பணநிரம்பல் என்றால் என்ன?

இலங்கையின் பணநிரம்பலும் பொருளாதார பின்னடைவும்

பணநிரம்பல்  என்றால் என்ன?

குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் ஒரு நாட்டில் பொதுமக்களிடம் புழக்கத்திலுள்ள மொத்த பணத்தின் அளவே பணநிரம்பல் எனப்படும். இங்கு பொதுமக்கள் என்பது நாட்டு மக்கள், கம்பனிகள், அரசகூட்டுத்தாபனங்கள், ஏனைய சங்கங்கள் போன்றவற்றை உள்ளடக்கும். வேறுவகையில் கூறின், ஒரு நாட்டில் அரசு, வங்கி அமைப்புக்கள் தவிர்ந்த நிறுவனங்களிடமும் அவர்கள் சார்ந்த பொது மக்களிடமும் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்காக தயாராக உள்ள மொத்த பணத்தின் அளவே பணநிரம்பலானது ஒரு இருப்பு மாறியாகும். பணநிரம்பலாகும்.

பொதுமக்களிடம் செலவிடக்கூடிய வடிவில் இருக்கும் பண இருப்புக்களைப் பணநிரம்பலானது குறிக்கிறது. செலவிடக்கூடிய வடிவில் இருக்கும் பணஇருப்புக்கள் என்பது ஆரம்பத்தில் தாள் உலோக நாணயங்களையும், கேள்வி வைப்புக்களையும் பணநிரம்பலின் பிரதான பகுதிகளாகக் கொண்டிருந்தது. ஆனால் வளர்ந்துவரும் வங்கித் தொழிலும் பணப் பொருளாதாரமும் இன்று கால, நிலையான, சேமிப்பு வைப்புக்களையும் பணநிரம்பலின் ஒரு பகுதியாகக் கொண்டு வரையறுக்கிறது. அந்தவகையில் பணம் என்பதற்குள் உள்ளடக்கப்படும் சொத்துக்களின் திரவத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பணநிரம்பலானது மிகக் குறுகிய பணநிரம்பல் (Mo), குறுகிய பணநிரம்பல் (Mi),விரிந்த பணநிரம்பல் (M2), ஒன்று திரட்டப்பட்ட விரிந்த பணநிரம்பல் (M26), அதிவிரிந்த பணநிரம்பல் (M4), மிகவிரிந்த பணநிரம்பல் (Ms) என்றவாறாக வகைப்படுத்தப்படுகின்றன.

இலங்கையில் தற்போது வணிக வங்கிகளில் வெளிநாட்டவரின் பெயரில் காணப்படும் வைப்புக்களும் பணநிரம்பலின் ஓர் பகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே பணநிரம்பல் என்பது ஓர் நாட்டில் பொதுமக்களிடம் உள்ள தாள், உலோக நாணயங்களும், அவர்களின் பெயரிலும் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்ட நிறுவனங்களின் பெயரிலும் வணிக வங்கிகளில் காணப்படும் கேள்வி, நிலையான, சேமிப்பு வைப்புக்களையும், வணிக வங்கிகளில் வெளிநாட்டவரின் பெயரிலுள்ள வைப்புக்களினதும் மொத்தத் தொகை பணநிரம்பல் ஆகும்.

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பணநிரம்பல் வகைப்பாடுகளாக M1, M2, M2h, M4 என்பன காணப்படுகின்றன. 

இதில் M1; எனப்படுகின்ற குறுகிய பணநிரம்பலானது பொது மக்கள் வசமுள்ள தாள் உலோக நாணயங்களுடன் வணிக வங்கிகளில் பொதுமக்களின் பெயரில் பேணப்படுகின்ற கேள்வி வைப்புக்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது (Mi = கையிலுள்ள தாள் குற்றி நாணயங்கள் + கேள்வி வைப்புக்கள்).

