வலிமை திரை விமர்சனம் | Valimai review - AK Tamil

நடிகர் அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படத்தின் நடுநிலையான விமர்சனம்

வலிமை  திரை விமர்சனம் | Valimai review - AK Tamil

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படத்தில் அஜித்குமார் , கார்த்திகேயா, ஹூமா குரேஷி, வாணி சுமித்ரா, புகழ் உட்பட பலர் நடித்துள்ளனர். 

இசை யுவன்சங்கர் ராஜா, ஒளிப்பதிவு நீரவ் ஷா

கதைச்சுருக்கம் 

சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

செயின் பறிப்பு, போதை கடத்தல், கொலை என இவர்களின் குற்றங்கள் போலீஸ் அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத அளவு நடந்து கொண்டே இருக்கிறது. மற்றொரு புறம் அஜித் Assistant commissioner அர்ஜுனாக மதுரையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தனது தம்பி மற்றும் அண்ணனின் நடவடிக்கை காரணமாக சென்னைக்கு குடும்பத்துடன் வருகிறார் அஜித். பின்னர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக வரும் ஹுமா குரேஷியுடன் இணைந்து சென்னையில் நடக்கும் கொலை ஒன்றை விசாரிக்க தொடங்குகிறார் அஜித்.

விசாரணையில் சென்னையில் நடக்கும் அனைத்து குற்றங்களும் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்களால் தான் நடத்தப்படுகிறது என்பது தெரியவர, Satan Slave தலைவராக இருந்து இத்தனை நாட்கள் அனைத்து குற்றங்களையும் முகம் காட்டாமல் பின்னால் இருந்து செயல் படுத்தி வரும் கார்த்திகேயாவை அஜித் தனது அதிரடி நடவடிக்கையால் பிடிக்கிறார்.

அதேசமயம் அஜித்தின் தம்பியும் Satan Slave குழுவை சேர்ந்தவர் என்பது தெரியவர படத்தின் திரைக்கதை மாறுகிறது. பின்னர் அஜித் கார்த்திகேயா சதித்திட்டத்தை எப்படி உடைக்கிறார், தம்பியை Satan குழுவிடம் எப்படி மீட்கிறார் என்பதே மீதிக்கதை.

எழுத்து மற்றும் இயக்கம்

செய்திகளை கூட விறு விறு கதையாக கொடுக்க முடியும் என மீண்டும் நிருபித்திருக்கிறார் எச்.வினோத். படம் முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லிங் என காட்சிக்கு காட்சி விறு விறுப்பாக எடுத்திருக்கிறார். தமிழ் இயக்குனர்களில் இவருக்கென்று தனி முத்திரையை பதித்திருக்கிறார். 

கதாநாயகி

வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகியா இல்லாமல் கதையின் ஓட்டத்திற்கேற்ப கதையில் முக்கியமான கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார் ஹேமா குரேஷி. 

வில்லன். 

தெலுங்கிலிருந்து தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார் கார்த்திகேயா. படம் பார்க்குறவங்களுக்கு "வில்லன்னா இவன்தான்யா" என்ற உணர்வ கொடுக்குற அளவுக்கு சிறப்பா நடிச்சுருக்குறார். மிரட்டலனா பார்வையுடன் ஸ்டெலிஸ் வில்லனாக வழம்வந்திருக்கார் கார்த்திகேயா

இசை

இசை யுவன்சங்கர் ராஜா, அஜித் உடன் மீண்டும் கூட்டணி அமைத்திருத்திருக்கிறார் யுவன். படத்தில் இரு பாடல்கள் முழுசா வருது. பிண்ணனியில் குட்டி குட்டி பாடல்கள் வந்துருக்கு, பாடல்கள் சற்று சுமாராக இருந்தாலும். பிண்ணனி இசையில் வழக்கம் போல பின்னி எடுத்திருக்கிறார் யுவன்.  சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் கதைக்கு ஏற்ற பிண்ணனி இசை கூடுதல் பலம். 

ஒளிப்பதிவு

்படத்தில் அளவுக்கதிகமான ஆக்சன் காட்சிகள், பைக்ரேஸ் காட்சிகள் என ஒளிப்பதிவுக்கு சவால் விடுக்கும் நிறைய காட்சிகளை அசால்ட்டாக தட்டி தூக்கி இருக்கிறார் நீரவ்ஷா.

அஜித் நடிப்பு

படம் முழுக்க அஜித் நிறைஞ்சு இருக்காரு, நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித்தை இளமை தோற்றத்தில் காட்டி இருக்கிறார் இயக்குனர், அம்மாவுக்காக உருகும் போதும், வில்லனிடம் ஆக்ரோஷப்படும் போதும் என அனைத்து சீன்களிலும் தனது இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் அஜித். விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் போலிஸாக நடித்திருக்கிறார் அஜித். மனிதாபிமானம் கலந்த வசனங்கள், தனது குடும்பத்துடன் அன்பாக பேசுவது என அத்தனை இடங்களிலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் அஜித். நிறைய ஆகஷ்ன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அசத்திருக்கிறார் அஜித் 

படத்தின் ப்ளஸ்

- அஜித் நடிப்பு

- பிண்ணனி இசை

- திரைக்கதை

படத்தின் மைனஸ்

- பாடல்கள் 

மொத்தத்தில் வலிமை தமிழ் சினிமாவுக்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறது. 

உங்கள் கருத்துக்களை கமண்ட் மூலம் எமக்கு தெரிவியுங்கள்.