ஐ போன் மாத்திரம் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது ? அப்பிடி என்னதான் இருக்கு “ஐ போன்ல”

பெரும்பாலும் “ஐபோன்கள்” உலகின் பல இடங்களிலும் அதிகளவான விலைக்கே விற்கப்படுகிறது..

ஐ போன் மாத்திரம் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது ?  அப்பிடி என்னதான் இருக்கு “ஐ போன்ல”
Google image

ஆப்பிள் ஐபோன் மிகுந்த விலையோடு இருப்பதற்கு முக்கியக் காரணம் அதன் தனிப்பட்ட OS Operating system ஐ அது தனது போனில் வைத்துள்ளது.

"அதிகமான “OS” அல்லது ஆங்கிலத்தில் “Operating System” என அழைக்கப்படும் இயங்குதளம் தான் எந்தவொரு கணினியிலும் இருக்கக்கூடிய அடிப்படையான புரோக்ராம் (Program). ஒரு கணினி அல்லது மொபைல் இயங்குவதற்கு “Operating System Program” தான் அடிப்படை. இன்ஸ்டால் செய்திடக்கூடிய மற்ற அப்ளிகேசன்கள் மற்றும் பல புரோக்ராம்கள் இயங்குவதற்கு “Operating System Program” அவசியம்."


புரிந்திருக்கும் என நம்புகிறேன்…

இது முதன்மையான காரணம்.

மேலும் பொருளியலில் வெப்லன் எபெக்ட் (Veblen Effect) என்று ஒரு கோட்பாடு உண்டு.

பொருள் அதிகமாக ஒரு வாடிக்கையாளர் வாங்கினால் கண்டிப்பாக அதன் விலை குறைவாக இருக்க வேண்டும். பொருள் குறைவாக வாங்கினால் அந்த பொருளின் விலை கண்டிப்பாக அதிகமாக இருக்க வேண்டும். இதுதான் கேள்வி விதி (Law of Demand)

Veblen Effect என்பது என்னவெனில் பொருள் வாங்குவது அதிகம் - விலையும் அதிகம்.

பொருள் வாங்குவது குறைவு - விலையும் குறைவு.

ஒரு பணக்காரர் தங்க நகையின் விலை அதிகமாக இருக்கும் போது அதை அதிகமாக வாங்கி அணிவது அவரது கௌரவத்தை தூக்கிக் காட்டும் என எண்ணித் தங்கத்தின் விலை அதிகரிக்கும் போது அதிகமான தங்கத்தை வாங்குவார்…

நீங்க கேக்கலாம் …

அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என ???…

இருக்கே…

ஐபோனின் விலை அதிகமாக இருந்தால் தான் அதை பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் கூட (பந்தாவிற்க்காக ) வாங்குவார்கள். பொருளின் மதிப்பு அவர்கள் கௌரவத்தை / அவர்களது மேன்மையை அதிகப்படுத்திக் காட்டும்.

பந்தா காட்டுவதை யார் தான் விரும்ப மாட்டார்கள்…

பிற காரணங்கள்

-ஹாங் ஆகாது Hang
-சிறப்பான புகைப்படங்கள்
-அது ஒரு தனி கெத்து -எல்லோரும்  ஒரு OS பயன்படுத்தும் போது நம்மை தனியாக காட்டிக்கொள்ள 
-ஒரு தனி OS
-பிராண்ட் / லோகோ