அதைத்தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட M2 எனப்படுகின்ற விரிந்த பணநிரம்பலானது குறுகிய பணநிரம்பல் M₁ உடன் வணிக வங்கிகளில் பொதுமக்களின் பெயரில் வைப்புச் செய்யப்படுகின்ற தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது (M2 = M1
சேமிப்பு வைப்புக்கள் + தவணை வைப்புக்கள் )

இலங்கையின் பணநிரம்பலில் 1998 ஜனவரி மாதத்திலிருந்து M2 பனநிரம்பலின் மற்றுமொரு விரிவாக்கமாக M26 ஆனது அறிமுகம்செய்து வைக்கப்பட்டது. சீராக்கம்செய்யப்பட்ட விரிந்த பணநிரம்பலான M26 ஆனது வங்கிகளில் அந்நியச் செலாவணி வடிவில் வைப்புச்செய்யப்படுகின்ற வெளிநாட்டு வங்கிப் பிரிவுகளும் முக்கியம்பெறத் தொடங்கியதைத் தொடர்ந்து அறிமுகம்செய்து வைக்கப்பட்ட பணநிரம்பல் வகைப்பாடாகும். இது M2 உடன் வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிலுள்ள தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்களையும் (TSDNRFC), வெளிநாட்டு நாணய வங்கிப் பிரிவிலுள்ள உள்நாட்டவரின் வைப்புக்கள் அல்லது வதிவுள்ளோரின் வைப்புக்களையும் (RDFCBU) உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது (M2, = M2 +TSDNRFC+ RDFCBU).

மேலும் M4 எனப்படுகின்ற அதிவிரிந்த பணநிரம்பலானது 2000 ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பணநிரம்பல் வகைப்பாடாகக் காணப்படுகிறது. இது இலங்கையில் வங்கியல்லா நிதிநிறுவனங்கள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பு வங்கிகளில் உள்ள தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்களும் இலங்கையின் பணநிரம்பலில் செல்வாக்குச் செலுத்தியதைத் தொடர்ந்து M2, உடன் இவற்றையும் உள்ளடக்கி M4 என்ற அதிவிரிந்த பணநிரம்பலானது கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது 1950 - 1980 வரை குறுகிய பணநிரம்பலைக் (M1) கணிப்பிட்டு அதனைப் பயன்படுத்தியதோடு அதன் பின்னர் இதற்கு மேலதிகமாக விரிந்த பணநிரம்பலையும் (M2), 1998 இல் இருந்து ஒன்றுதிரட்டப்பட்ட விரிந்த பணநிரம்பலையும் (M26) கணிப்பிட்டு பயன்படுத்தியுள்ளது. 2000 ஆம் ஆண்டிலிருந்து அதிவிரிந்த பணநிரம்பலையும் (M4) பயன்படுத்தி வருகிறது. தற்போது இவை அனைத்தும் பயன்பாட்டில் உள்ளன.

பணநிரம்பலைத் தீர்மானிக்கும் காரணிகள்

ஒரு நாட்டின் பணநிரம்பலை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. இக்காரணிகளில் மத்திய வங்கியின் சொத்துக்கள் பிரதான இடம் வகிக்கின்றன.

  1. மத்திய வங்கியின் உள்நாட்டுச் சொத்துக்களின் அளவு மத்திய பிணைகள் வங்கியின் அதிகரிக்கும் உள்நாட்டுச் சொத்துக்களாக அரசாங்கப் காணப்படுகின்றன. உள்நாட்டுச் சொத்துக்கள் போது பணநிரம்பல் அதிகரிக்கிறது. மாறாக உள்நாட்டுச் சொத்துக்கள் வீழ்ச்சியடையும் போது பணநிரம்பலானது குறைவடைகிறது.

அதாவது வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மத்திய வங்கியிடம் இருந்து கடன் பெறுகின்றது. மத்திய வங்கியால் அரசுக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் அளவு அதிகரிக்கும் போது அரச பிணைகளின் நிரம்பல் அதிகரித்து பணநிரம்பல் அதிகரிக்கிறது. மாறாக வழங்கப்படுகின்ற கொடுகடனின் பணநிரம்பல் குறைகின்றது. அளவு குறையும் போது

  1. மத்திய வங்கியின் வெளிநாட்டுச் சொத்துக்கள்

மத்திய வங்கிக்குச் சொந்தமான வெளிநாட்டுச் அதிகரிக்கும் போது பணநிரம்பல் இச்சொத்துக்கள் வீழ்ச்சியடையும்

சொத்துக்கள் அதிகரிக்கிறது. மாறாக போது பணநிரம்பல் வீழ்ச்சியடைகிறது. வெளிநாட்டுச் சொத்துக்கள் ஒதுக்கங்களாகப் பேணப்படலாம். SDR, EURO, US எனப் பல்வேறு வடிவங்களில் சர்வதேச நாடுகளில் காணப்படலாம். சென்மதி நிலுவை மிகை நிலையடையும் போது ஒதுக்கங்களின் அளவு அதிகரிக்கிறது. இது பணநிரம்பலை அதிகரிக்கிறது. மாறாக சென்மதி நிலுவை பற்றாக்குறையாகக் காணப்படும் போது ஒதுக்கங்களின் அளவு குறைவடைகிறது. இது பணநிரம்பலை குறைவடையச் செய்யலாம்.

