சுஜாதாவின் நாவல்கள் - நிர்வாண நகரம் | Sujatha Nirvana Nagaram Novel free pdf

சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் - Wikipedia

சுஜாதாவின் நாவல்கள் - நிர்வாண நகரம் | Sujatha Nirvana Nagaram Novel free pdf

மே மாதம் சென்னைக்கு ஜுரம் வந்து 104, 105 என்று எகிறியிருந்தது. கடல் காற்று வேலை நிறுத்தம் செய்திருந்தது. தார்ச் சாலைகளின் மாய ஈரத்தில் போக்குவரத்து நடனமாடியது. ஏ.ஸி.தியேட்டர்களில் ஓட்டைப் படங்கள் விழாக் கொண்டாடின. தந்தி பேப்பரில் சிலர் 'கருகி'ச் செத்தார்கள்.

அண்ணா சாலையில் சமீபத்தில் நடப்பட்ட அந்த ஒன்பது மாடிக் கட்டிடத்தின் ஒன்பதாம் மாடியில் ஒரு பகுதியில் இருந்த அலுவலகத்திலிருந்து சிவராஜ் தன் புத்தகங்களையும் ஃப்ளாஸ்க்கையும் சேகரித்துக் கொண்டு புறப்பட ஆயத்தமானான். ஜன்னலுக்கு வெளியே சென்னை நகரம். தூரத்தில் உப்புக் கரைத்த நீலப்படுதா. மவுண்ட்ரோட்டில் கார்ப் பாம்புகள். வானோக்கி குத்தும் டெலிவிஷன் அம்பு.

"சிவராஜ் கிளம்பிட்டிங்களா? அர்ரியர்ஸ் எல்லாம் நாளைக்கு வாங்கிக்கிடுங்க."

“ஏன் சார்?"

"அந்தப் பொண்ணு மெட்டர்னிட்டில இருந்து வந்துடுச்சு. உங்க டெம்ப்ரரி வேலை நாளையில் இருந்து முடிஞ்சுடறது. உங்களோட வேலை செஞ்சதில் எங்க எல்லாருக்கும் சந்தோஷம்..."

"வேற யாராவது கிளார்க்குகள் கர்ப்பமா இருக்காங்களா சார்?"

"ஒருத்தரையும் பார்த்தா தெரியலை. தெரிஞ்சா சொல்லி அனுப்பறேன்... அப்புறம்

சீட்டுக் கட்டில் அந்த டிரிக் காட்டினீங்களே அன்னிக்கு. அது எப்படி செய்யறதுன்னு சொல்லியே தரலையே?"

"அடுத்த தடவை வேலை குடுங்க, சொல்லித் தரேன்."

லிஃப்டுக்காக காத்திருக்கும்போது அண்டை அலுவலகத்திலிருந்து ஒரு பெண் சேர்ந்து கொண்டாள். அவள் செண்ட்டின் வாசனை சிவராஜுக்குப் பழகியிருந்தது.

உதட்டோரத்தில் ஒரே ஒரு தடவை சிரிக்ககூடச் சிரித்திருக்கிறாள். பனியன் பன்ச் கார்ட் அடுக்கு ஒன்று அணிந்து சூயிங்கம் மென்றுகொண்டு கையில் வைத்திருந்தாள். இன்று சிவராஜை அலட்சியமாகப் பார்த்தாள். 'நாளைக்கு வேலை போகப் போகிறது' என்று அவளுக்குத் தெரியுமோ என்னவோ! லிஃப்ட் வந்து ஒரு வெளிச்ச அம்பு பளிச்சிட வாசல் திறந்து கொண்டது. இருவரும் நுழைந்துகொள்ள 'ஜி'யை அழுத்தமாக மௌனமாக வயிற்றைக் கவ்விக்கொண்டு லிப்ட் இறங்கியது. அந்தப் பெண் அந்த இடத்தில் சிவராஜே இல்லை போல மேல் பார்வை பார்த்துக்கொண்டே மென்று கொண்டிருக்க சிவராஜ் புதுக்கவிதை செய்தான்.

லிஃப்டில் நுழைந்து இறங்குகையில் 

நானும்ஒரு பன்ச் கார்ட்

பெண்ணும் தனியே

அவளைக்

'காதலிப்பதா...

கற்பழிப்பதா' என்று யோசிப்பதற்குள்

கீழே

வந்து

வெளியே சென்றுவிட்டாள்.

சிவராஜ் வெளியே வந்தான். கவிதை மனசில் நின்று கொண்டிருந்தது. "கணையாழி"க்கு அனுப்ப வேண்டும். பசித்தது. மெதுவாக பிளாட்பாரத்தில் நடந்தான்.

