயன்படுத்துவது நல்லது.

உங்களுக்கு 17-01-2023 முடிய ஏழரை சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள் தீப மேற்றுவது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு நிறவஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளைபூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்குஉங்களால் முடிந்த உதவிகளை செய்வது, கருப்புநிற ஆடை அணிவதுநல்லது.

குரு சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும்குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, நெய், தேன் போன்றவற்றைஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள்அணிவது நல்லது.

10. மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

நண்பர்களிடமும் விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல்கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5, 11-ல் சஞ்சரித்தநிழல் கிரகங்கள் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). ராகு ஜென்ம ராசிக்கு 4-ஆம் வீட்டிலும், கேது 10-ஆம் வீட்டிலும்சஞ்சாரம் செய்ய உள்ளது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதே நேரத்தில் சனி ஜென்ம ராசியில் 17-01-2023 முடியவும்அதன் பிறகு 2-லும் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரைச்சனிநடைபெற இருப்பதும், குரு உங்கள் ராசிக்கு 3-ல் 13-04-2022 முதல்22-04-2023 வரையும் அதன் பின்பு 22-04-2023 முதல் 4-ல் சஞ்சரிக்கஇருப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டியகாலமாகும்.

                உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, சிறுபிரச்சினை என்றாலும் உடனே மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வதுநல்லது. தேவையற்ற மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள மருத்துவகாப்பிடு எடுப்பது உத்தமம்.

பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது அதிக முதலீடு கொண்டசெயல்களை தற்போதிய காலத்தில் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் கை இருப்பை கொண்டு செலவு செய்வதும் கடன்வாங்குவதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

                உங்கள் ராசிக்கு 22-04-2023 முடிய 3-ல் சஞ்சரிக்கும் குருதனது சிறப்பு பார்வையாக 7, 9, 11-ஆம் வீடுகளை பார்ப்பதால்பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும் திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்பட்டுகுடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், கணவன்- மனைவி இடையேஅன்னோன்யம் அதிகரிக்கும். அழகிய குழந்தையை பெறும் வாய்ப்புஉண்டாகும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வார்கள். 

தொழில் வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே நீங்கள்போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்பிரச்சினைகள் இருக்கும். இருக்கும் வேலையாட்கள் சரியாகஒத்துழைக்க மாட்டார்கள் என்பதால் நீங்கள் எதிலும் முன் நின்றுசெயல்பட்டால் மட்டுமே தொழிலில் அன்றாட செயல்களை சிறப்பாகசெய்ய முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால்அவர்களை சார்ந்து செயல்பட்டால் அனுகூலங்களை அடைய முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களை தள்ளி வைப்பது நல்லது அப்படிசெய்ய வேண்டும் என்றால் அதனை உங்கள் பெயரில் செய்யாமல் குடும்பஉறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. தற்போது இருக்கும்வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டால் 17-01-2023 முதல் சனி2-ம் வீட்டிற்கு சென்ற பிறகு தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம்இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு காரணமாக உடல்அசதி ஏற்படும். நீங்கள் எடுக்கும் பணிகளை சற்று தாமதமாக செய்துமுடிந்தாலும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் உழைப்பிற்கானஊதியம் தற்போது கிடைக்கா விட்டாலும் பணியில் மதிப்பும்மரியாதையும் இருக்கும். சக ஊழியர்களை சற்று அனுசரித்து சென்றால்பணியில் நிம்மதியுடன் இருக்க முடியும். முடிந்த வரை கிடைக்கும்வாய்ப்புகளை தவற விடாமல் எந்த பணியிலும் முனைப்புடன்செயல்பட்டால் 2023 ஜனவரிக்கு பிறகு நல்ல வளர்ச்சியை அடையமுடியும். 

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடபணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில்உள்ளவர்களால் மன நிம்மதி குறையும். தேவையற்ற அலைச்சல்டென்ஷன்கள், இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாக கூடியகாலம் என்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தூரபயணங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கடினமாக உழைத்தால்தான் நற்பலனை அடைய முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை

பணவரவுகள் சற்று சாதகமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண்செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கானமுயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையேஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் நல்லதாகநினைத்து செய்யும் காரியங்களை உற்றார் உறவினர்கள் தவறாக எடுத்துகொள்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு வெற்றிபெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு சுபசெலவுகளை சந்திப்பீர்கள்.