இருப்பினும் இவை நிச்சயமாக நிகழுமா? என்பது தீர்மானிக்கும் ஏனைய காரணிகளில் தங்கியுள்ளது.

  1. உள்நாட்டில் காணப்படும் கடன்கள் உள்நாட்டில் வர்த்தக வங்கிகள் தனியார் துறைக்கு கடன் வழங்கும் போது பணவாக்கம் ஏற்பட்டு பணநிரம்பல் அதிகரிக்கிறது. மாறாக தனியார் துறைக்கு கடன் கட்டுப்படுத்தப்படும் போது பணவாக்கம் குறைந்து பணநிரம்பல் குறைகின்றது. இதே போன்று அரசாங்கம் வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறும் போது பணநிரம்பல் அதிகரிக்கிறது. மாறாக கடன் பெறும் அளவு குறையும் போது பணநிரம்பல் குறைகின்றது.

  1. அரசின் கையிருப்பிலுள்ள காசு இருப்பின் அளவு அரசின் காசுக் கையிருப்பு மட்டம் அதிகரிக்கும் போது மத்திய வங்கி சட்டப் பணத்தை வெளியீடு செய்ய வேண்டிய தேவை இருக்காது. இது பணநிரம்பல் ஏற்படுகின்ற அதிகரிப்பை கட்டுப்படுத்துகிறது.. மாறாக காசுக் கையிருப்பு மட்டம் குறைவடையும் போது சட்டப் பண வெளியீட்டை அதிகரிப்பதனூடாக பணநிரம்பல் அதிகரிக்கின்றது.

  1. பாதீட்டுப் பற்றாக்குறைக்கான நிதியீட்டம் மூலாதாரம். அரசாங்கம், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை அதிகரிக்கும் போது அப் பற்றாக் குறையை நிதியீட்டம் செய்வதற்காக கடன்பெறும் மூலகங்களினூடாகவும் பணநிரம்பலானது அதிகரிக்கிறது.

  1. மத்திய வங்கியினால் வர்த்தக வங்கி மீது மேற்கொள்ளப்படும் கடன் கட்டுப்பாடுகள் மத்திய வங்கியானது வர்த்தக வங்கி மீது கடன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கையாளும் போது வணிக வங்கிகளின் கடனாக்கம் குறைந்து பணநிரம்பலானது குறைவடையும். மாறாகக் கடன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தளர்த்தும் போது வணிக வங்கிகளின் கடனாக்கம் அதிகரிக்கும். அதிகரித்து பணநிரம்பலானது

  1. சென்மதி நிலுவையின் திரண்ட நிலுவை சென்மதி நிலுவையின் திரண்ட நிலுவை

சென்மதி நிலுவையின் திரண்ட நிலுவையானது பணநிரம்பலில் செல்வாக்குச் செலுத்துகிறது. இருப்பினும் குறித்த நாட்டின் நாணயமாற்று வீத ஒழுங்குமுறைக்கு ஏற்ப செல்வாக்கின் தன்மை வேறுபடும்.

பணநிரம்பல் அதிகரிப்பதனால் ஏற்படுகின்ற விளைவுகள்

இலங்கையில் சட்டப்பணத்தை வெளியிடும் அதிகாரமுள்ள தலையாய நிதிநிறுவனமான இலங்கை மத்தியவங்கி விரிவாக்க விளைவு கொண்ட நாணயக் கொள்ளையை (Expansion Monitory Policy) கடைப்பிடிக்கின்ற போது அதன் காரணமாக நாட்டின் பணநிரம்பலானது அதிகரிக்கிறது.மேலும் அரசாங்கத்திடம் காசுக்கையிருப்பு மட்டம் குறைவாகக் காணப்படும் சந்தர்ப்பத்தில் மத்தியவங்கியானது உள்நாட்டு வெளிநாட்டுச் சொத்துக்களை பிணையாகக் கொண்டு நம்பிக்கை நாணயத்தை வெளியிடும் போதும், பாதீட்டுப் பற்றாக்குறையை நிதியீட்டம் செய்வதற்காக பணவீக்கத்தில் விரிவுத் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய உள்நாட்டு வங்கித்துறை சார்ந்த மூலகங்கள் மற்றும் வெளிநாட்டு நிதிசார் கடன்களைப் பெறும் போதும் மற்றும் மத்தியவங்கியின் சட்டப் பண வெளியீட்டின் அளவு அதிகரிக்கும் போதும் நாட்டின் பணநிரம்பலானது அதிகரிக்கலாம்.

