மென்திறன்கள் என்றால் என்ன? Soft skills in tamil மென்திறன்களை எவ்வாறு வளர்த்துகொள்ளலாம்?

மென்திறன்கள் , வன்திறன்கள் வேறுபாடுகள், மென்திறன்கள் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்றன?, மென்திறன்களை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்.

மென்திறன்கள் என்றால் என்ன? Soft skills in tamil மென்திறன்களை எவ்வாறு வளர்த்துகொள்ளலாம்?
Google image

எந்தவொரு அமைப்பும் மக்களாலானது. அத்துடன் அதன் வெற்றி பிரதானமாக மனித வளங்களின் திறன்களிலும் அவர்களால் வழங்கக்கூடிய ஒத்துழைப்பின் வகைகளிலும் தங்கியுள்ளது. மனித மூலதனமானது எந்தவொரு நிறுவனத்திற்கும் ஒரு அடிப்படை அங்கமாகும். அத்துடன் அதன் தரமானது நிறுவனம் அடையக்கூடிய பெறுபேறுகளை ஆழமாகப் பாதிக்கிறது. சேவைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் இரண்டிலும் இது நிகழ்கிறது. இதுவே இறுதியாக இருந்தாலும் கூட, உற்பத்தியின் போட்டித்திறன் நிச்சயமாக அதைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் செய்முறைகளின் தேர்வை அடிப்படையாகக் கொண்டது.

கடந்த காலத்தில் எந்தவொரு தொழிற்துறை உற்பத்தியின் உற்பத்தி நிறுவனங்களும் முறைகள், அமைப்புக்கள், வசதிகள், கூறுகள் போன்றவற்றின் அடிப்டையில் அவற்றின் உற்பத்தியின் தொழிநுட்ப அம்சங்களைப் பற்றி பிரதானமாக அக்கறை கொள்கின்றன. தொழிநுட்ப ரீதியாக தயாரிக்கப்பட்ட மற்றும் அவர்கள் பணியமர்த்தப்பட்ட பணிகளைச் செய்யக்கூடிய தொழிலாளர்களைத் தேர்ந்தெடுக்க முயற்சித்தன.

தற்போது இந்த பார்வை மாறிவிட்டது. அத்துடன் தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டைச் செய்வதற்கான திறனுக்காக மட்டுமல்லாமல் காணப்படுகின்ற மென்திறனுக்காகவும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றார்கள். அவர்களிடையே

ஒரு குறிப்பிட்ட பணியுடன் நேரடியாக இணைக்கப்படாத அனைத்து திறன்களையும் சுட்டிக்காட்ட மென்திறன் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது அவை எந்தவொரு நிலையிலும் அவசியமானவை, ஏனெனில் அவை பிரதானமாக நிறுவனத்தில் ஈடுபட்டுள்ள மற்றவர்களுடனான உறவைக் குறிக்கின்றது.

 • மறுபுறம் வன்திறனானது ஒரு குறித்த வேலையைச் செய்வதற்கான குறிப்பிட்ட சில திறன்களைக் குறிக்கின்றது உதாரணமாக வன்திறன் என்பது கூறுகளை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட இயந்திரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுவதற்கும் ஒரு தொழிலாளியிடம் காணப்படும் திறனாகக் கொள்ளலாம்.

 • மென்திறன் என்பது ஒரே தொழிற்சாலை, திணைக்களம் போன்றவற்றில் பணிபுரியும் சக ஊழியர்களுடன் ஒத்துழைக்கும் திறனாகும். பின்னைய நாட்களில், மென்திறனானது எந்தவொரு தொழிற்துறை நிறுவனத்திலும் தந்திரோபாயக் கூறுகளாகக் கருதப்படுகின்றது மேலும் ஆட்சேர்ப்பு கட்டத்தில் மட்டுமல்லாது ஊழியர்களின் முழுத்தொழில் வாழ்கையிலும் மனிதவள நிர்வாகத்திடமிருந்து அவை அதிக கவனத்திற்குட்படுத்தப்பட வேண்டும் உற்பத்தி, அமைப்பு, சேவைகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை என்பவற்றின் தரத்தின் அடிப்படையில் தொழிற்துறையின் தரமானது எந்தவொரு மட்டத்திலும் பணிபுரியும் பணியாளர்களிடம் காணப்படும் மென்திறனில் தங்கியுள்ளது. எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரியும் மனித மூலதனத்தின் தரம் அதன்பிறகான அவர்கள் பெறுபேறுகள் என்பவை பிரதானமாக அவர்களின் மென்திறனில் தங்கியுள்ளது அடையக்கூடிய