உத்தியோகம்

எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளுஅதிகமாக இருக்கும் என்பதால் மனநிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல்நிலை காரணமாக எதிலும் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராதஇடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகளில் தேவையற்றஇடையூறுகள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேன்மைகள்அடைவீர்கள் என்றாலும் அதிக அலைச்சல் இருக்கும். தொழில்சிறப்பாக இருந்தாலும் மறைமுக பிரச்சினைகளால் அனைத்துவிஷயத்திலும் அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். உடனிருப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும். தூரபயணங்களை தவிர்க்கவும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வாங்குவதற்கு பலமுறை அலைந்துதான் வாங்க முடியும்.  நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீகசொத்துக்களால் ஓரளவுக்கு ஆதராயம் கிடைக்கும். பெரியமனிதர்களின் நட்பு மன ஆறுதலை தரும்.

அரசியல்

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் உங்கள் பதவிக்கு பங்கம்ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடிபயணங்களை மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள்அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதுநல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாது இருப்பது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைகையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்குதக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும்பணியில் சுனக்கம் ஏற்படும். எதிலும் நீங்களே முன் நின்று செயல்படவேண்டிய நிலை இருப்பதால் ஒய்வு இல்லாமல் உழைக்க வேண்டிஇருக்கும். பங்காளிகளை பகைத்து கொள்ளாமல் இருப்பது, தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

கலைஞர்கள்

எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்தவாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகள் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதுஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலைசிறப்பாக இருந்தாலும் சுகவாழ்விற்கு இடையூறு தேவையற்றஅலைச்சல் ஏற்படும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுப்பது நல்லது. குடும்பத்தில்உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தைகடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சினைகளை வெளி நபர்களிடம்பகிர்ந்து கொள்ளாது இருக்கவும். மண வயதை அடைந்தவர்களுக்குநல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் தேவைக்குஏற்றவாறு இருக்கும்.

மாணவ- மாணவியர்

மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலமிதுஎன்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்வி ரீதியாகமேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைளுக்குப் பின்அனுகூலம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள்மகிழ்ச்சியினை அளிக்கும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளின் போதுசற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புக்களை தவிர்ப்பதுநல்லது.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