"இன்ப வெறியூட்டும் இரண்டாம் வாரம்" என்றாள் போஸ்டர் நங்கை. ஒரு பொதுக் கூட்டத்தில் ராமு என்கிற ஆடு கலந்து ஒட்டியிருந்தது. தபாலாபீசின் வாசலில் கொள்ளப் போவதாக நோட்டீஸ் நடைபாதை பூராவும் ஊழியர்கள் கோரிக்கைகள் நிரம்பியிருந்தது. சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் தலைவர் டிபன் சாப்பிடப் போயிருந்தார். ஜனத்திரள் இப்போது ஏறக்குறைய சிவராஜின் மேல் அடிக்கடி இடித்துக்கொண்டும் நகர்த்திக் கொண்டும் செல்ல "அன்புள்ள சென்னை மகாஜனங்களே! உங்களில் எத்தனை பேருக்கு சதுரங்கத்தில் சிஸிலியன் டிஃபென்ஸ் தெரியும்? எத்தனை பேருக்கு பந்துவராளிக்கும் காமவர்த்தினிக்கும் வித்தியாசம் தெரியும். எத்தனை பேர் எக்ஸுபரியின் ஃப்ளைட்டு அர்ரஸ் படித்திருக்கிறீர்கள்?"

சுரங்கப் பாதையில் இறங்குகையில் சிவராஜ் தன் பெயரின் ஒலிக் குறிப்புகளை மாற்றி மாற்றி சிவராஜ்-சிவராஜிராவ்- ஜீவராசி- என்று அமைத்து யோசித்தான்.

ஹோட்டலில் நுழைவதற்கே தாமதமாயிற்று. நாற்காலி மேஜைகள் எல்லாம் ஜனங்கள் நிரம்பி வழிந்து போண்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இடைவெளிகள் எல்லாம் பலர் நின்று கொண்டு, சாப்பிட்டவர்கள் நகரக் காத்து கொண்டிந்தார்கள். சிவராஜ் ஒரே ஆளின் மேல் குறி வைத்து அவன் சாப்பிட்டுக் காலி பண்ணக் காத்திருந்தான். மசால் தோசை சாப்பிட்டவன் கையோடு பஜ்ஜி கொண்டுவரச் சொன்னான். எண்ணெய்டா எண்ணெய்- பஜ்ஜிக்கப்புறம் பசியடங்காமல் காராசேவை கொண்டுவரச் செய்து அதை ஒற்றை ஒற்றையாகச் சாப்பிட்டான். 'நபும்சகனே! காப்பி ஆர்டர் செய்யேன்.'

சிவராஜுக்கு அப்புறம் வந்தவர்கள் எல்லாம் உட்கார்ந்து பேசி காபி சாப்பிட்டு பில் கொடுத்துவிட்டுப் போய் விட்டார்கள். என் ஜாதக ராசி இது. சினிமா இன்டர்வெல்லில் எனக்கு முன்னால் நிற்பவன் மட்டும்தான் குடம் குடமாக மூத்திரம் போவான்!

"என்ன ஸார் வேணும்?" "என்ன இருக்கு" சர்வர் வெளியே பார்த்துக்கொண்டே பட்டியலை ஒப்பிக்க சிவராஜ் அவன் தன்னை விசாரிக்கக் காத்திருந்தான். அருகில் உட்கார்ந்தவனிடம் ஆர்டர் வாங்கிக் கொண்டு அவன் கிளம்ப சிவராஜ் அவனைக் கூப்பிட இந்த டேபிளில் பாதிதான் அவன் ட்யூட்டியாம். இன்னொருத்தன் வருவானாம்!

அருகில் இருந்தவன்

"ஜெயா நீ ஜெயிச்சுட்டே. ஸ்ரீகாந்த் காதலி சான்ஸ் யாருக்கு" என்று இரைந்து மாலைப் பேப்பர் படித்துக் கொண்டிருக்க- சிவராஜ் "காற்று" என்ற ஒல்லியான பத்திரிகையை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.

ஒரே ஒரு காபி சாப்பிட்டுவிட்டு வர ஐம்பது நிமிஷம் ஆயிற்று. வெளியே வந்து பஸ் பிடித்து வனஜாவைப் பார்க்கச் சென்றான்.

