800 | Muthiah Muralidaran’s Unknown Story | பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் ‘800’ திரைப்படத்தின் பெஸ்ட் லுக் வெளியானது

800 Movie First Look

800 | Muthiah Muralidaran’s Unknown Story | பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்  ‘800’ திரைப்படத்தின் பெஸ்ட் லுக் வெளியானது

 


இலங்கையின் கிரிக்கெட் சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரனை தெரியாமல் யாரும் இருக்க முடியாது ஏன் என்றால் இவர் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனைகளை புரிந்தவர்.இதுவரை இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய ஒரேயொரு தமிழ் பேசும் வீரர் . 

 ஆவுஸ்ரேலிய வீரரான ஷேன்வோனின் சாதனையை முறியடித்து சர்வதேச ரீதியில் நமது நாட்டை தலைநிமிர வைத்த முத்தையா முரளிதரனின் பிறந்த தினத்தையொட்டி இன்றைய தினம் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு "800" திரைப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது 

Read Also : Kollywood news

இத்திரைப்படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி
இயக்குகின்றார். இவர் இதற்கு முன்
கனிமொழி என்ற திரைப்படத்தை இயக்கி கலைவையான விமர்சனத்தை பெற்றது குறிப்பிடதக்கது.

"மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் "
என்ற தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வெளியீடு செய்கின்றனது.
இதில் இசை அமைப்பாளராக ஜிப்ரான் இசை அமைத்து வருகிறார். 

இதில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடிக்கிறார்.
இதற்கு முன் இத்திரைப்படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு ஒப்பந்தமாகி சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தென்னிந்தியாவில் முரளிதரனுக்கு எதிராகவும் இத் திரைப்படத்திற்கு எதிராகவும் எதிர்ப்புக்கள் அதிகமாக ஏன் இத்திரைப்படத்தில் நடித்திருந்தால் விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கைக்கே ஆபத்து வரும் அளவிற்கு சர்ச்சைகள் மேலோங்கியதால் இத்திரைப்படத்தில் இருந்து தான் ஒதுக்குவதாக தனது டியூட்டர் வலைத்தளத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது எல்லோரும் அறிந்த விடயமே ஆகும். 

மேலும் இதில் மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹிதாஷ்வா போன்ற முக்கிய திரைநட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது

இப் படத்தின் படப்பிடிப்பு இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு தற்போது இதன் சூட்டிங்  முடிவடைந்துள்ளது.

‘800’ திரைப்படம் உலகளவில் 
 தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.