ராகு சூரியன் நட்சத்திரத்தில் 4-ல், கேது குரு நட்சத்திரத்தில் 10-ல்சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்கஇடையூறுகளை ஏற்படும். ஏழரைச்சனி நடப்பதாலும், குரு 3-ல்சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் காலம்என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்மந்தபட்ட பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில்கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்துசென்றால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள்ஏற்படுவதை தவிர்க்கலாம். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால்திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள்தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரியதொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகள்ஏற்படுவதை குறைக்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள்கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வதுஉத்தமம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையற்றசெயல்பாடுகளால் மனநிம்மதி குறையும். எதிலும் நீங்கள் முனைப்புடன்செயல்பட்டால் தான் போட்ட முதலை எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்துதங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளுகூடுதலாக இருக்கும் என்பதால் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதுஉத்தமம்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ராகு சுக்கிரன் நடசத்திரத்தில் 4-ல், கேது குரு நட்சத்திரத்தில் 10-ல்சஞ்சரிப்பதும், ஏழரைச்சனி நடப்பதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும்நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, பொருளாதார நெருக்கடியால் கடன்வாங்கும் சூழ்நிலை உண்டாகும். வீண் அலைச்சல் டென்ஷன்கள்அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எதையும்சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள், வாக்கு வாதங்கள் போன்றவை தோன்றினாலும்ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் தேவையற்றபிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில்தலையீடு செய்யாது இருப்பது நல்லது. திருமண வயதைஅடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதற்கான சூழ்நிலைஉண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களைசந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராதஇடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பிறர் செய்யும்தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால்பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம்செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். கிடைப்பதை பயன்படுத்தி கொள்ளவும். கூட்டாளிகளின் உதவியால்தொழிலில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க முடியும். நீங்கள்எதிர்பார்க்கும் பொருளாதார உதவிகள் தாமதப்படுவதால் தொழிலில்சற்று நெருக்கடியுடன் அன்றாட செயல்களை செய்ய நேரிடும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு பரணி நட்சத்திரத்தில் 4-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 10-ல்சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர் நீச்சல் போட வேண்டிய காலமாகும். ஏழரைச்சனி நடப்பதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் ஆரோக்கியத்தில்அக்கறை எடுத்து கொள்வது கை இருப்பை கொண்டு செலவு செய்வதுநல்லது. பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள்மூலம் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். கணவன்- மனைவிதேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்த்து விட்டு கொடுத்து நடந்துகொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்ற கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் தங்கள்பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின்பாராட்டுதல்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின்ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில்சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை அடையமுடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்போது தவிர்ப்பதுநல்லது. அரசு வழி அதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பதுநல்லது. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 4-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 10-ல்சஞ்சரிப்பதால் உங்களுக்கு பல்வேறு வகையில் வேலைபளு அதிகரித்துசுக வாழ்வு சொகுசு வாழ்வு பாதிக்கும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சைகுறைத்து கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகிமருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி இடையேஅனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. முன் கோபத்தால் வீண்பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாகஇருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள்ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமேஅனுகூலப்பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்குமுன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும்அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டிபொறாமைகளால் கை நழுவிப் போகும். உத்தியோகத்தில்இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருக்கும். சக ஊழியர்களைஅனுசரித்து சென்றால் நீங்கள் எடுக்கும் பணியை குறிப்பிட்ட நேரத்தில்செய்து முடித்து நற்பெயர் எடுக்க முடியும். சிலருக்கு தேவையற்றஇடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு வெகு தூரம் சென்றுபணிபுரியும் நிலை ஏற்படும். அசையா அசையா சொத்துக்களால் சுபசெலவுகளை சந்திப்பீர்கள்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ராகு கேது நட்சத்திரத்தில் 4-ல், கேது செவ்வாய் நட்சத்திரத்தில் 10-ல்சஞ்சரிப்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சனி 2-ல் சஞ்சரித்து ஏழரைச்சனி நடப்பதால் கொடுக்கல்- வாங்கல்விஷயத்தில் யோசித்து செயல்படுவது நல்லது. குரு 4-ல் சஞ்சரித்து 8, 10-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் இருந்த உடம்பு பாதிப்புகள்குறையும் அமைப்பு, தொழில் ரீதியாக படிப்படியான முன்னேற்றங்கள்ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில்உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள்தேவைக்கு ஏற்றபடி இருக்கும். எதிர்பாராத உதவிகளால் உங்களுக்குஉள்ள கடன் பிரச்சினைகள் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் குடும்பத் தேவைகளைபூர்த்தி செய்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்குதேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும்சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பயணங்களால் சிறு சிறுஅலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்ககூடிய வலிமையை பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதுஉத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள்கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள்கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம்கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைதவிர்ப்பது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  5,6,8     நிறம் - நீலம், பச்சை           கிழமை - சனி, புதன்

கல் - நீலக்கல்            திசை - மேற்கு                           தெய்வம் - விநாயகர்

 

பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 4-லும் கேது 10-லும்சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது. விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை தானம் தருவது நல்லது.

ஏழரை சனி நடைபெறுவதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள்மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்பு நிறஆடை அணிவது நல்லது.