 • மென்திறன்கள் மீதான முழுமையான பார்வையை வழங்குவதற்கு மென்திறன்களைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகும், அத்துடன் அதன் முக்கியத்துவம் மூலம் எந்தவொரு வேலையின் தரத்தினையும் தனிநபர் வாழ்க்கையினை மிகவும் பரந்த அளவிலும் அடையமுடியும். தொழிற்துறை நிறுவனங்களுக்குள் மென்திறன்களின் பொருத்தப்பாட்டினை மேம்படுத்தலானது ஒரு நிறுவனம் கல்வி நிறுவனங்களுடன் எவ்வாறு மென்திறன்களை கற்பிக்க ஒத்துழைக்க முடியும் என விபரிக்கிறது மற்றும் அதன் பணியாளர்களுக்கு இத்திறன்களை விருத்தி செய்வதற்கு பங்களிப்பு செய்கிறது வெற்றியினையும் போட்டித்தன்மையினையும் அதிகரிக்கிறது முழு நிறுவனத்தின்

2.மென்திறனின் தெரிவு மற்றும் வரைவிலக்கணம்

மென்திறன் தொடர்பாக பல வரைவிலக்கணங்கள் இலக்கியத்தில் காணப்படுகின்றன. சுய சார்ந்த மனதினுள் (உள்ளார்ந்த) மற்றும் பிற சார்ந்த நபர்களுக்கிடையேயான திறன் என்பவற்றுக்கிடையில் முதலில் வேறுபாட்டை மேற்கொள்ள வேண்டும்

முதலாவது வகையானது, நபரொருவர் தன்னைத்தானே புரிந்து கொள்வதுடன் தன்னைத்தானே வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது.

இரண்டாவது வகை, நபரொருவர் மற்றவர்களுடன் தொடர்பை விருத்திசெய்வதனைக் குறிக்கின்றது. தனிப்பட்ட மற்றும் சமூக திறன்களின் அடிப்படையில் இவ்வேறுபாட்டை நோக்கலாம். தனிப்பட்ட திறன்கள் பிரதானமாக அறிவாற்றல் திறன்களுடன் ஒத்துபோகின்றன. அதாவது அறிவு மற்றும் சிந்தனைத் திறன் போன்றவைகளைக் குறிப்பிடலாம் அதேவேளை சமூகத்திறன்கள் மற்றவர்களுடனான உறவைக் குறிக்கின்றன. சிலவற்றை குறிப்பிடுவதற்கு அறிவுத்திறன் என்பது தகவல்களை விரிவுபடுத்துவதற்கான திறனாகும். சிந்தனைத் திறன் என்பது விமர்சன ரீதியில் பயன்படுத்துவதற்கான திறன் கற்றுக்கொள்ளும் அடையக்கூடிய திறன் மற்றும்  விருப்பம் என்பவை தனிப்பட்ட அத்துடன் திறனுக்கான தொடர்ந்து இலக்குகளைத் திட்டமிட்டு எடுத்துக்காட்டுகளாகும்

தொடர்பாடல், செவிமடுக்கும் திறன், பேச்சுவார்த்தை, வலையமைப்பு, பிரச்சினைகளை தீர்த்தல், தீர்மானமெடுத்தல் மற்றும் உறுதிப்பாடு என்பனை அடையாளங்காணப்பட்ட பிரதான சமூகத்திறன்களாகும். (Engelberg, 2015)

அபிவிருத்தி மற்றும் மாற்றமடையும் சூழ்நிலைகளில் நவீனமாக (up-to date) இருப்பதற்கும் மென்திறன்கள் வன்திறன்களுக்கு தேவையான நெகுழும் தன்மையை அளிக்கின்றன மென்திறன்களானவை நெகிழ்வு, பகுத்தறிவு, விரிவுபடுத்தல், திறன்கள் என்பவற்றுடன் நெருக்கமாக தொடர்புடையவையென கடந்த 50,000 ஆண்டுகளில் மனிதனால் உருவாக்கப்பட்ட prefrontal cortex (cortex மூளையின் வெளிப்பகுதியினை மூடியிருக்கும் பொருள்) விரிவாக கூறப்பட்டுள்ளது.