இவ்வாறு பணநிரம்பலில் அதிகரிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கியானது விரிவாக்க விளைவுகொண்ட நாணயக் கொள்கையை பின்பற்றும் போது அதன் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற பணநிரம்பல் அதிகரிப்பானது ஒரு பொருளாதாரத்தில் குறுங்காலரீதியிலும் நீண்டகால அடிப்படையிலும் பல சாதகமான பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கக்கூடும்.

ஒரு நாட்டில் பணநிரம்பலானது அதிகரிக்கும் போது பணக்கேள்வி மாறாத நிலையில் வட்டிவீதமானது வீழ்ச்சியடையும். இவ்வாறு பணநிரம்பல் அதிகரிப்பதனால் வட்டிவீதத்தில் ஏற்படுகின்ற வீழ்ச்சியானது பணநிரம்பல் அதிகரிப்பதனால் ஏற்படுகின்ற குறுங்கால விளைவாகக் காணப்படுகிறது. இவ்வட்டிவீத வீழ்ச்சி தனியார் துறையினரின் முதலீட்டுக்கான செலவைக் குறைப்பதனால் தனியார் துறையினரின் முதலீட்டைத் தூண்டுகிறது. இதனால் பொருளாதாரத்தில் தனியார் துறையினரின் முதலீடுகள் அதிகரிக்கும்.

இவ் முதலீட்டில் ஏற்படும் அதிகரிப்பு மொத்தக் கேள்வியை அதிகரித்து உற்பத்தி, வருமானம், வேலைவாய்ப்பை அதிகரிக்கலாம்.

இவ்வாறு பணக்கேள்வி மாறாத நிலையில் பணநிரம்பலில் ஏற்படுகின்ற அதிகரிப்பினால் வட்டிவீதம் வீழ்ச்சியடைகின்ற தன்மையை (பணநிரம்பல் அதிகரிப்பதன் குறுங்கால விளைவு) பின்வரும் வரைப்படம் மூலம் விளக்கலாம்.  • வரைபடம் : பணநிரம்பல் அதிகரிப்பதன் குறுங்கால விளைவு

பண நிரம்பலில் ஏற்படும் அதிகரிப்பு பொருளாதார முயற்சிகளில் தனியார் துறையை முதலீடு செய்யத் தூண்டுவதனூடாக நாட்டில் மூல வளங்களில் பயன்பாடு அதிகரிக்கிறது. இதனால் பொருளாதாரத்தில் வெளியீட்டு மட்டம் அதிகரிக்கும். அதாவது ஒரு நாட்டின் பணநிரம்பலானது அதிகரிக்கும் போது அதேயளவால் நாட்டின் பெயரளவு வெளியீட்டு மட்டம் (Nominal output) அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அதிகரிக்கும். இதுபணநிரம்பல் அதிகரிப்பினால் குறுங்காலத்தில் ஏற்படுகின்ற சாதகமான விளைவாகக்காணப்படுகிறது.

இவ்வாறு பணநிரம்பல் ஏற்படுகின்ற அதிகரிப்பு உற்பத்தியை அல்லது நிரம்பலை அதிகரிக்கச் செய்யுமாயின் இதனால் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புக்கள் அதிகரித்து மக்களுடையவருமான மட்டம் அதிகரிப்பதோடு அவர்களுடைய கொள்வனவாற்றல் அதிகரித்து அவர்களின் வாழ்க்ககைத்தரமும்உயரும். அதுமட்டுமல்லாமல் பணநிரம்பல் அதிகரிப்பால் மக்களுடைய வருமான மட்டம் அதிகரிக்கும் போது அவர்களுடைய சேமிப்பு ஆற்றலும் அதிகரிக்கும். இதனால் பொருளாதாரத்தில் சேமிப்பும் அதிகரிக்கும்.

