நாளைய இராசி பலன்கள் 17.03.2022 வியாழக்கிழமை

நாளைய நாளுக்கான சுப நேரங்கள் மற்றும் உங்கள் ராசிக்கான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்

நாளைய இராசி பலன்கள் 17.03.2022 வியாழக்கிழமை

17-03-2022, பங்குனி 03, வியாழக்கிழமை,

வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 01.30 வரை பின்புபௌர்ணமி.

பூரம் நட்சத்திரம் இரவு 12.34 வரைபின்பு உத்திரம்.

சித்தயோகம் இரவு 12.34 வரைபின்பு மரணயோகம்.

நேத்திரம் - 2. ஜீவன் - 1.

பௌர்ணமி விரதம்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00,

எம கண்டம்-காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, 

மதியம் 01.00-01.30,

மாலை 04.00-06.00,

  இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் -  17.03.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண்செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின்விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின்உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபாரவிஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தைஏற்படுத்தும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் குடும்பத்தில் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும்பொருளாதார நிலை பாதிப்படையாது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வேலைபளுசற்று குறையும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவியபிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள்வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள்சேரும். பெண்களுக்கு பணிசுமை குறையும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன்செயல்படுவீர்கள்.

கடகம்

இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவுஉண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின்அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால்சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள்வசூலாகும். கடன்களை பைசல் செய்வீர்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாகஅமையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம்காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாகநடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும். கொடுத்த கடன் வசூலாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளால்மன அமைதி குறையும். மருத்துவ செலவுகள் செய்யநேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம்பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய மாற்றங்களால்வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும்மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்களுடன் இருந்தமனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் இதுவரைஇருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை கூடும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம்உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சிஏற்படும்.

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில்வீண் மன சங்கடங்கள் ஏற்படலாம். உறவினர்களின்வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம்லாபம் அடைவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

மகரம்

இன்று உங்களுக்கு மன குழப்பங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்குபணியில் கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பதுநல்லது.

கும்பம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும்காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர்பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுபகாரியமுயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள்வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில்ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.

மீனம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடுசெய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியானசூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாகஇருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளால் நல்லவாய்ப்புகள் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம்ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.