வன்திறன்கள் மனிதனை ஒருவர் என்னவாக இருக்க எண்ணுகிறார் என்பதை அனுமதிக்கின்றன: ஒரு பொறியியலாளர், இயற்பியலாளர், ஒரு தத்துவவாதி. மென்திறன்கள் தனிநபரின் பாத்திரத்திலிருந்து தனித்தனியாகவும் தொழிலின் கடுமையான கோரிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இயங்கும் (Grisi, 2014).உரு 1 மென்திறனுக்கான வரைவிலக்கணம் Bryce Kingsley

Daniel Goleman இன் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு உரு | இல் தனிப்பட்ட திறன்கள் மற்றும் உள்ளார்ந்த திறன்கள் என்பவற்றுக்கான விளக்கம் நன்றாக விபரிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நபரும் தனது செயல்களுக்கு பொறுப்பானவர், இது வெவ்வேறு கூறுகளை அடிப்படையாகக் கொண்டது, அவை ஒவ்வொன்றும் மற்றவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு மற்றும் செயலானது உள்ளார்ந்த மற்றும் தனிப்பட்ட திறன்களுடன் தொடர்பு கொள்கின்றன. அவை உருவில் தெளிவாகக் காட்டப்படுகிறன (Kingsley, 2015).

பல்வேறு ஆளுமை அம்சங்கள் தனிப்பட்ட குறுக்குவெட்டு திறன்களில்; (transversal competencies) வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளன. தார்மீக நல்லொழுக்கங்கள் மென்திறன்களுடன் இணைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றன உதாரணமாக நிதானம், நீதி விவேகம் தைரியம் ஆகியன குறுக்குவெட்டுத் திறன்களின் அபிவிருத்திக்கான குறிப்பிடத்தக்க பண்புகளாகும் (Ciappci, 2015),

முயற்சியாண்மைத் திறன்கள் மற்றும் தொழிநுட்பத்திறன்கள் என மென்திறன்களை மேலும் வேறுபடுத்தலாம். முயற்சியாண்மைத் திறன்களானவை தலைமைத்துவம், எதிர்கொள்ளும் ஆபத்து, புதுமை மற்றும் மாற்றல் முகாமைத்துவம் என்பவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மென்திறன்களுடன் ஒத்துப்போகின்றன. தொழிநுட்பத்திறன்கள் தான் குறிப்பிட்ட பணிகளைச் செய்ய அனுமதிக்கின்றன. தகவல் தொழிநுட்பத்தில் மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆனது இணையானது ( Parallel) எனத் தெளிவாகத் தெரிகிறது மென்பொருளானது வன்பொருளை கட்டுப்படுத்தி முகாமை செய்கிறது. Oriental ஒன்றில் இரண்டு பகுதிகளுக்கிடையில் அதிக ஒருங்கிணைப்பு உள்ளபோது Indo- European அணுகுமுறையில் இது குறிப்பாக உண்மை (Ciappci, 2015).

முன்மொழியப்பட்ட ஒருங்கிணைந்த திறன்களின் வகைப்பிரித்தல் காட்டப்பட்டுள்ளது இங்கு திறன்கள் இரு உரு இல் பிரிவுகளாக clusters) ஒழுங்கமைக்கப்படுகின்றன. மூன்றில் ஒரு பகுதி வன்திறனுடன் பொருந்திய நிலையில் அரசியல் மற்றும் நெறிமுறைத் திறன்கள் - தந்திரோபாய மற்றும் நிறுவனத் திறன்கள்: நிர்வாக மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் அரசியலும் நெறிமுறைகளும் பொருள் விளக்கத்தை அனுமதிக்கின்றன. தந்திரோபாய மற்றும் நிறுவனத் திறன்கள் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தினைக் கொண்டு வருகிறது அத்துடன் தொழிநுட்பமானது செயல்களின் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது இவ் அனைத்து திறன்களும் நடைமுறையாக்கத்திற்கு ஒத்துப்போகின்றன, அதன்பின்னர் விளைவின் உற்பத்திக்கு (Ciappei, 2015).