குரு உங்களுக்கு சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரமாகவியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால்அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன்போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது நல்லதுI 

11. கும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும், எல்லோரிடத்திலும்அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை நிழல் கிரகமான ராகு 4-லும், கேது10-லும் சஞ்சாரம் செய்வதால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கநேரிட்டது. தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால்திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). ராகுஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும், கேது 9-ஆம் வீட்டிலும் சஞ்சாரம்செய்வது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள்அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்தகாரியங்கள் யாவும் நினைத்தபடி நிறைவேறும். கடந்த கால அலைச்சல்டென்ஷன் எல்லாம் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். சிலருக்குவெளியூர் பயணங்களால் மேன்மைகள் ஏற்படும்.  அன்றாட செயல்களில்திறம்பட ஈடுபடுவீர்கள். கடந்த கால வீண் செலவுகள் குறையும். மனைவிபிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பார்கள். கணவன்- மனைவியிடையேஅன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமானநிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் நற்பலன்கள்ஏற்படும். பிரிந்த சொந்தங்களும் தேடி வந்து நட்பு பாராட்டும். சொந்தபூமி மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

குரு வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை உங்கள்ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும்பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். மணவயதைஅடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பூர்வீக சொத்துவிஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபத்தினை அடைய முடியும். கொடுத்தவாக்குறுதிகளையும் காப்பாற்றி பெரிய மனிதர்களின் ஆதரவுகளைப்பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சிஅளிக்கும். கடந்த காலங்களில் இருந்த பொருட்தேக்கங்கள் குறைந்துலாபகரமான பலனை அடைய முடியும். உத்தியோகத்தில்இருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும். எதிர்பார்க்கும்உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு குறையும்.

                உங்கள் ராசியாதிபதி சனி தற்போது 12-ல் சஞ்சரிப்பதாலும்வரும் 17-01-2023 முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும்உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் உடல் நலத்தில் அக்கறைஎடுத்து கொள்வது, அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்றுமுன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

குரு வரும் 22-04-2023 முதல் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்கஇருப்பதால் பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கமாக நிலை இருக்கும்என்றாலும் ராகுவின் சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளித்துமுன்னேற்றங்களை அடைவீர்கள்.

 

உடல் ஆரோக்கியம்

உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனேசரியாகி விடும். மருத்துவச் செலவுகள் சற்று குறையும். வீண்செலவுகளை எதிர் கொள்ள மருத்துவ காப்பிடு எடுத்து கொள்வதுநல்லது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம்ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பன் கிடைக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதைஅடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் சிறுசிறு மன கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களிடம்கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால்பொன் பொருள் சேரும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம்உண்டாகும்.

உத்தியோகம்

கடந்த கால தடைகள் விலகி பணியில் பதவி உயர்வுகள் கிடைத்து மனநிம்மதி ஏற்படும். இருக்கும் இடத்தில் கௌரவமும் பெயர் புகழும்உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியவிரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். அலைச்சல்கள் குறைந்துஎதிலும் நிம்மதியாக இருக்க முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்குதகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்தஇடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகள் குறையும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில்கையெழுத்திடுவீர்கள். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில்உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர்வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின்ஒத்துழைப்பு குறைவாக இருக்கும் என்பதால் வேலைபளு சற்றுஅதிகரிக்கும். உங்களுக்குள்ள வங்கி கடன்கள் சற்று குறையும். அதிகமுதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனம் தேவை.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடிவரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமானபலன் கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் குடும்ப தேவைகள்மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்புவழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும் அசையாசொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். ஆடம்பரசெலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

அரசியல்

பெயர் புகழ் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால்மன மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும்கிடைக்கும். பெயர் புகழ் உயர்வடையும். கட்சிப் பணிகளுக்காக நிறையசெலவுகள் செய்ய நேர்ந்தாலும் வர வேண்டிய பணவரவுகள் வந்துசேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ மிக்க பதவிகள் தேடி வரும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலைசந்தையில் கிடைப்பதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாகஇருப்பதால் புதிய நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். கூலியாட்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு கிடைக்க மாட்டார்கள் என்பதால்நீங்கள் எதிலும் நேரடியாக செயல்பட வேண்டி இருக்கும். அரசு வழியில்மானிய உதவிகள் கிட்டும்.

கலைஞர்கள்

திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின்ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையில் இருந்த பணத்தொகைகள் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும்சிறப்பாக அமையும். படபிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களைமேற்கொள்வீர்கள். நேரத்திற்கு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குமுக்கியதுவம் தருவது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். இயற்கை உணவுகளை எடுத்து கொண்டால் ஏற்படும் இடர்பாடுகளைதவிர்க்க முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதுபேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையாசொத்துக்களால் லாபம் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் அனுகூலம்ஏற்படும்.