வனஜா மாம்பலத்தில் இருந்தாள். எப்போதாவது தைரியம் வந்து, எப்போதாவது அவனுக்கு ஸ்திரமான வேலை கிடைத்து, வனஜாவைக் கூட்டமில்லாத நல்ல ரெஸ்ட்டாரண்டுக்கு அழைத்துச் சென்று-என்ன ஸார் எல்லாருமே பத்து ரூபாயாகக் குடுத்திடுங்கன்னா எப்படி-அள்புள்ள வனஜா! எனக்கு காதலில் நம்பிக்கை கிடையாது. அது இந்த நூற்றாண்டின் மகத்தான ஏமாற்று வேலை என்பது எனக்குத் தெரியவே தெரியும். இருந்தும் உன் மேல் எனக்கு ஒரு விசேஷ ஈடுபாடு ஏற்பட்டு நான் உன்னைக் கலியாணம் செய்து கொண்டு நம் இருவர் வாழ்க்கையையும் பிணைத்துக் கொண்டு...

வனஜாவின் வீட்டு வாசலில் நிறையச் செருப்புகள் இருந்தன. வனஜாவின் அப்பா அவனைப் பார்த்ததும் பெரிய பற்களுடன் சிரித்தார். "வாப்பா. சிவராஜி. வனஜா சொன்னாளா?"

சிவராஜ் நியூட்ரலாகச் சிரித்தான்.

"வனஜாவைப் பெண் பார்க்க வராங்க, ஏறக்குறைய செட்டில் ஆனமாதிரிதான். பையன் பி.இ. படிச்சுட்டு அமெரிக்காவில் எம்.எஸ். படிச்சுட்டு அங்கேயே வேலையில் இருக்கான். ஜூலை மாசம் வரான். சட்டுனு கல்யாணத்தை முடிச்சுட்டுப் போறானாம். வனஜா போட்டோவைப் பார்த்துப் புடிச்சுப் போய் இப்ப பையனுக்கு அக்கா வரா".

"அப்படியா! சந்தோஷம் ஸார்."

"நீ யார்? நம்மாத்து மனுஷன் மாதிரிதான். சட்டுனு பஸ் ஸ்டாண்டுக்குப் போயி ஒரு

டஜன் ரஸ்தாலிப் பழமும் எட்டணா வெத்தலையும், கல்கண்டும், கொட்டைப் பாக்கும்

வாங்கிண்டு வந்துடேன், என்னாம்டையா மறந்து போய்ட்டா. எவ்வளன்னு ஒத்தியே பாத்துக்கறது!" சிவராஜ் பையை வாங்கிக் கொண்டு கிளம்புகையில் அந்தப் பையன் விஸ்கான் ஸினில்கூட வேளை தவறாமல் சந்தியா வந்தனம் பண்ணுவதைப் பற்றிச் சொன்னார் வனஜாவின் அப்பா. ஜன்னல் வழியாக தழைய வாரிவிட்டு தலைநிறையக் கதம்பம்

வைத்துக் கொண்டிருந்தாள். புதிதாக நகைகள் அணிந்துகொண்டு கண்ணாடி முன்

குட்டை ஸ்டூலில் உட்கார்ந்திருந்திருக்க எதிரே இன்னொரு வனஜா தெரிந்தாள்.

அவள் கண்களில் எதிர்காலம் தெரிந்தது.

வனஜா வீட்டு விசேஷத்திற்கு 'அவர்' சைக்கிள் எடுத்து எல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டு சிவராஜ் திருவல்லிக்கேணியில் தன் அறைக்குத் திரும்புகையில் மணி ஏறக்குறைய ஏழு இருக்கும். அறைக்கதவைத் திறந்ததும் உள் ே ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தான். சிவராஜைப் பார்த்ததும் திடுக்கிட்டு "வந்துட்டியா? 'ஹர் நைட்ஸ்' போறதாச் சொன்னியே?"

‘போகலை மறந்துட்டேன்' என்றான் சிவராஜ்.

அந்தப் பெண் கவனமில்லாமல் ஒரு கையில் சமுசா சாப்பிட்டுக் கொண்டு மற்றொரு கையால் ஃபிலிம் ஃபேர் புரட்டிக் கொண்டிருந்தாள். சிவராஜின் வருகை அவள் சுபாவத்தில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை. பாலு திருதிருவென்று விழித்தான். "இதுதான் சுவராஜ் என் ரூம்மெட்... இவ பேர் பேர் என்ன சொன்னே?"

"ரீட்டா. என் போட்டோ திரை ஒளியில் வந்திருந்ததே பார்த்திங்களா?"

"ஆபீஸ்லே பழக்கம்" என்றான் பாலு. எல்லா எழுத்தும் பொய். சற்றுநேரம் அந்த இடத்தில் அருவருப்பான மெளனம்.

மேலும் படிக்க… கீழே உள்ள Download பட்டனை கிளிக் செய்யுங்கள்

Free -Download