பொருளாதாரத்துக்கான 2000 ஆம் ஆண்டு நோபல் பரிசினை வெற்றிபெற்ற James Heckman மென்திறனுக்கான ஒரு பிரபலமான எளிய வரைவிலக்கணத்தினை கூறியுள்ளார்

மென்திறன்கள் வாழ்க்கையின் வெற்றியைக் கணிக்கின்றன”. அவர் மென்திறனுக்கும் மக்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்துறை சாதனைகளுக்கும் இடையிலான தூண்டல் விளைவு தொடர்பினை அடையாளம் காட்டுகிறார் ( Cinque, 2015).

இம் மென்திறன்களுக்கு பல்வேறு நபர்களும் அமைப்புகளும் வெவ்வேறு பெயர்களை முன்மொழிந்துள்ளனர்.

அவையாவன

 1. வாழ்க்கைத்திறன் (WHO, 1993)
 2. குறுக்கு வெட்டுத்திறன் (ISFOL,1998)
 3. பொதுவான திறன்கள் (Tuning project,2000)
 4. வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் நன்கு செயற்படும் சமூகம் என்பவற்றிற்கான முக்கியதிறன்க ள் (OECD,2003;2012)
 5. வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான முக்கிய (Key) திறன்கள் (UE, 2006)
 6. 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் (Ananiadou & Claro, 2009)
 7. பரிமாறக்கூடிய திறன்கள் (RPIC-ViP, 2011)
 8. எதிர்கால வேலைத்திறன் (IFTF,2010)
 9. திறமைக்கான திறன்கள் ( Manpower Group, 2014)
 10. சமூக முன்னேற்றத்திற்கான திறன்கள் (OECD,2015)

மென்திறன்களின் முக்கியத்துவம்

எதிர்காலத்தில் எந்த திறன்கள் அவசியம் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பது முக்கியம். சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் அவர்களின் செயலில் பங்கேற்பை உறுதி செய்துகொள்வதற்காக 2020 ஆம் ஆண்டில் தேவைப்படும் பணித்திறன்களானவை அனைத்து குடிமக்களாலும் பெறப்படவேண்டிய திறன்கள் என வரையறுக்கப்படலாம், 2020 இன் மாற்றத்தின் முக்கிய இயக்கிகளை கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. அவற்றில், தொழிநுட்பத்தை பயன்படுத்துவதற்கான திறன்கள், குறிப்பாக டிஜிட்டல் திறன்கள், பல பணிகளைச் செய்வதற்கு பெரும்பாலான வேளைகளில் அடிப்படையாக இருக்கும் ( Cinque, 2015).

மேலும் டிஜிட்டல் வளங்கள் மாணவர்களின் மென்திறன்களை விருத்தி செய்யவும் பயிற்சியளிக்கவும் உதவும், பின்னர் அதே நேரத்தில் திறமைகளையும் தகைமைகளையும் விருத்தி செய்வதற்கும் அதிகரிப்பதற்கும் பயிற்சிக்கான கருவிகள் மற்றும் நோக்கங்கள் அடையப்படலாம் என் அவர்கள் கருதமுடியும் மென்திறன்களை வரையறுக்கவும் அடையாளங் காணவும், Bruxelles இன் படைப்பு தலைமைத்துவ மையம் (Kingsley, 2015) சமூக அடையாள விபரணையாக்கம் என்ற கருவியை முன்மொழிந்துள்ளது, இது மக்களின் பாலினம், தேசியம், மதம், பாலியல் நோக்குநிலை, இனம், வயது, கல்வி, சமூக பொருளாதார நிலை போன்றவற்றைக் கருதுகிறது. இவ்விபரணையாக்கம் மூன்று உள்ளக செயல்முறைகளை உள்ளடக்கியுள்ளது: வகைப்படுத்தல் அடையாளங்காணல் மற்றும் ஒப்பீடு. 

