ரொனால்டோவின் பிறந்த குழந்தை உயிரிழப்பு

ரொனால்டோவின் பிறந்த குழந்தை உயிரிழப்பு

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டதாக சமூக ஊடகப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

ரொனால்டோ மற்றும் அவரது இணையர் ஜார்ஜினா ரோட்ரிகெஸ் ஆகியோர் இரட்டைக் குழந்தையை எதிர்பார்த்துள்ளனர். இதில் திங்கள்கிழமை ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தன. ஆனால், ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டது.

இந்தத் தகவலை சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்த இழப்பால் நாங்கள் அனைவரும் மனமுடைந்துள்ளோம். இந்தக் கடினமான நேரத்தில் எங்களது தனியுரிமைக்கு இடமளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் ரொனால்டோ. 

நன்றி :- தினமணி