அதுமட்டுமல்லாமல் இப்பணநிரம்பலில் ஏற்படும் அதிகரிப்பு உற்பத்தியாளரின் இலாபத்தையும் அதிகரிக்கின்றது. அதாவது பணநிரம்பல் அதிகரிக்கும் போது மக்களுடைய வருமான மட்டம் மற்றும் கொள்வனவாற்றல் அதிகரித்து பொருட்கள் சேவைகளுக்கான கேள்வியில் அதிகரிப்பை ஏற்படுத்துவதால் பொருட்களின் விலைமட்டங்கள் உயர்வடைந்து உற்பத்தியாளர்களின் உற்பத்தி ஆர்வத்தை அதிகரிக்கிறது. இவ்வாறு பொருட்களின் விலை மட்டங்கள் உயரும் போது அதே விகிதாசாரத்தில் இருப்புக்களின் அளவும் அதிகரிக்கும். இதனூடாக உற்பத்தியாளர்களின் வருமானம் அதிகரிக்கும். எனவேபணநிரம்பல் அதிகரிப்பால் பொருட்கள் சேவைகளின் விலைமட்டங்கள் உயர்வடைந்து பணவீக்கம் ஏற்பட்டாலும் அது உற்பத்தியாளருக்கு கிடைக்கின்ற இலாபத்தை அதிகரிக்கச்செய்கிறது.

மேலும் பணவீக்கத்தின் போது பொருட்களின் விலை அதிகரிப்பதைப் போன்று மூலப்பொருட்கள் மற்றும் உள்ளீடுகளின் விலைகள் உடனடியாக அதிகரிக்கும் எனக் கூறமுடியாது. இதனால் உற்பத்தியாளர்களின் உற்பத்திச் செலவு குறைவடையும். எனவே உற்பத்தியாளர்களின் இலாபம் அதிகரிக்கிறது. மேலும் வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் அதிக இலாபம் உழைப்பதால் அரசின் வரிவருமானம் அதிகரிக்கும்.

மேலும் பணநிரம்பல் அதிகரிப்பதனால் பொருட்கள் சேவைகளுக்கான கேள்வி உயர்வடைந்து பொதுவிலைமட்டம் பொருளாதாரத்தில் சாதகமான விளைவுகளும் ஏற்படும்.

அதிகரித்து பணவீக்கம் ஏற்பட்டாலும், இப்பணவீக்கத்தினால் இவ்விளைவுகளும் பணநிரம்பல் அதிகரிப்பதன் சாதகமான விளைவுகளுள் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது. இப்பணநிரம்பல் அதிகரிப்பால் நீண்டகாலத்தில் பொதுவிலைமட்டம் உயர்வடைந்து பணவீக்கம் ஏற்பட்டாலும் இது கடன்பெற்றோருக்கு சாதகமாக அமைகிறது. இதனால் கடன்பட்டோர் நன்மை அடைவர். அதாவது பணவீக்க காலங்களில் பணத்தின் பெறுமதியானது தொடர்ந்து வீழ்ச்சியடைவதனால் கடன்பட்டோரின் கடன்சுமையானது குறைக்கப்படுகிறது.

மேலும் குறுங்காலத்தில் பணக்கேள்வி மாறாத நிலையில் பணநிரம்பல் அதிகரித்து வட்டி வீதம் வீழ்ச்சியடைவதனால் தனியார் துறையினரின் முதலீடுகள் அதிகரிக்கும். இதனால் பொருளாதாரத்தில் உற்பத்தி (GDP) அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும், பணநிரம்பலில் ஏற்படும் அதிகரிப்பு செயலிழந்து இருக்கும் பொருளாதார முயற்சிகளை சிறப்பாகச் செயலாற்றத் தூண்டுகிறது. மற்றும் பணநிரம்பலில் ஏற்படுகின்ற அதிகரிப்பு பொருளாதாரத்தை உறுதிப்படுத்துகின்றது.

