இலங்கையின் பல பாகங்களிலும் பரவியுள்ள பிரித்தானிய அல்பா வைரஸ்

பிரித்தானியாவின் B117 அல்பா வைரஸ் இலங்கையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையின் பல பாகங்களிலும் பரவியுள்ள பிரித்தானிய அல்பா வைரஸ்மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிடிய, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமாராம, இராகம பகுதிகளில் குறித்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸூம் இலங்கையில் வாத்துவ பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒருவருக்கே இந்த வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனுக்குடன் தமிழில் எமது செய்திகளை உங்கள் whats app மூலம் அறிந்து கொள்ள எமது உத்தியோகபூர்வ whats app குழுவில் இணைந்து கொள்ளுங்கள். இணைப்பு இதோ--->>>AK Tamil Whats App Group