முதலில் பகிரப்பட்ட நம்பிக்கைகள், அனுபவங்கள் மற்றும் பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் குழுக்களை வரையறுப்பது அவசியமாகும். இரண்டாவதாக ஒவ்வொரு தனிநபரும் தன்னை ஒரு குழுவிற்கு சொந்தமானவர் என அடையாளங் காண வேண்டும். மூன்றாவதாக குழுக்களை ஒப்பிட வேண்டும். ஏதேனும் ஒரு குழுவில் பொருந்தவும் தனித்துவமாக இருக்க விரும்புவதும் மனித இயல்பு. இந்த வகையான மென்திறனை வளர்க்கும் பொருட்டு அவருடைய சொந்த எண்ணமும் தலைமைத்துவத்துடனான தொடர்பும் எது என்பதை புரிந்து கொள்வதன் அடையாளத்தைப் பற்றி அறிந்திருப்பது முதற்படியாகும் மூலம் தனது சொந்த சமூக

அடையாளம் நிலையானது அல்ல, இது காலப்போக்கில் மாறலாம் மற்றும் விருத்தி செய்யப்படலாம் அடையாளம் மூன்று கூறுகளால் ஆனது: கொடுக்கப்பட்ட அடையாளம் (உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வயதுடைய ஆணாக இருக்க வேண்டும்) தேர்ந்தெடுக்கப்பட்ட அடையாளம் (உதாரணமாக பல்கழைக்கழகத்தில் பயின்ற மற்றும் திருமணமானவர்களுக்கு), சுய அடையாளம் ( பண்புகள், நடத்தைகள், நம்பிக்கைகள் மதிப்புகள் மற்றும் திறன்கள் ஆகியவை அடங்கும்) மென்திறன்களுக்கு அடையாளம் முக்கிமானது, ஏனெனில் இது பின்வருவனவற்றுக்கு வழி வகுக்கிறது: சமூக உணர்வு சார் திறன்கள்

உணர்வுசார் நுண்ணறிவு

சுய விழிப்புணர்வு

சுய நிர்வகித்தல்

தொடர்பாடல்

ஒத்துணர்வாற்றல்

வேறுபாடு ஊடான வினைத்திறனான தொடர்பாடல்

ஒரு முகாமையாளராக வெற்றிகரமாக இருப்பதற்கும் அத்துடன் மேலதிகமாக எந்தவொரு வகையான தொழிலும் பொதுவாக இருப்பதற்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குறுக்கு வெட்டுத்திறன்களும் மிகவும் முக்கியமானதாகும். பெரும்பாலான நிபுணர்கள் உணர்வுசார் நுண்ணறிவு போன்ற மென்திறனை மிகவும் முக்கியமானதொன்றாக அங்கீகரித்துள்ளனர். இந்த குறுக்குவெட்டுத் திறனுக்கான சாத்தியமான வரைவிலக்கணம் அவற்றை புரிந்து கொள்வதற்கும் சாதகமாக பயன்படுத்துவதற்கும் மற்றும் நம்மிலும் மற்றவர்களிடமும் உணர்ச்சிகளை திறம்பட நிர்வகிக்க உணர்ச்சிகளை உணர்ந்து வெளிப்படுத்தும் திறனாகும் இதனால் உணர்வுசார் நுண்ணறிவு செயல்திறனுக்கு மையமானது இது தனிப்பட்ட ஆளுமையுடன் இணைக்கப்பட்டதாகக் கருதப்படலாம்இ ஆனால் இது கவனம் மற்றும் வளர்ச்சியின் மூலமாகவும் உருவாக்கப்படலாம் (Kingsley 2015).