இது குறுங்காலத்தில் பணக்கேள்வி மாறாத நிலையில் பணநிரம்பல்  அதிகரிப்பதனால் ஏற்படுகின்ற சாதகமான விளைவுகளாகக் காணப்படுகின்றன.இங்கு குறுங்காலம் (Short run) எனப்படுவது பணநிரம்பலில் ஏற்படுகின்ற அதிகரிப்பு பொதுவிலைமட்ட அதிகரிப்பில் தாக்கம் செலுத்துவதற்கு முன்னுள்ள காலமாகும். இது குறுங்காலத்தில் பணநிரம்பல் அதிகரிக்கும் போது பொதுவிலை மட்டம் மாறாமல் நிலையாகக் காணப்படும் என எடுகோள் கொள்ளப்படுகிறது. எனவே பணநிரம்பல் அதிகரிப்பதனால் ஏற்படுகின்ற குறுங்கால விளைவு பற்றி நோக்கின் அது பணக்கேள்வி மாறாத நிலையில் பணநிரம்பல் அதிகரித்து வட்டிவீத வீழ்ச்சியினால் ஏற்படுகின்ற சாதகமான விளைவுகளை மேற்கண்டவாறு குறித்து நிற்கிறது.

மாறாக பணநிரம்பலில் ஏற்படுகின்ற அதிகரிப்பு பொதுவிலைமட்ட அதிகரிப்பை ஏற்படுத்துமாயின் அது பணநிரம்பலில் அதிகரிப்பால் ஏற்படுகின்ற நீண்டகால விளைவாகக் காணப்படும் (Money supply and Long-run prices). பணநிரம்பலில் ஏற்படுகின்ற அதிகரிப்பு பொருட்கள் சேவைகளுக்கான கேள்வியில் மட்டும் அதிகரிப்பை ஏற்படுத்தும் அதேவேளை பொருட்கள் செவைகளின் உற்பத்தியில் அல்லது நிரம்பலில் அதிகரிப்பை ஏற்படுத்தாது இருப்பின் நாட்டில் பணவீக்கம் ஏற்படும். அதாவது பணநிரம்பலில் ஏற்படுகின்ற அதிகரிப்பால் தனியார் துறையினரின் நுகர்வு ஆற்றல் அதிகரிப்பதால் பொருட்கள் சேவைகளுக்கான கேள்வி அதிகரிக்கும். ஆனால் பொருட்கள் சேவைகளின் நிரம்பல் மாறாத போது வெறுமனெ கேள்வியில் ஏற்படும் அதிகரிப்பு அப்பொருட்கள் சேவைகளுக்கான விலையை அதிகரிக்கும். இவ்விலை அதிகரிப்பு பணவீக்கத்தை ஏற்படுத்தும். இதுவே நீண்டகாலத்தில் பணநிரம்பல்

அதிகரிப்பதனால் ஏற்படுகின்ற முக்கியமான பாதக விளைவாகும். பாதகமான பொருளாதார விளைவுகள் அனைத்தும் பணநிரம்பல் அதிகரிப்பதனால் (நீண்டகாலத்தில்) ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளாகக் காணப்படும்.

அந்த வகையில் பணநிரம்பல் அதிகரிப்பு பணவீக்கத்தை ஏற்படுத்துமாயின் பொருட்கள் சேவைகளின் விலை அதிகரித்து மக்களின் மெய்வருமானம் அதாவது பண வுருமானத்தைக் கொண்டு கொள்வனவு செய்யக்கூடிய பொருட்கள் சேவைகளின் அளவு குறைவடைந்து மக்களுடைய நுகர்வு ஆற்றல் ஆற்றல் பாதிக்கப்படும். இதனால் அவர்களுடைய வாழ்க்ககைத்தரம் வீழ்ச்சியடையும்.

இப்பணவீக்கத்தினால் பணத்தின் உள்நாட்டுப் பெறுமதியும் வீழ்ச்சியடையும். அதாவது பணநிரம்பில் ஏற்படுகின்ற அதிகரிப்பு காரணமாக உள்நாட்டில் பணவீக்கம் ஏற்படும் போது பணத்தின் உள்நாட்டுப் பெறுமதி தேய்வடைவதோடு பணத்தின் வெளிநாட்டுப் பெறுமதியான வெளிநாட்டு நாணயயமாற்று வீதமும் தேய்வடையும். இதனால் பொருளாதாரம் உறுதியற்றுக் காணப்படும்.