மாணவ மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புகளையும்பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. திறனை வெளிபடுத்தும்போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பெரியமனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 2-ல் குரு ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் வெற்றிகடந்த கால சோதனைகள் மறைந்து வாழ்வில் முன்னேற்றம்உண்டாகும். கேது விசாக நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர்தொடர்புகள் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். உங்களுக்குஏழரைச்சனி நடைபெறுவதால் உடம்பு பாதிப்புகள் ஏற்படும் என்றாலும்குரு 6, 8-ஆம் வீடுகளை பார்ப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகசெயல்படுவீர்கள். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமானநிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போதுமேற்கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் வளர்ச்சிக்கான நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம்உண்டாகும். தொழில்- வியாபாரத்தில் போட்டி பொறாமைகளைசமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும்கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலைஉண்டாகும். உங்களுக்கு இருந்த வேலைபளு குறைந்து மன நிம்மதிஏற்படும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளைபெற முடியும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ராகு தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன் நட்சத்திரத்தில் 3-ல்சஞ்சரிப்பதாலும், குரு 2-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் நீங்கள்பல்வேறு வலமான பலன்களை பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில்மகிழ்ச்சி ஏற்படும். உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்என்றாலும் சனி 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொள்வது நல்லது. கேது குரு நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால்குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவுகள்தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும்பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சுப காரியங்களுக்கானமுயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில்சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகைமகிழ்ச்சியினை அளிக்கும். வெளியூர் பயணங்களால் வாழ்க்கை தரம்உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல்சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இருந்தமறைமுக எதிர்ப்புகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்திபெருகி லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில்மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் மன நிம்மதியுடன்செயல்பட முடியும். பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். உங்கள்திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு பரணி நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதாலும், குரு 2-ல்சஞ்சரிப்பதாலும் உங்கள் செயல்கள் வெற்றி பெற்று சமுதாயத்தில்உயர்வான நிலையை அடைவீர்கள். ஏழரைச்சனி நடப்பதால் அதிகமுதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது, குறிப்பாகவேலை பளுவை குறைத்து கொள்வது நல்லது. கேது சுவாதிநட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன்இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அதன்மூலம் அனுகூலம் கிடைக்கும். தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சகோதரசகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். மங்களகரமான சுபகாரியங்கள்எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண வயதைஅடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில்மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையாசொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்தகடன்களும் வசூலாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் நீங்கிஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில்- வியாபாரம் நல்லமுறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் மற்றும்தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். அரசு வழியில்எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்லவாய்ப்புகள் கிடைக்கும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 3-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 9-ல்சஞ்சரிப்தால் நீங்கள் எதிலும் தைரியத்துடன் செயல்பட முடியும். குருவரும் 22-04-2023 முடிய 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவிற்கு பஞ்சம்இருக்காது. சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் நலத்திற்குமுக்கியதும் தருவது நல்லது. அலைச்சல் டென்ஷன் காரணமாக உடல்அசதி ஏற்படும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால்அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்தபூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்கு சிறப்பானபுத்திர பாக்கியம் அமையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள்நிறைவேறும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும்தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும்ஒரளவுக்கு பெருகும். புதிய வாய்ப்புகள் கிடைத்து தொழிலில் நல்லமுன்னேற்றம் ஏற்படும். வெளியூர் மூலம் நீங்கள் எதிர்பார்த்தபொருளாதார உதவிகள் கிடைத்து மன நிம்மதி அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்களையும் பதவிஉயர்வுகளையும் பெற முடியும். சக ஊழியர்களை அனுசரித்து சென்றால்ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும். அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், கேது செவ்வாய் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதாலும் எதிர் நீச்சல்போட்டாவது நன்மைகளை அடைவீர்கள். ஜென்ம ராசியில் சனி, 3-ல்குரு சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது கிடைக்கும்வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. உடல்ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவதுநல்லது. முடிந்த வரை தூர பயணங்களை தவிர்க்கவும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில்சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவிஇடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக்குறையாது. சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு உண்டு. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண்பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் கிடைத்துகுடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள்குறையும். தொழில்- வியாபாரத்தில் ஒரு சில அனுகூலம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். சிறுசிறு நெருக்கடிகள்இருக்கும் என்றாலும் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன்மூலம் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். சகஊழியார்கள் உதவி கிடைப்பதால் எடுத்த பணியை குறிப்பிட்டநேரத்தில் செய்து முடிப்பீர்கள். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால்நற்பலனை அடைய முடியும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,     கிழமை - வெள்ளி, சனி                    திசை - மேற்கு