John Dewey ஆல் "The Human Nature and Conduct” எனும் புத்தகத்தில் உருவாக்கிய திறன்களின் கருத்தியல் மாதிரி ஆளுமையினை அவரது பழக்கவழக்கங்களின் விளக்கமாக

வரையறுக்கிறது அவை தூய்மையான கட்டளைகள் (repetitions) அல்ல ஆனால் வெவ்வேறு சவாலான சூழ்நிலைகளில் செயல்படுவதற்கான குறிப்பிட்ட வழிகளாக நபர் வெளிப்படுத்தும் மனநிலைகள் மனநிலைகள் ஊக்கப்படுத்தப்படுகின்றனஇ செயல்படுத்தப்படுகின்றன மற்றும் நேரடித்திறன்களைக் கொண்டுள்ளன. பின்னர் மென்திறன்களின் மாதிரி மனநிலையைப் போல் மறுபரிசீலனை செய்யப்பட்டு, இதில் பல கூறுகள் தொடர்பினை ஏற்படுத்தியும் காலப்போக்கில் விருத்தி செய்யப்பட்டும் ஒரு சிக்கலான கட்டுமானம் போல காட்சியளிக்கிறதுஇ அறிவுஇ திறன்கள், அணுகுமுறைகள் மற்றும் மதிப்புக்கள் ஆகியவற்றின் ஒத்திசைவான தொகுப்பின் அடிப்படையில் நிகழ்ச்சிகளைக் காண்பிக்கும். மனநிலையின் எண்ணக்கருவில் மூன்று ஊடாடும் கூறுகளை வேறுபடுத்தி அறியலாம்

அணுகுமுறைகள் மற்றும் மதிப்புக்கள்

அறிவு மற்றும் திறன்கள் சம்பந்தப்பட்டவை

ஒத்திசைவான நடத்தைகளின் தொகுப்பு

மனநிலையானது தொடர்ச்சியான ஒத்திசைவான நடத்தைகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலிருந்து மட்டுமே மனநிலையைத் தெளிவாக ஊகிக்க முடியும் (Pellerey,2015) மற்றொரு அணுகுமுறையைப் பின்பற்றி திறன்களை மூன்று பிரிவுகளாக வேறுபடுத்தலாம்

அறிதல்- ஏன் திறன்கள் பிரதிபலிக்கும் தன்மையைக் குறிக்கிறது

புரிதல் மற்றும் சுய விழிப்புணர்வு

அறிதல்- என்ன, எப்போது, எங்கே திறன்கள் செயல்திறனைக் குறிக்கிறது.

மேலும் மென்திறன்களானவை உறவுகளின் விரிவான வலையமைப்பின் அனுகூலத்தை எடுத்துக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்குமான திறன்களை கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும், அறிதல் எப்படி, யாருடைய திறன்கள் வினைத்திறனைக் குறிக்கும் மற்றும் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் திறன் அடிப்படையில் மாற்றத்தக்க திறன்கள் (Guglielmi, 2015).

 1. மென்திறன்களை எவ்வாறு கற்பித்தல் மற்றும் விருத்தி செய்தல்

இளைய தலைமுறையினரிடையே அறிவைப் பரப்புவதற்கான பல்கலைக்கழயங்களின் நோக்கம் இதனைக் குறிக்கிறதுஇ இன்றைய உலகில் அவர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் சேவை செய்ய வேண்டும்; அத்துடன் கலாச்சார, சமூக மற்றும் எதிர்கால சமூகத்தின் பொருளாதார தேவைப்பாடு, குறிப்பாகஇ தொடர்ச்சியான கல்வியில் கணிசமான முதலீடு தேவைப்படுகிறது” Magna Charta Universitatum, signed in Bologna in 1988

இந்த பிரபலமான கூற்றானது, கல்வி நிறுவனங்கள் தொழில் வல்லுனர்களாக இளைஞர்கள் மாறுவதற்கு வன்திறன்களை வழங்கி இளம் தலைமுறையினரை உருவாக்குவதற்கான கடமையை மட்டும் கொண்டிராமல், ஆனால் முதலில் 103 குடிமக்களை சமூகத்தில் சுறுசுறுப்பாகவும் சாதகமாகவும் பங்கேற்கக் கூடியவர்களாக உருவாக்க வேண்டும், பின்னர் இவர்களும் அவர்களின் மென்திறன்களின் வளர்ச்சிக்கு அவர்களை ஆதரிக்க வேண்டும் எனும் கருத்தினை உள்ளடக்கியுள்ளது (Morandin, 2015)