மேலும் பணநிரம்பல் அதிகரிப்பதால் ஒரு நாட்டில் பணவீக்கம் ஏற்படும் போது அது நிலையான வருமானம் உழைப்போருக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் நிலையான சம்பளம் உழைக்கின்ற மக்களான அரசாங்க ஊழியர்கள் கெடுதியை அனுபவிப்பர். அதாவது பணவீக்க காலங்களில் பொருட்கள் சேவைகளின் விலைமட்டம் அதிகரிப்பதனால் மக்களுடைய வாழ்க்ககைச் செலவுகள் அதிகரிக்கிறது. இருந்தபோதிலும் அதற்கேற்ப நிலையான வருமானம் உழைக்கின்றவர்களின் சம்பளமட்டம் அதிகரிப்பதில்லை. இதனால் சம்பள அதிகரிப்பு  அற்ற நிலையில் பொருட்கள் சேவைகளின் விலை அதிகரிப்பானது அவர்களுடைய கொள்வனவாற்றலை குறைவடையச் செய்வதால் அவர்களின் வாழ்க்ககைத் தரம் பாதிக்கப்படும். ஓய்வூதியம் பெறுவோர், வாடகை பெறுவோருக்கும் இது தீங்காக அமையும்.

மேலும் பணநிரம்பல் அதிகரிப்பதனால் ஏற்படுகின்ற பணவீக்கத்தால் விவசாயத் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர். அதாவது அவர்களின் கூலிகளும் விலைமட்ட அதிகரிப்புக்கேற்ப உடனடியாக அதிகரிக்கப்படுவதில்லை. இதனால் அவர்களின் கொள்வனவு சக்தி குறைவடைந்து அவர்களுடைய வாழ்க்கைத்தரம் குறைவடைவதால் அவர்களிடையே வறுமை நிலை அதிகரிக்கும்.

மேலும் பணநிரம்பலில் ஏற்படுகின்ற அதிகரிப்பால் பணவீக்கம் ஏற்படும் போது அது மக்களிடையே வருமான செல்வப்பகிரவில் ஏற்றத்தாழ்வினை ஏற்படுத்தும். அதாவது நிலையான வருமானம் பெறுகின்ற நடுத்தர வறிய மக்களின் கொள்வனவு ஆற்றல் குறைந்து அதனூடாக அவர்கள் பாதிக்கப்படுவர். மாறாக வர்த்தகர்கள் அதிக இலாபம் உழைப்பர். எனவே பணவீக்கமானது வறியவர்களை மேலும் வறிய நிலைக்கும் பணக்காரரை மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்கிறது.

மற்றும் பணநிரம்பலில் ஏற்படுகின்ற அதிகரிப்பால் பணவீக்கம் ஏற்படும் போது அது கடன் கொடுத்தோருக்கு தீமையாக அமையும். அதாவது பணவீக்க காலங்களில் பணத்தின் பெறுமதியானது தொடர்ந்து வீழ்ச்சியடைவதால் கடன் கொடுத்தோர் அதேயளவான பணத்தினை கடன்பட்டோரிடமிருந்து மீளப்பெற்றாலும் அதன் பெறுமதியானது பணவீக்க காலங்களில் குறைவடைந்து காணப்படுவதனால் கடன் கொடுத்தோருக்கு தீமையாக அமையும். 

மேலும் பணநிரம்பலில் ஏற்படுகின்ற அதிகரிப்பால் பணவீக்கம் ஏற்படும் போது தோற்றுவிக்கும். அது அதாவது சென்மதிநிலுவைப் பிரச்சினையை ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிப்பதனால் நாட்டின் சென்மதி நிலுவை பாதிக்கப்படும். பணவீக்கம் காரணமாக வெளிநாட்டுப் பொருட்களின் விலைகளை விட பணவீக்கத்தினால் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படும் போது இறக்குமதி அதிகரிப்பதுடன் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி குறைவடைந்து ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடையும். எனவே இந்நிலை சென்மதி நிலுவையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் பணநிரம்பலில் ஏற்படுகின்ற அதிகரிப்பால் நீண்டகாலத்தில் பணத்துக்கான கேள்வி அதிகரித்து பொதுவிலைமட்டம் உயர்ந்து பணவீக்கம் ஏற்படும் போது அது மக்களுடைய வாழ்க்ககைச் செலவை அதிகரிக்கும். இதனால் மக்களுடைய சேமிப்பு குறைவடையும். அதாவது நாட்டில் உயர்ந்தமட்ட பணவீக்கம் நிலவும் போது மெய்வட்டிவீதம் எதிர்க்கணியமாக காணப்படும். அதாவது பணவட்டிவீதத்தைவிட பணவீக்கவீதம் பணவீக்கவீதம் உயர்வாகக் காணப்படும் போது மக்கள் தமது பணத்தினை சேமிக்க விரும்பமாட்டார்கள். இதனால் உயர்ந்த மட்ட பணவீக்கமானது பொருளாதாரத்தில் சேமிப்பு முதலீடுகளை பாதிக்கும்.