கல் - நீலக்கல்            நிறம் - வெள்ளை, நீலம்                    தெய்வம் - ஐயப்பன்

 

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது நல்லது. திருப்பதி ஏழு மலையில்வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, சனிபகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும்கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்பு நிறஆடை அணிவது நல்லது.

12. மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல்கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை 3, 9-ல் சஞ்சரித்த ராகு, கேது தற்போது ஏற்படும் மாறுதலால் திருக்கணிப்பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை(வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). சர்பகிரகங்களான ராகு உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டிலும், கேது 8-ஆம்வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளதால் வரும் நாட்களில் நீங்கள் எதிலும்கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிகஅக்கறை எடுத்து கொள்ள வேண்டிய காலமாகும். உணவு விஷயத்தில்கட்டுப்பாடுடன் இருந்தால் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை தவிர்க்கமுடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படகூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார்உறவினர்களிடையே தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது, சொந்தவிஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது உத்தமம்.

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி 17-01-2023 வரைசஞ்சரிப்பதால் சனியின் சாதக சஞ்சாரத்தால் எடுக்கும் முயற்சியில்அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலனைஅடைய முடியும். புதிய உக்திகளை பயன்படுத்தி சமுதாயத்தில் நல்லநிலையை எட்ட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்துஅனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில் நல்ல நிலையும், கௌரவ பதவியை அடையும் வாய்ப்பும்உண்டாகும்.

சனி வரும் 17-01-2023 முதல் 12-ல் சஞ்சரிக்க இருப்பதால்உங்களுக்கு ஏழரைச்சனி தொடங்குவதால் சனி மாற்றத்திற்கு பிறகுஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது அதிக முதலீடுகொண்ட செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

உங்கள் ராசியாதிபதி குரு வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரைஜென்ம ராசியில் சஞ்சரித்து 5, 7, 9- ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால்சுப காரியங்களில் நிலவிய தடைகள் விலகி நல்லது நடக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் அமையும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம்உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருந்தாலும் எதிலும் சற்றுசிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதுநல்லது.

வரும் 22-04-2023 முதல் குரு 2-ல் சஞ்சரிக்க இருப்பது மிகவும்அற்புதமான அமைப்பு என்பதால் அக்காலத்தில் ஏழரைச்சனிநடைபெற்றாலும் பண வரவுகளில் அனுகூலங்கள் ஏற்படும். எதிர்பாராதவகையில் உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகள்பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் குறைந்துலாபம் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நல்லது நடக்ககூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் சற்றுமுன்னேற்றங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் உள்ளபிரச்சினைகள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். மனைவி பிள்ளைகளுக்கு உண்டாக கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால்வீண் செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்படசெயல்படுவார்கள். நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பதும்இயற்கை உணவுகளை எடுத்து கொள்வதும் நல்லது. தூர பயணங்களைதவிர்க்கவும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள்வழியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகளும்கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களைமேற்கொள்வீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். திருமணசுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம்அனுகூலப்பலன்களை அடைய முடியும்.

