நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சம்பியன் இறுதி போட்டியில் பங்கெடுக்கும் இந்திய குழாம் அறிவிப்பு

ICC World Test Championship, Indian Cricket Team, Team India, Virat Kohli, இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சம்பியன் இறுதி போட்டியில் பங்கெடுக்கும் இந்திய குழாம் அறிவிப்பு

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் வரும் ஜுன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு பிறகு அங்கேயே தங்கியிருக்கும் இந்திய அணி, இங்கிலாந்துடன் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணியில் அஜின்க்ய ரகானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், மயாங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ஆர். அஸ்வின், ஜடேஜே, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பர்களான கேஎல் ராகுல் மற்றும் சஹா ஆகியோர் உடல்தகுதியை நிரூபித்த பிறகு அணியில் சேர்த்துக் கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சமீபத்தில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை அணியில் சேர்க்காதது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் இங்கிலாந்து ஆடுகளங்கள் சுவிங் செய்ய ஏதுவான ஆடுகளமாகும். இதனால் புவனேஷ்வர் குமார் அணியில் இடம் பெற்றால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

மேலும் செய்திகள்

- Srilanka News

- India News

- Technology News

-Sports News

- Cinema News - Trailers - Image Gallery - Song Lyrics

-ஆன்மீகம்