மேலும் பணநிரம்பல் அதிகரிப்பால் உயர்ந்த மட்ட பணவீக்கம் ஏற்படும் போது நாட்டு மக்களுக்கு உள்நாட்டுப் பணத்தின் மீதுள்ள நம்பிக்கை அற்றுப் போகும். மேலும் பணவீக்கத்தின் விளைவாக பணத்தின் உள்நாட்டுப் பெறுமதி தொடர்ந்து தேய்வடைவதால் மக்கள் பணத்தை பணமாக வைத்திருக்க விரும்பாது தங்கநகை, நிலம் போன்ற நிலையான சொத்துக்களில் முதலீடு செய்வர். 

இதனால் பொருளாதாரத்தில் தேசிய உற்பத்திக்கு பங்களிப்புச் செய்யாத முறையற்ற முதலீடுகள் அதிகரித்து பொருளாதார செயற்றிறனின்மை உருவாகும். மேலும் பணநிரம்பல் அதிகரிப்பால் பணவீக்கம் ஏற்படும் போது துறைக்குத் துறை வேறுபாடு நிலவுவதால் பொருளாதார செயற்றிறனின்மை அதிகரிக்கும்.

மேலும் ஒரு நாட்டின் பணநிரம்பல் அதிகரிப்பு பணவீக்கத்தை ஏற்படுகின்றமையால் பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற இவ் ஒட்டுமொத்த பாதகமான விளைவுகளும் சேர்ந்து நாட்டின் பேரினப் பொருளாதார உறுதிப்பாட்டை சீர்குலைக்கும். இதனால் நீண்ட காலத்தில் பணநிரம்பல் அதிகரிப்பதனால் பணவீக்கம் ஏற்படும் போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி பாதிக்கப்படுவதோடு பொருளாதார உறுதிப்பாடும் சீர்குலையும்.

மேலும் ஒரு நாட்டில் பணநிரம்பலானது தொடர்ந்து அதிகரிக்கும் போது வட்டிவீதம் வீழ்ச்சியடைவதனால் இது திரவபொறிநிலைக்கு (Liquidty trap) இட்டுச் செல்லலாம். திரவப்பொறிநிலை என்பது பணச்சந்தையில் வட்டிவீதமானது ஆகக் குறைந்த நிலையில் காணப்படும் போது பணத்துக்கான கேள்வியானது உயர்ந்த மட்டத்தில் எல்லையற்றதாகவும் முடிவிலியாகவும் காணப்படுவதைக் குறித்து நிற்கிறது. இது பொருளாதாரத்தில் பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் பிணைகள், முறிகள் நிதிச்சொத்துக்கள் மீது விரும்பமாட்டார்கள். போன்ற நிதிச்சந்தை ஆவணங்கள், மக்கள் முதலீடு செய்ய

இவ்வாறு ஒரு நாட்டின் பணநிரம்பலில் ஏற்படுகின்ற அதிகரிப்பானது குறுங்காலத்திலும், நீண்டகாலத்திலும் பல சாதகமான, பாதகமான விளைவுகளை தோற்றுவிக்கும். இருப்பினும் இப்பணநிரம்பலில் ஏற்படுகின்ற அதிகரிப்பின் போது பொருட்கள் சேவைகளின் நிரம்பல் அதிகரிக்காது, கேள்வியில் மட்டும் அதிகரிப்பு ஏற்பட்டு பணவீக்கம் ஏற்படும் போதே பணநிரம்பல் அதிகரிப்பால் நீண்டகாலத்தில் பாதகமான விளைவுகள் தோன்றுகின்றன. இப்பணநிரம்பல் அதிகரிப்பால் பணவீக்கம் ஏற்பட்டு எமது நாட்டின் பேரினப் பொருளாதார உறுதிப்பாடு பாதிக்கப்படும் போதே இலங்கை மத்திய வங்கி மிகவும் இறுக்கமான நாணயக்கொள்கையை கடைப்பிடித்து பணநிரம்பலைக் கட்டுப்படுத்தி பேரினப் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்த முனைகிறது.