மென்திறன்களைக் கற்பித்தல் என்பது ஒரு ஆரம்ப கல்லி நடவடிக்கைாகும், இது ஆரம்ப கால முன்பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். பின்னர் இது பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல

மேலும் மென்திறன்களின் வளர்ச்சி குடும்பத்திற்குள் ஆரம்பமாகிறது, குழந்தை பாடசாலை

செல்லும் காலத்தை விடவும் முன்னதாகவே. எதிர்காலத்தில் தொழிலாளர் உலகம்

என்னவாக இருக்கும் என்று கணிப்பது மிகவும் கடினம், குறுகிய கால முன்கணிப்பு

மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும். கல்வித் திட்டங்கள் இளைஞர்களக்கு வேலை

தேடுவதற்கு கல்வி கற்பிப்பதற்காக சாத்தியமான எதிர்கால சூழ்நிலைகளைக் கருத்தில்

கொள்ள முயற்சிக்க வேண்டும் ஆனால் இதைச் செய்வது எளிதல்ல. ஏனெனில்

எதிர்காலம் பெரும்பாலும் கணிக்க முடியாதது (Hautamaki, 2015)

ஆனால் மென்திறன்கள் வேலை செய்வதற்கு மட்டும் அவசியமானது அல்ல அவை அன்றாட வாழ்க்கைக்கும் இன்றியமையாதவையாகும் பின்னர் கல்வி நிறுவனங்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் குறுக்குவெட்டு திறன்களை வளர்க்க மாணவர்களுக்கு உதவும் முறைகள் மற்றும் நுட்பற்களில் கவனம் செலுத்த வேண்டும். OECD தயாரித்த " சமூக முன்னேற்றத்திற்கான திறன்கள்” "Skills for social progress” என்ற சமீபத்திய அறிக்கை, 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை சிறப்பாக எதிர்கொள்ளும் பொருட்டு ஒரு சமநிலையான அறிவாற்றல், சமூக மற்றும் உணர்ச்சி திறன்களைக் கொண்ட வலியுறுத்துகிறது முழு குழந்தையையும் வளர்ப்பதன் அவசியத்தை

திறன்கள் திறன்களைப் பெறுகின்றன என ஆரம்ப தலையீடுகள் சமூக மற்றும் உணர்ச்சித் திறன்கள் திறமைகளை திறமையாக உயர்த்துவதற்கும் கல்வி, தொழிலாளர் சந்தை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன (Cinque, 2015). பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வேலை தேடுவதற்கு மட்டுமல்லாமல் மனிதர்களாகவும் குடிமக்களாகவும் வளர மென்திறன்களை வழங்க வேண்டும் என்பது தெளிவாகிறது Martha C ஆல் எழுதப்பட்ட 'Not for profit" எனும் புத்தகத்தில். 2010 ஆம் ஆண்டில் Nussbaum, பின்வரும் பந்தியில் குறிப்பிடத்தக்கதாகும் . விமர்சன ரீதியாக சிந்திப்பதை விடவும் அறிவுள்ளவர்களாகவும் பரிவுணர்வுள்ள குடிமக்களாகவும் மாறுவதைக்