உத்தியோகம்

எடுக்கும் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணியில் சிலகெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகஇருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலைஉண்டாக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில்நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடுசெய்யாது இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைதவற விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சாதகமாகஇருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். புதியவாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. புதிய நபர்களிடம் பேசும்போது பேச்சில் சிந்தித்து பேசுவது உத்தமம். தொழிலில் படிப்படியானவளர்ச்சியை அடையும் யோகம் உங்களுக்கு இருந்தாலும் உடல்நலத்திற்கு சற்று நேரம் ஒதுக்குவது நல்லது. தேவையற்ற பயணங்களைதவிர்த்து விடுவது உத்தமம்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள்சில கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களைவசூலிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் வசூல் செய்து விட முடியும். வம்புவழக்குகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். அசையா சொத்துக்களைபராமரிப்பதற்காக சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவுகிடைப்பதால் மன நிம்மதி கிடைக்கும்.

அரசியல்

மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின்தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காகநிறைய செலவாகும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும்முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பயணங்களால்அலைச்சல் வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்துசெயல்படுவது நல்லது. பொது இடங்களில் பேசும் போது பேச்சில்கவனமாக இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளில் இருந்துதப்பிக்கலாம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். சந்தையில் விளை பொருளுக்குஏற்ற விலை கிடைக்கும். போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். தக்க நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். எதிலும்நீங்கள் முன் நின்று செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பாராதஉதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பெரியமுதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவதுநல்லது. பங்காளிகளை அனுசரித்து செல்வது மூலம் எதையும் எதிர்கொள்ள முடியும்.

கலைஞர்கள்

உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து திறமைகளை வெளிபடுத்தமுடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்களது சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக இருக்கும். அனைத்து தேவைகளும் எளிதில்பூர்த்தியாகும். கடன்களை பைசல் செய்ய முடியும். போட்டிகள் அதிகம்இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்திகொள்வது நல்லது. பயணங்களால் அலைச்சல்களும் உடல் சோர்வும்ஏற்படும்.

பெண்கள்

கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, கணவர் வழிஉறவினர்களிடம் பேச்சில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப்பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திருமண வயதைஅடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாகஇருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து  கொள்வதுநல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் கவனமாக செயல்பட்டால் தான் முன்னேற்றத்தை அடையமுடியும். திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள் என்றாலும்படிப்பிற்கு அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். தனி திறனைவெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். பெற்றோர்ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற நண்பர்களின்சேர்க்கையால் மனது அலைபாய கூடிய சூழ்நிலை உண்டாகும்.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

