விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹிந்தி நடிகர்- விஜய் 65 கலக்கல் அப்டேட்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பதற்கு பொலிவூட் நடிகர் ஜோன் ஆபிரஹாமை படக்குழு அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹிந்தி நடிகர்- விஜய் 65 கலக்கல் அப்டேட்

கோலமாவு கோகிலா மூலம் திரைக்கு இயக்குனராக அறிமுகமான நெல்சன் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் திரைப்படத்தினை இயக்கி முடித்த நிலையில் தனது அடுத்த திரைப்படமான விஜய் -65 இனை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் முதல் முறையாக பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கவுள்ளார், மேலும் விடிவி கணேஸ், அபர்ணாதாஸ் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். 

 

காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது.


aprna Das

ஜார்ஜியாவில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட படக்குழு தற்போது சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடாத்த திட்டமிட்டுள்ள நிலையில் அங்கு ஊடங்கு காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


Pooja Hedge

இதுவரையில் படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்திற்காக பல நடிகர்களை பரீட்சித்துப்பார்த்த படக்குழு திருப்தியடையாத நிலையில் தற்போது பிரபல பொலிவூட் நடிகர் ஜான் ஆபிரகாமை அணுகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏதோ சொல்ல... முருங்கக்காய் சிப்ஸ் பாடல் வரிகள் சாந்தனு அதுல்யா நடிப்பில் உருவான முருங்கக்காய் சிப்ஸ் திரைப்படத்திலிருந்து சித்ஶ்ரீராம் பாடிய ஏதோ சொல்ல பாடல் வரிகள்