தனியொருவர் தன்னிடம் இருக்கும் மென்திறனை அடையாளங் கண்டு கொள்வதும் அதனை விருத்தி செய்ய வேண்டியதும் இன்றியமையாத ஒன்றாகும். வேலைச் சூழலுக்காக மட்டுமன்றி தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியடையவும் இத்திறன் பங்களிப்புச் செய்கின்றது எனக் கூறினால் அது மிகையாகாது கொள்வதற்கான வழிகாட்டியாக அமையும் இவ் அலகானது மின் திறனை வளர்த்துக் காட்டிலும் பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யக் கற்றுக்கொடுப்பதே கல்வியின் முதன்மைக் குறிக்கோள் என நாங்கள் கல்வியை நடத்துகிறோம். இலாபகரமான திறன்களின் மீதான இந்த கவனம் அதிகாரத்தை விமர்சிப்பதற்கான நமது திறனைக் குறைத்து ஓரங்கட்டப்பட்ட மற்றும் வேறுபட்டவர்களுடனான நமது அனுதாபத்தைக் குறைத்து, சிக்கலான உலகளாவிய சிக்கல்களைக் சமாளிப்பதற்கான நமது திறனை சேதப்படுத்தியுள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடைவதற்கு, தொழிலாளர் சந்தைக்கு மட்டுமல்ல, ஒரு முழுமையான மனிதனுக்கும் மென்திறன்கள் மிகவும் முக்கியம் (Cingue 2015).

அதை விருத்தி செய்வது எவ்வாறு சாத்தியமானது? இந்த கேள்விக்கு திறம்பட பதிலளிக்க ஒரு ஏறும் ஏணியின் உருவகத்தைப் பயன்படுத்தலாம் ( உரு 4), அதன் படிகள் வெவ்வேறு மென்திறன்களுடன் ஒத்திருக்கின்றன, அவை அபிவிருத்திச் செயன்முறையின் போது தொடர்ச்சியாக பெறப்படுகின்றன. அடிப்படை சுய விழிப்புணர்வுடன் ஒத்துப்போகிறது, இது செயன்முறையை ஆரம்பிக்க அடிப்படையாக அமைகிறது. பின்னர் சுய கட்டுப்பாடு இயக்கப்பட்ட உந்துதல், சமூக விழிப்புணர்வு மற்றும் இறுதியாக சமூக செல்வாக்கு ஆகியவற்றை அடையமுடியும் (Engelberg, 2015).

மென்திறன்களைப் பெறுவதற்கு ஏற்கனவே தொழில்துறை பெறுறுேகளை அடைந்த அனுபவமுள்ளவர்களின் ஆதரவைப் பெறுவது அடிப்படையாகும். பின்னர் நிபுணர்களின் கருத்தரங்குகள், பயிற்சி வழங்கல் (Coaching) மற்றும் வழிகாட்டல் (Tutoring) ஆகியவை மென்திறன்களைக் கற்பதற்கான சிறந்த கருவிகளாகும். குறிப்பாக வழிகாட்டிகள், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் கற்றலை தனிப்பட்ட முறையில் ஆதரிக்கக்கூடிய மற்றும் கவனித்துக்கொள்ளக்கூடியவர்கள், தங்கள் மாணவர்களின் குறுக்குவெட்டுத் திறன்களை விருத்திசெய்வதற்கான செயன்முறையில் குறிப்பாக சக்திவாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். பல்கலைக்கழக ஆசிரியர் ஒரு தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு மட்டுமே மாணவருக்கு ஆதரவை வழங்குவதில்லைஇ ஆனால் அவர் தனது மனப்பாண்மையை நன்கு புரிந்து கொள்ளவும் அவரது திறன்களை விருத்தி செய்து கொள்ளவும் பின்னர் அவரது தொழில் வாழ்க்கையில் தனது வழியைக் கண்டறியவும் அவருக்கு உதவமுடியும் (Ciappei, 2015).

மென்திறன்களைக் கற்பித்தல் பல நாடுகளில் வேறுபட்ட பொருத்தப்பாட்டினைக் கொண்டுள்ளது. சில நாடுகள் இதைக் கட்டாயமாகக் கருதின. வேறு சில நாடுகளில் இது ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மட்டுமே தேவைக்கேற்ப மேலதிக நடவடிக்கையாக வழங்கப்படுகிறது. இரண்டு நிகழ்வுகளிலும் பாடசாலைகள் மென்திறன்களைக் கற்பிப்பதற்கான கற்கைநெறிகள் மற்றும் செயற்பாடுகளை ஏற்பாடு செய்கின்றன. சில சந்தர்ப்பங்களில் மாணவர்களே இந்த கற்கைநெறிகளை ஏற்பாடு செய்கிறார்கள்.