ராகு சூரியன் நட்சத்திரத்தில் 2-ல், கேது குரு நட்சத்திரத்தில் 8-ல்சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது  உடல்ஆரேக்கியத்திற்கு முக்கியதும் தருவது நல்லது. குரு ஜென்ம ராசியில்சஞ்சரிப்பதால் பண வரவில் சற்று நெருக்கடிகள் இருக்கும் என்பதால்சிக்கனமாக செயல்படவும். எந்த விஷயத்திலும் சிந்தித்துசெயல்பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணியவாழ்க்கை அமையும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதைஅடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய வாய்ப்பு உண்டு. அசையும்அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படக்கூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைதவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் இருந்தாலும்வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிக்கனமாகஇருப்பது சிறப்பு. கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் தொழிலில்அனுகூலங்களை அடைய முடியும். வங்கி மூலம் நீங்கள் எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராதஇடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். வேலைபளுஅதிகரித்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். சக ஊழியர்களிடம்விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளைதவிர்க்கலாம். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ராகு பரணி நட்சத்திரத்தில் 2-ல், கேது குரு நட்சத்திரத்தில் 8-ல்சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வதுநல்லது. குரு பார்வை 7-ம் வீட்டிற்கு இருப்பதால் சுப காரியங்கள்கைகூடும். குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சில் பொறுமையுடன் இருந்தால்வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில்அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகிமருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சனி 11-ல்சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருந்து அனைத்துதேவைகளும் பூர்த்தியாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்டென்ஷன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குவேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். நீங்கள்எதிர்பார்க்கும் உயர்வுகள் தற்போது கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்தஇடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். அசையும்அசையா சொத்துக்களால் சுப செலவுகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் லாபத்தை அடையமுடியும். தொழில்- வியாபாரத்தில் இருந்த நெருக்கடி குறைந்துமுன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சுமாராக இருந்தாலும் புதிய வாய்ப்புகள்கிடைப்பதால் கடந்த கால பொருட் தேக்கங்கள் குறையும். எதிலும்சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 2-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 8-ல்சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்து கொண்டு எதிலும்பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உணவு விஷயத்தில்கட்டுப்பாடுடன் இருந்தால்  உடல் ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்கமுடியும். சனி 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு பல்வேறுவளமான பலன்களை பெறுவீர்கள். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால்பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள்இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முடிந்த வரைமற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். குருபார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். பணம்கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளைஈடுபடுத்துவதில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் ஆதாயம்கிடைக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் சுபசெலவுகள் ஏற்படலாம். தொழில்- வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்தநிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் இல்லாமல்போட்ட முதலீட்டை எடுக்க முடியும். கூட்டாளி மற்றும்தொழிலாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால்அனுகூலங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில்கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெறமுடியும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளுகூடுதலாக இருக்கும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 2-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 8-ல்சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே ஒன்றும் இல்லாதவிஷயத்திற்கு கூட வீண் பிரச்சினைகள் ஏற்படும். குரு வரும் 22-04-2023 முதல் 2-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள் விலகிபடிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். எந்த நெருக்கடிகளையும்எதிர்கொண்டு நற்பலன்களை அடைவீர்கள். எதிரிகளும் நண்பர்களாகமாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களைஅனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. குடும்ப விஷயங்களைமற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமல் இருப்பது உத்தமம். பணவரவுகள்தேவைக்கேற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அலைச்சல் டென்ஷன்களால் உடல் சோர்வு சிறு உபாதைகள்ஏற்பட்டாலும் பெரிய கெடுதியிருக்காது. தொழில்- வியாபாரத்தில்படிப்படியாக முன்னேற்றங்களை அடைவீர்கள். கூட்டாளிகளின்ஒத்துழைப்பால் அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில்இருந்த தேக்க நிலை மாறி லாபங்களை அடைய முடியும். கொடுத்தகடன் தக்க நேரத்தில் திரும்பி வரும். உத்தியோகத்தில்இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலைபளுகூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். வெளியூர்சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெற்று 2-ல் சஞ்சரிப்பதால்குடும்பத்தில் நிலவிய ஒற்றுமை குறைவுகள் விலகி நிம்மதி ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்கள் கஷ்டங்கள் விலகும். கடன்கள்யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையேஅன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் சுப செலவுகள் செய்யநேரிடும். திருமண சுப காரியங்களில் இருந்த தடைகள் விலகி நல்லமுன்னேற்றம் ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சிஅளிக்கும். சிலருக்கு புது வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கேது சித்திரைநட்சத்திரத்தில் 8-ல், சனி 12-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில்அக்கறை எடுத்து கொள்வது தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. இயற்கை உணவுகளை எடுத்து கொண்டால் ஆரோக்கிய பாதிப்புகளைதவிர்க்கலாம். தொழில்- வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் விலகி மனநிம்மதி ஏற்படும். கூட்டாளிகளும்ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்புமகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய திட்டங்களை செயல்படுத்திதொழிலை விரிவுபடுத்த முடியும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த வேலைபளு குறைந்து பதவி உயர்வுகள்கிடைக்கும். நீங்கள் எடுக்கும் பணியை சிறப்பாக செய்து நற்பெயர்எடுப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் நீங்கள் மனநிம்மதியுடன் பணி புரிய முடியும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9, கிழமை - வியாழன், ஞாயிறு      திசை - வடகிழக்கு

கல் - புஷ்ப ராகம்   நிறம் - மஞ்சள், சிவப்பு                    தெய்வம் -  தட்சிணாமூர்த்தி

 

பரிகாரம்

 மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2-ல் ராகு 8-ல் கேதுசஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மைவைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால்கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்திவிரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வைபோன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

குரு ஜென்ம ராசியில் 22-04-2023 வரை சஞ்சரிப்பதால்வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்குகொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிறமலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம்அணிவதும். குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியபிராமணர்களுக்கு தானம் செய்யவும்.